
சுயமரியாதை என்பது நீங்கள் நினைப்பதுபோல ஆணவம் அல்ல. நீங்கள் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாச மானவர் என நினைப்பதும் அல்ல. உங்கள் நேரம், சக்தி ஆகியவற்றை பாதுகாக்கும் அளவுக்கு உங்களை நீங்களே மதிப்பீடு செய்வதுபோல ஆகும்.
உங்கள் சுயமரியாதையைத் தக்க வைக்க சிறந்த வழி இல்லை என்று சொல்வதே ஆகும். இவற்றை எந்த தருணங்களில் சொல்ல வேண்டுமென்றால்?
கூடா நட்பு
சில நேரங்களில் நம்மால் தவிர்க்க இயலாமல் கூடா நட்பு வந்து ஒட்டிக்கொள்ளும். அவர்களின் குணம் உங்களின் நல்ல எண்ணங்களை குப்பையாக்கி விடுவார்கள். அந்த எண்ணங்களால் நீங்களும் திசை மாறி போக வாய்ப்பு உருவாகிவிடும். எனவே அத்தகைய கூடா நட்பினை ”நீ என் மனதில் இல்லை” என்று கூறழ அறவே தவிர்த்தல் அவசியமான ஒன்றாகும்.
கை விட வேண்டிய வாய்ப்பு
சில நேரங்களில் அதிக ஊதியம் தருகிறோம். உங்களுக்கு ஏராளமான சலுகைகள் உண்டு. ஆடம்பர குளிர்சாதன அறை, உங்களுக்கு ஒரு தனியாக ஒரு உதவியாளர் என அள்ளி விட்டு கூப்பிடுவார்கள். எதற்காக இவ்வளவு சலுகைகள் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். நமது படிப்பிற்கும், தகுதிக்கும் தகுதியானதுதானா என பார்த்து, தகுதிக்கு மீறி இருந்தால்…. அந்த வேலையில் குறுக்கு வழியில் ஏதாவது ஆதாயம் தேடி தரசொல்லி வற்பறுத்துவார்களா என ஆராய்ந்து, உங்கள் உள்ளுணர்வு ஆம் என்று பதிலளித்தால், அந்த வேலையை மறுத்து ”நான் அவனில்லை” என்ற ஒற்றை வரியோடு ஒதுங்கி கொள்வது மிகவும் சிறப்பு.
உங்களுக்காக நீங்கள்
மற்றவர்களுக்காக வாழ்வதைவிட உங்களுக்காக வாழ்வதே மிக சரியான வாழ்வு. உங்களுக்கு ஒரு முகம், மற்றவர்களுக்கு ஒரு முகம் என முகமூடி அணிந்து வாழ்வது என்றுமே ஆபத்தானது. எனவே அவ்வாறான வாழ்விற்கு ”இந்த பாதை எனக்கு இல்லை” என்ற விலகிவிடுவது மிக மிக நல்லதாகும்.
வார்த்தைகளில் தேன்
ஒரு சிலர் வார்த்தைகளில் தேன் தடவி மிக நாசுக்காக நம்மை பிறர் முன்னிலையில் கேலியும் கிண்டலும் செய்துவிட்டு, அவமானப்படுத்தியும் விட்டு, நீங்கள் ரொம்பவும் உணர்ச்சி படுபவர் என்று திசைமாற்றுபவரிடம் எச்சரிக்கையாக இருப்பதுடன், அவர்ளை விலக்கி ”நீங்கள் அவமானப்படுத்தும் ஆள் நான் இல்லை” என்று விலகிவிடுவது நல்லதாகும்.
பிறரின் காலக்கெடு திணித்தல்.
ஒரு சிலர் அறிவுரைக் கூறுவதை ஆர்வமான பழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் உனக்கு வயது முப்பது ஆகி விட்டது. இப்பொழுது கல்யாணம் செய்துகிட்டா நல்லது என அவர்களின் காலக்கெடு எண்ணத்தை உங்கள் மீது திணிப்பார்கள். அல்லது ”உங்களுக்கு வயதாகிவிட்டது. இப்பொழுது வேலையை மாற்றப் போகிறீர்களா? வேண்டாமே என்று உங்களை செயல்பட விடாமல் முட்டுக்கட்டைப் போடுவார்கள்.
அவர்களிடம், என்னுடைய காலக்கெடு எனக்கு தெரியும் என்று கூறி நான் என் முடிவில் உறுதியாக இருக்கிறேன். உங்கள் முடிவு எனக்கு இல்லை என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டு அகலுதல் நன்று.
மன்னிப்பு கோருதல்
ஒருவரின் தவறை நீங்கள் சுட்டிக்காட்டி உணர்ச்சிகரமான வார்த்தைகளை கூறிவிட்டால்… அதற்காக நீங்கள் மன்னிப்பு கோர தேவையில்லை.
அவரின் தவறு அவர் உணராமல் இருப்பார். அதற்காக நீங்கள் சுட்டிக்காட்டிய விதம் உணர்ச்சிகரமாக இருக்கலாம். அதற்காக நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள தேவையில்லை. மாறாக… செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டது. அவ்வளவே என்று அகன்று விடுங்கள்.
கொள்கை மாறாதவர்
ஒரு சிலர் சில கொள்கைகளைக் கெட்டியாக பிடித்து கொண்டிருப்பார்கள். அந்த கொள்கையில் சில முரண்பாடுகள் இருக்கலாம். அவர்கள் மாற விரும்பாதவர்களாக இருக்கலாம். அவர்களின் கொள்கையை மாற சொல்வது அல்லது அவர்களை மாற சொல்வது நமக்கு தேவையில்லாத ஒன்றாகும். எனவே விலகுதல் மிக மிக அவசியம். ஆக நீங்கள் நீங்களாகவே இருங்கள்.