வாழ்க்கையின் தத்துவமும் அணுகுமுறையும்!

Life style articles
Motivational articles
Published on

றைவன் படைப்பில் வித்யாசம் இருப்பதில்லை. இருந்தாலும் சிலர் பணக்காரர்கள் ஆகிவிடுவதும் வெகு சிலர் ஏழைகளாவே வாழ்வதும்  நடப்புதான். அதேநேரம் ஏழை ஏழையாகவே இருப்பதும்,  பணம் படைத்தவர்கள் பணக்காரர்களாகவே இருப்பதும் நிரந்தரமில்லையே!

எதற்கும் ஒரு வாா்த்தை உண்டு, விதி்ப்பயன், கர்மா, முன் ஜென்மத்தில் செய்த பாவம், என்றெல்லாம் சொல்வதும் உண்டல்லவா! அதுபோலவே ஒருவர் ஏழையாக இருந்தால் அவரை எடுத்தெரிந்து பேசுவதோ அல்லது தகாத வாா்த்தைகளால் அநாகரீகமாகவோ நடத்தவேண்டாமே!

அதனால் நமக்கென்ன லாபம் பொதுவில் மனிதனை மனிதன் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அனைவருக்கும் இதயம், மனது உணர்வுகள் இப்படி பல்வேறு அம்சங்கள் இருப்பது உண்டு.

ஆக, நமது மனதில் அடுத்தவர் உணர்வுகளையும் மதிக்கிற மனப்பக்குவம் இருக்கவேண்டும். அதோடல்லாமல் அன்பு கருணை இருப்பதும் அவசியமான ஒன்றே. எனவே பணம் இல்லாதவன், ஏழை என்ற பாகுபாடு காட்டாதீா்கள். அதேபோல வாழ்ந்து கெட்டவர்களிடமும் பண்பாடு கடைபிடித்து வாழ்வதே சிறப்பான செயலாகும்.

அனைவரும் ஒருமித்த கருத்தோடு சகோதர உணர்வோடு வாழ்வதே நல்லது. வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு என்பது வரும், போகும் எதுவும் நிரந்தரம் இல்லை என்ற ரீதியில் பழகும் நிலையை வளர்த்துக்கொள்ளவேண்டும். 

இதையும் படியுங்கள்:
நீங்கள் 'ரொம்ப வேலையாய்' இருக்கீங்களா? - இந்த அரைமணி நேர ட்ரிக் உங்களுக்குத்தான்!
Life style articles

பணம் என்பது நிரந்தரம் இல்லை. கைக்கு கைமாறும் பணம். எதுவும் நம்மோடு வரப்போவதில்லை எனத் தொிந்தும் மனித மனங்களில் ஏன் இந்த வக்கிர புத்தி. வாழப்போது கொஞ்சநாட்களோ அதிக நாட்களோ அதுவரையில் விசால மனதோடு குறுகிய மனப்பான்மை விலக்கி நல்ல சிந்தனைகளோடு வாழ்வதே சாலச்சிறந்த ஒன்றாகும்.

பணம் ஒன்றே வாழ்க்கை அது ஒன்றே குறிக்கோள் எனும் நிலையை மாற்றி இறைவன் கொடுத்த வாழ்க்கையை நன்றாக பயன்படுத்தி வாழலாமே! அப்படி வாழும்போது ஏற்ற இறக்கம் வருவது இயல்பே.

அது நமக்கான படிப்பினையைத் தரவல்லதே என்ற கோட்பாடுகளோடு வாழ்வதே சிறப்பான ஒன்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com