
பொதுவாக தனது கடமையில் பின்வாங்கி விடுகிறவர்கள்தான் வாழ்க்கையில் தோல்வி அடைகிறார்கள். காரணம், இவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி அடையவேண்டும் என்கிற தீவிரம் இருப்பதில்லை. எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஆசைதான் இவர்களுக்கும் இருக்கும்.
ஆசையை நிறைவேற்றிக் கொள்ளத்தான். அறிவு, ஆற்றல், இடைவிடா முயற்சி எல்லாம் தேவையாக இருக்கிறது.
சோம்பல் மனம் கொண்டவர்களுக்கும் இவ்வாறே எதிர்காலக் கனவு உண்டு. ஆனால் அது வெறும் கனவுதான். நடைமுறையில் செயல்படுத்தத் திராணி இல்லாத கனவு. இவர்களுக்கு எதையும் யாராவது கையில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். வாழைப் பழத்தைக் கூடஉரித்துக் கொடுத்தால்தான் சாப்பிடுவார்கள்.
காரணம், மனஉறுதி அற்றவர்கள்அறிவுக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால் அந்த அறிவு எல்லாம் அடுத்தவர் களுக்கு ஆலோசனை சொல்லவும் வழிவகை கூறவும் தான் பயன்படுத்துவார்கள்.தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தமாட்டார்கள்.
இவர்கள் அறிவைப் பெற்று யாராவது பயன் அடைந்தால், அதில் பங்கு கேட்பார்கள். இல்லாவிட்டால், 'இனி உனக்கு நான் பயன்படமாட்டேன்'என்று 'பிகு'பண்ணிக் கொண்டு பின் தூங்குவார்கள்.
ஆனால் செயலாற்றல் மிக்கவர்களுக்கு சுய அறிவு கூட இல்லை. அறிவார்ந்தவர்களிடமிருந்து 'யுத்தி' களைப் பெற்றுக்கொண்டு, அதைத் தங்கள் வாழ்வில் செயல்படுத்தி வெற்றி பெற்று விடுவார்கள்.
காரணம், இவர்களிடம் இருக்கும் அசாத்திய கடமை உணர்ச்சி. எத்தகைய பெரிய இடற்பாடுகளையும் மன உறுதியோடும் துணிச்சலோடும் எதிர்கொள்ளுமாறு கடமை உணர்வு ஒருவரை வலுவுள்ளவராக ஆக்குகிறது.
ஒருவர் தனது நோக்கம்,செயல் ஆகியவற்றை நிறைவு செய்வதையே கடமையுணர்வு என்கிறோம்.
துன்பத்தைப் பற்றிய அச்ச உணர்வோ, இன்பத்தைப் பற்றிய எதிர்பார்ப்போ இல்லாமல் சுய அறிவுறுத்தலால் மனம் செயலுக்கம் பெறுகிறது.
அன்பு காரணமாகச் செயலூக்கம் பெறுமாறு உமையுணர்வு வலியுறுத்துகிறது.
தாம் ஏற்றுக்கொண்ட வெவ்வேறான வேலைகளையும் அர்ப்பனிப்பு ஈடுபாட்டுடன் ஆற்றுவதற்கு கடமையுணர்வு காரணமாகிறது.
அது, பொறுப்பற்ற தனத்தையும் சோம்பலையும் விரட்டுகிறது.
தனக்காகவோ, பிறருக்காகவோ, பொது நலனுக்காகவோ ஒரு காரியத்தை செய்து முடிக்குமாறு கடமையுணர்வு உந்துகிறது.
கடமையுணர்வு கொண்டவார்களிடம் சுயகட்டுப்பாடு இருக்கும். அவர்கள் அலுத்து சலித்துக்கொள்ளாமல் குடும்பச் கமைகளைத் தாங்குவார்கள். வீட்டில் முதியவர்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள்.
பொது விதிகளையும், சமுதாய ஒழுங்கு முறைகளையும் மதித்து நடந்து கொள்வார்கள். கூரிய அறிவும், செயல் திறனும் கொண்டிருப்பார்கள்.
பொதுநலக் காரியங்களில் பிறருடன் தங்களையும் இணைத்துக் கொள்வார்கள். ஆகவே, கடமையுணர்வோடு கடமையைச் செய்வோம்.