உங்கள் மகிழ்ச்சியை மனதில் ஏற்றுங்கள்!

Mind your happiness!
Happy moments
Published on

ன்பம் எங்கே இருக்கிறது தெரியுமா? மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போதெல்லாம்  இன்பம் பெறுகெடுத்து ஓடும். மனதை மகிழ்ச்சியாக வைக்க பயிற்சி இருக்கிறது. தொடர்ந்து இந்த பயிற்சியை செய்து கொண்டிருந்தால் அதுவே பழக்கமாகிவிடும். 

தனியாக ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். ஒரு வெள்ளைத் துணியை விரித்து அதில் சாப்பாட்டின் முன்னால் உட்காருவதைப் போல் உட்காருங்கள். முதுகுத்தண்டு நிமிர்ந்து சுகாசனத்தில் உட்காருங்கள். நிமிர்ந்து உட்கார்ந்து கண்ணை மூடி உங்களுக்குப் பிடித்தமான ஒரு சொல்லை அல்லது வாக்கியத்தை 21 முறைசொல்லுங்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையில் எத்தனையோ  வகையான இன்ப நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருக்கும்.  அதில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.  அந்த நிகழ்ச்சியை உங்கள் மனக்கண்ணில் கொண்டு வாருங்கள். அந்த நிகழ்ச்சியில் நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள். எவ்வாறு நடந்து கொண்டீர்கள் . யார் யாரெல்லாம் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள் என்று நினைவு கூறுங்கள். அன்று நிகழ்ந்து முடிந்த நிகழ்ச்சியை நிகழ் காலத்தில் காணுங்கள்.

அந்த நிகழ்வின்போது மனம் எவ்வாறு இருந்ததோ அதே உணர்வை உங்கள் மனம் மீண்டும் அடையுமாறு செய்யுங்கள். இப்போது கண்ணைத் திறந்து மனதில் என்ன இருக்கிறதென்று பாருங்கள். கண்ணை மூடுவதற்கு முன் இருந்த நிலைக்கும், கடந்தகால நிகழ்வைக் கண்டபின் இருக்கும் மனத்தின் நிலைமைக்கு வேறுபாட்டை இருக்கிறதல்லவா?. இன்பத்தை மனதில் வைத்துக் கொண்டு இன்பம் எங்கே எங்கே என்று தேடிக் கொண்டிருந்தால்  எப்படிக் கிடைக்கும். 

அடுத்து இன்பமான நிகழ்ச்சி மட்டும்தான் இன்பத்தை தருகிறது என்று நினைக்காதீர்கள். துன்பமான நிகழ்ச்சிகளையும் இன்பமாக மாற்றலாம். முன்பு கூறியது போலவே தரையில் அமருங்கள். நீங்கள் தவறாக நடந்ததால் நிகழ்ந்த துன்பமான நிகழ்ச்சியை உங்கள் மனக்கண் முன் காணுங்கள். அதில் நிகழ்ந்த தவறுகளை என்னவென்று உணருங்கள். அன்று நிகழ்ந்த தவறுக்கு வருத்தம் தெரிவியுங்கள்.  உங்கள் தவறால் வருத்தமடைந்தவர்களை மனக்கண்ணால் பார்த்து அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். இப்போது கண்ணைத் திறந்தால் ஒரே அமைதியாக இருக்கும்.

உங்களுடன் இருப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். உங்களுக்குச் சொந்தமான பொருட்களைப் பாருங்கள். எல்லாமே மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். உங்களுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். இப்போது அடுத்த பயிற்சிக்கும் போவோம்.  வீட்டில் ,அலுவலகத்தில்,வெளியில், பயணங்களில் என்று பல நூற்றுக்கணக்கான மனிதர்களை சந்திக்கிறோம். அவர்களின் பேச்சு,நடவடிக்கை அதனால் நமக்கு ஏற்படுகிற கோபம், எரிச்சல் போன்றவற்றை அடக்க முடியாமல் திணறுவோம். 

இதையும் படியுங்கள்:
நமக்கான வாய்ப்பை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் தெரியுமா?
Mind your happiness!

உங்களுக்கு யார் மீது கோபமோ, எரிச்சலோ அவரை உங்கள் மனக்கண் முன் கொண்டு வந்து உங்கள் கண் முன் தெரிகிற உருவத்துக்கு எவ்வாறெல்லாம் அலங்கோலமாக சித்தரிக்க முடியுமோ அவ்வாறு செய்யுங்கள்.  அவரை வெகு தூரத்துக்கு விரட்டி அனுப்புவதைபோல் கற்பனை செய்யுங்கள்.  விரட்டிய பிறகு கண்ணைத் திறக்க உங்களுக்குள் இருந்த எரிச்சல் கோபம் எல்லாம் குறைந்திருக்கும். 

மேற்கூறிய பயிற்சிகளும் நீங்கள் செய்கின்ற செயல் ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியாக செய்யுங்கள். உங்கள் மகிழ்ச்சிக்கு ஒத்து போகாத செயல்களை தவிர்த்து விடுங்கள். உங்களைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளை உற்று கவனியுங்கள் அன்பாக இருங்கள். அன்பின் மிகுதி அல்லது முதிர்வு இன்பமாகத்தானே இருக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com