
பெரும்பாலானவர்களுக்கு அடுத்த கட்டத்திறகு நகர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு பல முறைகள், வழிகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டை குறித்து காண்போம்.
சுய உந்துதல் (self motivation) மிக முக்கியமான பணி ஆற்றுகின்றது, அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து வைத்து நகர.
தனிப்பட்ட நபர் எதுவும் செய்யாமல் குறிப்பிட்டவரால் எதையும் சாதிக்க முடியாது. அடுத்தவர்கள் உற்சாகப்படுத்தலாம், முடிந்த அளவிற்கு உதவி செய்யலாம், அட்வைஸ் கூறலாம்,
ஆலோசனை சொல்லலாம். ஆனால் அவர்களால் கடைசி வரையில் உடன் வர முடியாது. உடன் வரவும் கூடாது. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.
நீச்சல் பழகுபவர் புத்தகம் படித்து, வீடியோ பார்த்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. கோச் அடிப்படை தேவைகளை விளக்குவார், பழகிக்கொடுப்பார், நம்பிக்கை அளிப்பார். ஆனால் கற்றுக்கொள்பவரின் ஈடுபாடு, உண்மையான ஆர்வம், செயல்பாடு, இடை விடா பயிற்சி மற்றும் முயற்சி, தனிமையில் நீந்த வளர்த்துக்கொள்ளும் திறமை, தைரியமாக நீரின் உள்ளே சென்று நீந்தும் முறை ஆகியவை அத்தியாவசியம் ஆகின்றது ஒரு சிறந்த நீச்சல் வீரர், வீராங்கனை உருவாக்க. தொய்வு அடையாமல் இருக்க சுய உந்துதல் அவசியம் ஆகின்றது. (Obviously self motivation becomes essential)
அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆசைப்படுவது இன்றைய கால கட்டத்தில் ஒதுக்க முடியாத ஒன்றாகிவிட்டது. அடைந்து தீருவேன் என்ற ஆசை அதற்கு தேவையான நடவடிகைகளில் ஈடுபட தூண்ட வைக்கும்.
அதுவே முயற்சி செய்ய வழி வகுக்கும். போட்டிகள் நிறைந்த உண்மையான சூழ்நிலையில் வேகமாகவும், தேவைக்கு ஏற்ப செயல்படாவிட்டால் முன்னேற்றம் தடைகளை சந்திக்க வேண்டும்.
ஆசைப்படுவது குறிப்பிட்ட நபரை இயங்க வைக்கும். ஆசைப்பட்டால் மட்டும் போதாது உடன் அசைபோடும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அதாவது குறிப்பிட்ட முன்னேற்றத்திற்கு தேவையான
வளர்ச்சிக்கு ஏற்ப அடுத்து என்ன, எப்படி, எப்பொழுது, எவ்வாறு செய்யவேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமும், கட்டாயமும் ஆகின்றது. அதற்கு தேவை நேரம் உடன் சரியாக சிந்திக்க சூழ்நிலை இதை பற்றித்தான் அசைபோடுவது என்று கூறப்பிட்டுள்ளது.
பசு மாடு வேகமாக புற்களை தின்றுவிட்டு பிறகு நிதானமாக தேவையான நேரம் எடுத்துக்கொண்டு அசைப்போட்டு உணவை உண்ணும். அதேபோல் அடுத்தக் கட்டத்திற்கு நகர தேவையான சிந்தனை மிக மிக அவசியம்.
சூழ்நிலைக்கும், தேவைக்கும் ஏற்ப சிந்தித்து முடிவு எடுத்து நகர்வது சாலச்சிறந்தது. இல்லாவிட்டால் அவசர அவசரமாக செயல்பட்டு இன்னல்களை சந்திக்க வேண்டும்.
வாழ்க்கையில் முன்னேற அசைபோடுவது போல் சிந்தித்தும், ஆசைப்படுவது போல் எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு இலக்கை அடைய முயல்வதும் குறிப்பிட்ட நபரின் அடுத்த கட்ட நகர்விற்கு துணை நிற்கும், செவ்வனே செயல்பட செய்து இலக்கை அடைய பெரிதும் உதவும்.