தவறுகள் எப்போதும் மன்னிக்கப்பட கூடியவையே!

Mistakes are always forgivable!
Motivation articles
Published on

வறுகள் எப்பொழுதும் மன்னிக்கப்பட கூடியவை. எப்பொழுது? ஒருவர் தனது தவறை உணர்ந்து பொறுப்பேற்றால் மன்னிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 

நாம் அனைவருமே ஏதாவது ஒரு தருணத்தில் தவறு செய்கிறோம். வாழ்க்கை என்பது கற்றுக்கொள்வது. செயல்பாட்டில் தவறு செய்யாவிட்டால் நாம் எப்படி கற்றுக் கொள்ளமுடியும்? தவறு என்பது கற்றலின் ஒரு பகுதியாகும். ஒருவர் தான் செய்த தவறை நினைத்து வருந்தும் பொழுது மன்னிப்பதுதான் சரியான செயலாகும். ஆனால் மன்னிக்கும் பகுதி என்பது தவறின் தீவிரத்தை பொறுத்து அமையும். தவறின் தீவிரம் அதிகம் இருந்தால் மன்னிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகும். 

மன்னிப்பு கடந்த காலத்தை மாற்றாது. ஆனால் எதிர்காலத்தை பாதிக்காமல் வளமாக்கும். ஒருவர் தனது தவறை  உணர்ந்து பொறுப்பேற்றால் மன்னிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

தவறு செய்தவர்கள் தங்களுடைய செயல்களின் தாக்கத்தை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. தான் செய்த தவறுக்காக வருந்தி அந்த வருத்தத்தை வெளிப்படுத்துவதுடன் தன்னுடைய நடத்தையிலும் மாற்றங்களை வெளிப்படுத்தினால் மன்னிப்பது எளிதாகும். தவறு செய்தவர்கள் தங்களின் தவறை உணர்ந்து வருந்துவது அவர்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அதேபோல் பாதிக்கப்பட்டவர் தவறு செய்தவரை மன்னிப்பதன் மூலம் தன்னுடைய ஆற்றலை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தி மன அமைதியைப் பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
தோல்வி கண்டு பயப்படாமல் முயற்சித்துப் பாருங்கள், வெற்றி நிச்சயம்!
Mistakes are always forgivable!

பாதிக்கப்பட்டவர் தவறு செய்தவரை மன்னிக்கவில்லை எனில் அவருடைய மனநிலையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதுடன் அவர்களின் வேலைத்திறனையும்  பாதிக்கும். எனவே தவறுகள் எப்போதும் மன்னிக்கப்படுவதுதான் இரு தரப்பினருக்கும் நல்லது.

தவறுகள் எப்பொழுதும் மன்னிக்கக் கூடியவை. மன்னிக்காத தவறுகள், தவறு செய்தவர்களை விட அதனால் பாதிக்கப்பட்டவர்களின் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் குறைக்கும். கோபம், வெறுப்பு, கசப்பு போன்ற உணர்வுகளால் துன்பப்பட வேண்டி உள்ளது.

தவறிழைப்பது குற்றமல்ல. அதையே வாடிக்கையாகக் கொள்ளும் பொழுது அது குற்றமாகிறது. நான் செய்தது தவறு என்று மனசாட்சிப்படி உணர்பவன் அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டான். தவறிழைப்பதற்கான தூண்டுதல் எங்கிருந்தாவது வந்து கொண்டேதான் இருக்கும். நம் மனம்தான் தவறு செய்யாமல் இருக்க சரியான கடிவாளம் போட்டு பூட்ட வேண்டும்.

செய்த தவறுகளை ஒத்துக் கொள்ளும் நபர்கள் நம்பகமானவர்களாகவும், நம்பகத்தன்மை உடையவர் களாகவும் கருதப்படுகிறார்கள்.

ஆனால் யார் என்ன தவறு செய்தாலும் மன்னிக்கப்பட வேண்டும் என்பது சரியல்ல. சிலர் மன்னிப்புக்கு தகுதியானவர்களாக இருக்க மாட்டார்கள். காரணம் மன்னிப்பின் மதிப்பை புரிந்து கொண்டு தவறை மீண்டும் செய்யாதவர்கள் மட்டுமே மன்னிப்பை பெற முடியும். நாம் தவறு செய்தவர்களிடமிருந்து விலகி இருக்கப் போகிறோம் அல்லது ஒருமுறை தவறிழைக்கப்பட்ட நபரின் பார்வையிலிருந்து நாம் விலகிச் செல்ல போகிறோம் என்றால் ஒருமுறை மன்னிக்கலாம். அதைப்போல் மன்னிப்பு வழங்காதது நம் உள்ளத்தில் உறுத்தலையோ, வருத்தத்தையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தி நம் அமைதியை குலைக்கும் என்று எண்ணினால் மன்னித்து விடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com