
விரக்தியின் உச்சிக்கே சென்றாலும் தன்னம்பிக்கை வேள்வியை மனதில் ஏற்றி, கைப்பிடித்து அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் வாழ்க்கை பாடங்களாக அமைந்தவை ரத்தன் டாடாவின் வார்த்தைகள். தொழில்துறையில் மட்டுமல்ல, இன்றைய நவீன இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் கருத்துகளை அள்ளித் தெளிப்பதிலும் ஜாம்பவனாக திகழ்ந்தவர் ரத்தன் டாடா.அவர் அவ்வப்போது கூறிய பொன்மொழிகள் சில....
"சிறந்த வேலை செய்ய ஒரே வழி நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பதுதான்".
"எதிர்காலம் நாம் நுழையும் ஒன்று அல்ல. எதிர்காலம் நாம் உருவாக்கும் ஒன்று. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாகவும், சரியாகவும் செயல்பட வேண்டும். அதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது".
“வேகமாக நடக்க வேண்டும் என்றால் தனியாக நடந்து செல்லுங்கள்; தொலைத்தூரம் நடக்க வேண்டும் என்றால் குழுவாக மட்டுமே பயணிக்க முடியும்.”
“மக்கள் உங்களை பின் தொடரவேண்டுமென்றால், நீங்கள் அவர்களை அன்போடு வழிநடத்த வேண்டும்.”
“ தோல்வி என்பது தோற்பது அல்ல, முயற்சியே எடுக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய தோல்வி.”
“ஆழ்ந்த சிந்தனையும், கடின உழைப்பும் இல்லாமல் பெரிய விஷயங்கள் எதையும் அடைய முடியாது.”
“மற்றவர்கள் உங்களை நோக்கி எறியும் கற்களை எடுத்துக் கொண்டு ஒரு நினைவு சின்னத்தை கட்டியெழுப்புங்கள்.”
“மற்றொருவரின் பாணியை பின்பற்றுபவர் சிறிது காலம் தான் வெற்றிபெற முடியும், அவரால் வெகுதூரம் செல்ல முடியாது.”
“சரியான முடிவை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை , நான் முடிவை எடுத்த பின் அதனை சரியாக்குவேன்.”
"மிகவும் வெற்றிகரமான நபர்களை நான் பாராட்டுகிறேன். ஆனால் அந்த வெற்றி மிகவும் இரக்கமற்ற முறையில் கிடைத்திருந்தால், நான் அவர்களைப் பாராட்டலாம், ஆனால் நான் அவர்களை மதிக்கவில்லை.”
"உங்களுக்கு சமூகம் சில விசயங்களைக் கொடுக்கும் பொழுது, நீங்களும் அதற்கு சில விசயங்களை திரும்ப கொடுக்க வேண்டும். நலிந்தோருக்கு உதவி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றி எப்பொழுதும் நிலைக்கும். வாழ்க்கை, உங்களை எவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றாலும், அடக்கத்துடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்".
கீழே விழுவதும் பின்பு மேலே எழுவதும் வாழ்க்கை பயணத்தில் முக்கியமானது. நம் இதயத்துடிப்பை அளவிடும் கருவி கூட ஒரே நேர்க்கோட்டில் காட்டினால் உயிரோடு இல்லை என்று அர்த்தம். அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கும்".
"முக்கியமான விஷயம் என்னவென்றால், எவ்வளவு சிறிய முன்னேற்றமாக இருந்தாலும், முன்னேற்றம் முக்கியமானது".
"இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்து விட முடியாது. இரும்பு அழிய வேண்டும் என்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால்தான் உண்டு. இதேதான் நமக்கும். நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்று விட்டால், எவராலும் நம்மை அழித்துவிட முடியாது, எவ்வளவு பெரிய சோதனைகளானாலும் நம்மை வீழ்த்தி விட முடியாது."
இந்த நான்கு விஷயங்களுக்காக வெட்கப்படாதீர்கள்.
1) பழைய ஆடைகள் உடுத்துவதற்காக , ஏனெனில் ஆடைகள் ஒரு போதும் திறமையை தீர்மானிப்பதில்லை.
2) பழைய நண்பர்கள் -ஏனெனில் நட்பு தகுதி பார்த்து வருவதில்லை.
3) வயதான பெற்றோர் -ஏனெனில் தற்போதைய உங்கள் நல்ல நிலைக்கு அவர்கள்தான் காரணம்.
4) எளிய வாழ்க்கை -ஏனெனில் வெற்றி தோற்றத்தை பார்த்து வருவதில்லை.
"புதுமை என்பதுதான் போட்டியிலிருந்து வேறுபட்டு, முன்னேற ஒரே வழி. நமது எளிய இலக்கு எதுவென்றால் நாம் செய்யும் எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக இருப்பதுதான்".