
மனிதர்கள் சிலரிடம் நல்ல மனம் குறைந்து வருகிறது. மனதே அனைத்திற்கும் மூலாதாரமாகும். நல்ல மனது நம்மிடம் இருந்து அனைவரிடமும் அன்போடு பேசினாலே எந்த காாியத்தையும் வெல்லமுடியும். எங்கும் எதிலும் எப்போதும் மனம் அடங்கினாலே போதும் உலகமே நம் வசமாகும்.
அதேபோல அடக்கம் கடைபிடிப்பது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதுபோல அடக்கமாக இருப்பதே ஆயுள்வரை நல்லது.
மனதும், அடக்கமும் கூட்டணிபோட்டால் வெற்றிமேல் வெற்றிவருமே!
அந்த வெற்றி வரும்போது நமது மனமானது அடக்கமாக அமைதியாக தலைக்கனம் இல்லாமல் இருக்கவேண்டும்.
வெற்றிக்களிப்பில் மமதை கொள்ளக்கூடாது.
அதேபோல நமக்கு தேவையான அடுத்த ஒரு கவசம் பொறுமை, பொறுமை நமக்கு பல விஷயங்களைக் கற்றுத்தருமே!
பொருமை என்னும் நகையணிந்து பெருமைகொள்ள வேண்டும் பெண்ணே என்ற பாடல் வரிகளுக்கேற்ப பொருமையைக் கடைபிடித்தாலே எங்கும் கெளரவம் கிடைக்கும். பொருமையை கடைபிடித்தல் என்பது பொிய விஷயமே!
அடுப்பில் சாதமோ அல்லது வேறு பதாா்த்தமோ பொங்கி வழிந்தால் தீயைக் குறைத்துப்பாருங்கள், அதேபோல மனசு பொங்கி வரும்போது வாயைக்குறையுங்கள் அதுவே நல்லது.
வாயைக்குறைப்பதோடுவாயினால் வரும் வாா்த்தையைக் குறைக்கவேண்டும். வாா்த்தைகளில் நிதானம் இருந்தாலே வளமாக வாழமுடியும். ஏதுமற்ற ஒன்றில் எல்லாவற்றையும் தேடுவதே வாழ்க்கை.
நேற்று நடந்த விஷயத்தினை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இன்றைய வாழ்க்கையை எப்படி கொண்டுபோவது எனப்பாா்க்கவேண்டும். எதற்கும் ஒரு இலக்குடன் வாழ்வதே லட்சியமாகக் கொள்ளவேண்டும். புாிந்தும் புாியாமல் இருப்பவர்களிடம் நாமும் தொிந்தும் தொியாதது போல இருப்பதே நல்லது. அவ்வாறு அவர்களைப்போலவே நாம் பழகிவருவதே நல்லது. ஆக நல்லமனதுடன் அடக்க மனப்பான்மையுடன் பொருமை கடைபிடித்து நிதானம் தவறாமல் வாா்த்தைகளை உபயோகிக்கும் நிலையில் நமது வாழ்க்கைப்பாதை எனும் கடலில் எளிதில் நீந்தி வரவேண்டும்.அது சுலபமாகவே அமையும்.
அதன்படி நாம் இலக்கு நிா்ணயத்துடன் விடாமுயற்சி, கைவிடாமல் இறை நம்பிக்கையோடு நம்மால் முடியும் என உத்வேகத்தோடு செயல்படுங்களேன் எங்கும் வெற்றி எதிலும் வெற்றியே தொடரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.