
பிறப்பினாலோ அல்லது சமூக பந்தத்தினாலோ ஒரு உறவு அமைந்துவிட்டால் அது பாதிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்று நினைப்பது தவறு. கணவனோ, மனைவியோ, தாயோ, தந்தையோ எந்த உறவாக இருந்தாலும் அது இரும்புக் கவசம் அணிந்திருப்பதில்லை. உறவு என்பது மிக அழகான கண்ணாடி ஜாதியைப் போன்றது. அதை எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் அதன் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது.
பிரச்னைகளை நாமே உருவாக்கிவிட்டு அவற்றுக்குத் தீர்வு தேடி அலைகிறோம். எப்போதும் உங்கள் எண்ணத்திற்கேற்ப மற்றவரை மாற்ற வேண்டும் என நினைப்பது சரியல்ல. நீங்கள் என்ன செய்தாலும் அதையெல்லாம் தாண்டி எப்படிப்பட்ட உறவும் நிலைத்து நிற்கும் என்ற உத்தரவாதம் இல்லை. சில உறவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம்" நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை" என்று உணர்ந்தவர்கள் கூட ஏதோ காரணத்தால் பிரிய நேரிடும். அப்படிப் பிரிந்து இருப்பது சேர்ந்திருப்பதைவிட நிம்மதி தரும் என்பதை அவர்கள் உணர்ந்து விட்டால், எதற்கு மறுபடியும் தலைவலி என்று ஒதுங்கி இருக்கத்தான் நினைப்பார்கள்.
உங்கள் நண்பர் எதோ ஒரு ஆதாயத்துக்காக உங்களுடன் நட்பு பாராட்டி, ஆதாயம் கிடைத்ததும் பிரிவிற்கான சநதர்ப்பத்திற்காக காத்திருக்கலாம். ஒவ்வோர் உறவிலும், நடபிலும் ஏமாற்றத்தை சரிப்படுத்த வேண்டும் என நினைக்கலாம். ஆனால் அத்தனை பேர்களும் சரி செய்யக்கூடியவர்களாக இருப்பதில்லை. இந்த உண்மையை நீங்கள் உணரவேண்டும் நண்பருடைய உறவு முகிகியமாகத். தெரிந்தால் நீங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். அவருக்கு அவகாசம் கொடுங்கள். அவருக்கு எந்த இடைவெளியை யும் கொடுக்காமல் மேலும் மேலும் வற்புறுத்தினால் அது மேலும் எரிச்சலைப் கிளப்பும்.
உங்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கும் அளவுக்கு நீங்கள் நடந்து கொண்டு இருக்கிறீர்களா என்பதை யோசியுங்கள். சாராயத்துக்கு அடிமையான ஒருவனை அவன் நண்பன் இப்படி குடித்தால் உன்னுடைய உடல் கெட்டுவிடும். இப்படியே போனால் சீக்கிரம் உன் கதை முடிந்துவிடும் என்று பயமுறுத்தி திருத்தினான்.
நண்பன் மீது எவ்வளவு நம்பிக்கை. இருந்தால் இப்படி அவன் செய்திருப்பான். உங்கள் நண்பனிடம் மட்டுமல்ல. நீங்கள் சந்திக்கும் அத்தனை பேரிடமும் அப்படி ஒரு நம்பிக்கையை நிலை நாட்டும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள். ஏதோ ஒன்றை சாதிக்க மட்டுமே அப்படிச் செய்யாமல் அதுவே உங்கள் குணநலனாக மாற்றிக் கொள்ளுங்கள். இது நேராதவரை உங்களால் அத்புதமான உறவுகளை அமைத்துக்கொள்ள முடியாது.