
புத்தகம் என்பது மனதின் சிறந்த தோழன். புத்தக வாசிப்பின் மூலம் புதிய அறிவைப்பெற முடியும். புத்தகங்களை படிப்பது நம்மை உலகை பல்வேறு கோணங்களில் பார்க்கச் செய்யும் திறன் கொண்டது. நம் சிந்தனைத் திறனை மேம்படுத்தும்.
புத்தகங்களை படிப்பது அறிவு வளர்க்கும்; புத்தகங்களை பகிர்வது அறிவைப் பரப்பும்.
புத்தகங்கள் மனித வாழ்க்கையின் சிறந்த ஆசிரியர்கள்.
ஒரு நல்ல புத்தகம் தோழனைப்போல; அதை ஒரு வாழ்நாள் முழுவதும் கைவிட முடியாது.
ஒரு புத்தகம் ஒருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த கருவியாகும்.
புத்தகம் கற்றுத்தரும் அறிவு என்றும் சிதைவுறாது.
நல்ல புத்தகம் என்பது நண்பனின் முகத்தில் சிரிப்பு போலாகும்.
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட பொழுது "ஒரு நூலகம் கட்டுவேன்! " என்று பதில் அளித்தாராம் மகாத்மா காந்தி அவர்கள்.
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட பொழுது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு வருவேன் என்று பதில் அளித்தாராம் ஜவஹர்லால் நேரு அவர்கள்.
உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல் - டெஸ்கார்டஸ்.
புரட்சிப் பாதையில் கை துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே - லெனின்
போதும் என்று நொந்துபோய், புது வாழ்வைத் தேடுகிறீர்களா... ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்க தொடங்குங்கள் - இங்கர்சால்
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் - ஆபிரகாம் லிங்கன்
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! - சிக்மண்ட் ஃப்ராய்ட்.
தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தவர் பகத்சிங் அவர்கள்.
டாக்டர் அம்பேத்கார் அவர்களிடம் எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபொழுது எது நூலகத்துக்கு அருகில் உள்ளது என கேட்டவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்பொழுது வரும் முன்பணத்தில் முதல் 100 டாலர்களுக்கு புத்தகங்கள் வாங்கியவர் சார்லி சாப்ளின் அவர்கள்.
ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்று கூறியவர் விவேகானந்தர்.
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கூறியவர் நெல்சன் மண்டேலா அவர்கள்.