

நாம் நமது வாழ்வில் அனைத்தையும் கற்றுக்கொண்டு விட்டோமா எனில் ஆம் முழுமையாக கற்றுக் கொண்டுவிட்டேன் என யாராலும் சொல்லமுடியாது.
அது ரயில்வே தண்டவாளம்போல நீண்டு கொண்டேதான் போகும் (Infinity) அதாவது அனந்தம் என்றே சொல்லலாம். ஆக இறந்து போகும்வரை எதையும் நாம் முழுமையாக கற்றுக்கொள்ள முடியாது. அதனில் நாம் கற்றுக் கொள்ளாத விஷயங்களில் முதன்மையானது கோபம், மற்றும் அதனால் வரும் கடுஞ்சொற்களாகும்.
பொதுவாக சூடாக இருக்கும் ஒரு பொருளை இது சுடும் என தொட்டுப்பாா்த்து நிதானமாக செயல்படு வதில்லையா, அதுபோல நமது வாய்தவறி கோபத்தின் உச்சத்திலிருந்து விழும் சொல்லுக்கு வீாியம் அதிகமாகும். அது விஷத்தை விட கொடுமையானதே ஆகும்.
மேலும் அந்த வாா்த்தையானது கையிலிருந்து தவறி விழும் கண்ணாடியைப் போன்றது, அது மிகவும் கூா்மையானது.
நமது கையை காலை கிழித்து பதம் பாா்ப்பதைவிட எதிா்தரப்பில் இருப்பவரின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்திவிடும்.
கோபப்பட்டு சூடான வாா்த்தைகளை சிதறவிடுவது மிகவும் தவறு என்பதை நினைவில் வைத்திருப்பதே நல்லது.
யாாிடம் பேசுகிறோம் என்பதைவிட, யாாிடம் என்ன பேசுகிறோம் என்பதை உணர்வதே புத்திசாலிக்கு அழகாகும். அதேபோல பொதுவில் யாரையுமே எளிதில் நம்பக்கூடாது.
இதையும் முழுமையாக நாம் கற்றுக்கொள்ளவில்லை. அநேகமாக யாரையும் எளிதில் நம்பமுடியாத அளவிற்கு பலரது மனதில் கல்மிஷம், மற்றும் வஞ்சக எண்ணம் பெருகிவிட்டது.
அந்த அளவிற்கு நட்பு மற்றும் உறவு வட்டங்களில் நம்பகத்தன்மை குறைந்துவிட்டதும் காரணமாகும். பகைவனைக்கூட எளிதில் துணிவுடன் எதிா்கொள்ளலாம் .
ஆனால் இனிக்க பேசி நமக்கு நமக்காகவும் வேறு சிலரிடம் வேறு விதமாக பேசியும் வரும் நயவஞ்சக நபர்களான உறவு மற்றும் நட்பு வட்டங்களை இனங்கண்டு கொள்ளவேண்டும். அதுசமயம் அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதே நல்லதாகும்.
அதனைத்தொடர்ந்து வயது ஆக ஆக பல விஷயங்களில் நாம் கற்றுக்கொள்வதைவிட ஏற்றுக்கொள்ள வேண்டியதே அதிகமாக உள்ளது. அதற்கு நமது வயதும் வயோதிகமும் பொருளாதார சுமையும் அடுத்தவரை சாா்ந்துவாழ்கின்ற நிலையும் ஒரு காரணமாக உள்ளது.
ஆக அந்த நேரத்தில் பக்குவமும் நிதானமும் கடவுள் வழிபாடுமே நமக்கான கவசமாகும். அதேபோல ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டும் எந்த ஒரு உதவி செய்தாலும் பெருமைக்கு ஆசைப்பட்டு கையில் இருப்பதையெல்லாம் அள்ளிக்கொடுத்து விடக்கூடாது, கிள்ளிக்கொடுக்க வேண்டும். ஏனெனில் நமக்கு ஒரு தேவை வரும் நிலையில் யாரும் அள்ளிக்கொடுக்க முன்வரவே மாட்டாா்கள்.
மாறாக நமது ஊதாாித்தனத்தை சுட்டிக்காட்டி ஏளனம் பேசும் உலகம். ஆக இதனில் "உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோா் உறவு கலவாமை வேண்டும்" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்வின் எதாா்த்தம் புாிந்து வாழ்வதே புத்திசாலிக்கு அழகாகும். மேலே குறிப்பிட்ட விஷயங்களை நாம் கடைபிடித்து வாழ்வதே சாலச்சிறந்த ஒன்றாகும்!