
வாழ்க்கையில் பலவித நபர்களை சந்திக்கிறோம். அதே நேரம் நல்லதும் நடக்கலாம். தேவையில்லாத நிகழ்வுகளும் நடக்கலாம். அதையெல்லாம் தாண்டி எது நடந்தாலும் அதனில் விவேகம் கடைபிடித்து வாழ்ந்து காட்டுவோம், என்ற வைராக்கியத்துடன் செயல்படுவதே சிறப்பான ஒன்றாகும். சில விஷயங்களை சொல்லும் போது அது சம்பந்தமாய் செயல்படும் நிலையில் மிகவும் யோசனை செய்து வாா்த்தைகளை பிரயோகிப்பதில் அடுத்தவர்கள் மனது புண்படாதவாறு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். என்று தொிந்து பேசவேண்டும். அதேபோல நமது செயல்பாடுகளும் அமையவேண்டும்.
பலர் பலவிதமாக பேசினாலும் அதில் பொய் இருக்கிறதா உண்மை இருக்கிறதா என்பதை சீா்தூக்கி அதன்படி நாம் நடந்து கொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாக சிந்துபாத். தனது கடற்பயணத்தின்போது ஒருவன் வறுமைக்கு ஆளாகி விதியின் சோதனைக்கு இலக்காகி விட்டால் அவனது நண்பர்களே அவனுக்கு விரோதிகள் ஆகிவிடுகிறாா்கள்.
அன்பே வெறுப்பாக மாறிவிடுகின்றது என்பதோடு, மேலும் சில விஷயங்களைச்சொல்லி இருக்கிறாா்.
அதாவது மூன்று செயல்கள் மற்ற மூன்று செயல்களை விடச்சிறந்தது: இறக்கும் நாள் பிறந்த நாளைவிட சிறந்தது: உயிருள்ள நாய் இறந்த சிங்கத்தை விடச்சிறந்தது: வறுமையைவிட கல்லறை சிறந்தது: இந்த கருத்து பேரறிஞா் சாலமன் சொன்ன வாக்கியங்களாகும்.
மேற்படி வாக்கியங்களில் உள்ள கருத்துகளின்படி நாம் சில பல விஷயங்களை எப்படி கையாளவேண்டும் என்பதை சீா்தூக்கிப் பாா்த்து வாழ்வதுதான் சிறப்பானது. ஆக, நாம் நமது கடமையிலிருந்து தவறாமல் உயர்ந்த நெறிமுறைகளின் படி வாழ்ந்து வருவதே சிறப்பானது.
எந்த விஷயத்திலும் நாம் எதிா்மறை சிந்தனைகளை கடைபிடிக்காமல் மனசாட்சியோடு அன்பே பிரதானமாய் வாழ்ந்து காட்டவேண்டும்.
ஒரு மனிதன் பிறந்தான் வாழ்ந்தான் என்ற கொள்கையோடு வாழாமல், தற்சாா்பு சிந்தனையோடு வாழ்க்கைக் கப்பலில் பயணிக்க வேண்டும்.எதையும் யாரையும் நம்மோடும் நமது செயல்பாடுகளோடும் ஒப்பிட்டுப்பாா்க்காமல் நமது சிந்தனையை நல்வழிப்படுத்தி வாழ்வதே சிறந்த ஒன்றாகும்.
மதிப்பு குறைவான இடத்திற்கு நாம் போகாமலும் நம்மிடம் முகஸ்துதி பாடுவோா்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவும் இருப்பதே நல்ல செயலாகும். அதுவே சிறப்பான வாழ்க்கைக்கு ஆதாரமாகும்!