இனி தோல்வியே இல்லை: வெற்றிக்கான 'அந்த' ஒரு ரகசியம்!

A secret of success!
Motivational articles
Published on

வெற்றி! இதை அனைவருமே தன் வாழ்வில் ஒரு முறையாவது ருசித்துவிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் வெற்றியுடைய வரையறை வித விதமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது எட்டாக்கனியாகவே இருந்து விடுகிறது. ஆனால் எதையும் சரியாக முயற்சித்தால், வெற்றி நிச்சயம் நம்மை வந்தடையும். 

முதலில் அறிந்து கொள்ளுங்கள்:

ந்த ஒரு விஷயத்தை நாம் தொடங்குவதாக இருந்தாலும், அதைப் பற்றிய புரிதல் மற்றும் தெளிவு மிக மிக அவசியம். தீயினுடைய தன்மை சுடும் என்பதை நாம் அறிந்தால் தான், அதை எங்கே பயன்படுத்தலாம் அல்லது எப்படி அதன் ஆபத்திலிருந்து விலகி இருக்கலாம் என்பது பற்றிய சிந்தனை நமக்குள் ஏற்படும். எனவே, எதுவாக இருந்தாலும் அதைப் பற்றிய அடிப்படை அறிவு முதன்மையானது. இது இல்லாமல் நாம் எதையுமே சரியாகச் செய்ய முடியாது.

சரி, எப்படி நான் ஒரு விஷயத்தைப் பற்றி அறிவது என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். தற்போதய இணைய உலகில் அது மிக மிக எளிமையான ஒன்று. என்னைக் கேட்டால் யூடியூப் வழியாகவே சகலத்தையும் உங்களால் அறிந்துகொள்ள முடியும். ஒரு விஷயத்தைப் பற்றி அறிவதையும் மூன்று வகையாகப் பிரித்துள்ளார்கள்.

வாசித்தல் (Read): எலான் மஸ்க், வாரன் பஃபெட், பில்கேட்ஸ் போன்ற தலைசிறந்த நபர்களை எடுத்துக்கொண்டால், வாசித்தல் என்பது அவர்கள் வாழ்க்கையை பெரும்பாலும் ஆட்கொண்டிருக்கும். வாசித்தல் மூலமாகவே அந்த அளவுக்கு அறிவுத்திறனை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. நீங்களும் எதையாவது கற்க வேண்டும் என்றால் அது சார்ந்த புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். அதைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளும் அடிப்படை விஷயங்கள் கூட உங்களுக்கு மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

கவனித்தல் (Listen): பிறர் சொல்வதை கவனித்தல் மூலமாகவும் நாம் அறியாத பல விஷயங்களை நம்மால் அறிய முடியும். இதுவும் ஒருவகையான கற்றல் முறை தான். உலகில் உள்ள அனைவருக்குமே அனைத்தும் தெரிந்து இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒன்று கட்டாயம் தெரிந்திருக்கும். அது பல சமயங்களில் நமக்கு தெரியாத ஒன்றாகவும் இருக்கலாம். நாம் அனுபவிக்காத புதிய அனுபவமாகவும் இருக்கலாம். எனவே பிறரை கவனிப்பதன் மூலமாகவும் நம்முடைய கற்றல் திறன் மேம்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வெற்றியின் ரகசியம்: அனுபவமும், அவமானங்களும்!
A secret of success!

உள்வாங்குதல் (Observe): நாம் அனைவருமே பல விஷயங்களைப் படிக்கிறோம். பிறர் சொல்வதை கவனிக்கிறோம். ஆனால் அதை எத்தனை பேர் உள்வாங்குகிறோம் என்பதில் மிகப் பெரிய கேள்விக்குறி உள்ளது. பெரும்பாலான மனிதர்கள், தான் எதை எதிர்பார்க்கிறார்களோ, விரும்புகிறார்களோ அதையே உள்வாங்குகிறார்கள் என்று உளவியல் சொல்கிறது.

முதலில் எதை நீங்கள் சாதிக்க வேண்டுமென நினைத்தாலும் அதை உங்கள் விருப்பத்திற்குரிய ஒன்றாக மாற்றுங்கள்.

"நமக்குப் பிடிக்காத விஷயத்தில் ஒரு போதும் நம்மால் சாதிக்க முடியாது".

இதை சரியாக உணர்ந்து செயல்பட்டால் வெற்றி உங்கள் வசமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com