
வெற்றி இலக்கை அடைய இடைவிடாது பாடுபட வேண்டும். எந்த இலக்கையும் அடைவது சுலபமில்லை. என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
முன்னேறி செல்லவேண்டும் என்ற நேர்மறை எண்ணம் எப்பொழுதும் மனதில் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். அத்தகைய பாசிட்டிவான எண்ணமே அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து செல்வதற்கான உந்து சக்தியாக செயல் படும்.
வெற்றி இலக்கு வெகு தூரத்தில் இருந்தாலும் இடைவிடாத நம்பிக்கை, கடின உழைப்பின் மூலம் கிட்டும் பலன்கள் ஆகியவை அடுத்த நகர்வுகளுக்கு வெற்றியை தேடுவதற்கும், அடைவதற்குமான முன்னோக்கிய பாதையை வகுத்துதரும்.
பலவகை சந்தர்ப்பங்கள் வெற்றி இலக்கை நோக்கி பயணிக்கும் பாதையில் தென்படும். அவற்றை சரிவர புரிந்துக்கொண்டு, பொருத்தமானவற்றை அடையாளம் கண்டு தேர்வு செய்து உபயோகித்தால் கூடுதல் பலன்கள் வெற்றி கனியை பெற உதவி செய்யும்.
வெற்றி பெறுவது உடனுக்கு உடன் நடைப்பெறாது என்று உணர்ந்து ஈடுபட வேண்டும்.
வெற்றி பாதை என்பது ரோஜா மலர்களால் செய்யப்பட்டது அல்ல. தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துக்கொண்டே செல்வதற்கு.
கட்டாயம் அந்த பாதையில் இருக்கும் முட்களையும் (தடங்கல்கள், இடையுறுகள், எதிர்பாராத நிகழ்வுகள், தாமதங்கள், இழப்புக்கள் இவைகளால் ஏற்படும் தோல்விகள்) ஆகியவற்றை எதிர்கொண்டு கடந்து செல்ல வேண்டியதை தவிர்க்கவே முடியாது.
ஊக்குவிப்பவர்களைவிட விமர்சனம் செய்பவர்கள், குறை கூறுபவர்கள், நிராகரிக்கிறவர்கள் அவர்களுடைய பணிகளை செவ்வனே செய்து தடைக்கல்களாக எதிர்படுவார்கள்.
இத்தகையவர்களை சமாளித்து, அவர்கள் கூற்றுகளை ஒதுக்கி தள்ளிவிட்டு முழு ஈடுபாட்டுடன் தங்கள் காரியத்தில் குறியாக இருப்பவர்களாலேயே வெற்றி இலக்கை தொடமுடியும்.
கரடு முரடான பாதையில் பயணம் செய்யும் பொழுது சந்திக்கும், எதிர்கொள்ளும் வீழ்ச்சிகள், அதிர்ச்சிகள் ஆகியவற்றை எப்படி லகுவாக கடந்து செல்வது என்று தீவிரமாக சிந்தித்து உறுதியாக செயல்பட தயங்கவே கூடாது.
தொடங்கியது முதல் தொடர்ந்து பயணித்து ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்பார்த்த அல்லது மாறுபட்ட சூழ்நிலைகளை கடந்து சென்று வெற்றியை பெற்று மகிழ முக்கியமாக உதவுவது சரியான சிந்தனைகளை கைவிடாமல் தொடர்வது.
பயணம் துவங்கி முடியும் வரையில் தேவைக்கும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் நடைபெரும் நிகழ்வுகளுக்கு ஏற்ப சிந்திப்பவராலேயே இலக்கை அடைய முடியும்.
வெற்றியைத்தேடித்தர, தொடர்ச்சியான சிந்தனையே இன்றைய கால கட்டத்தின் தேவை என்பது கட்டைவிரல் விதி.
சிந்தனை செய்வது யோசனைகளை அளிக்கும். ஆனால் வெற்றி பெறுவது கிடைக்கும் முடிவுகளை பொருத்தது. அதற்கு தேவை செயல்படுத்துதல்.
எனவே சிந்தனைகள் மூலம் உருவாகும் யோசனைகளை திறம்பட தொடர்ந்து செயல்படுத்தி தேவையான கண்காணிப்பிற்கு ஈடுபடுத்தி வந்தால் முடிவில் வெற்றிக்கனி பாடுபட்ட நபருக்கு கிட்டும்.
வெற்றி பெற சிந்தனை மற்றும் செயல்படுத்துதல் பெரிதும் உதவுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.