
எல்லோருக்கும் எல்லா விஷயங்கள், விவரங்கள்
அறிந்திருப்பது சாத்தியமில்லை. ஆனால் விரும்பினால் பல விவரங்களை அறிந்து அறிவை அதிகரித்துக்கொள்ள முடியும்.
கற்றுத் தெரிந்துக்கொள்வது, படித்து புரிந்துக்கொள்வது. விவாதித்து புரிதலை மேம்படுத்திக்கொள்வது. இவ்வாறு இருக்கும் பல வகைகளில் ஒன்று, அனுபவம் பெற்றவர்களின் அனுபவங்களை தெரிந்துக்கொண்டு பலன் பெறுவது. அதை பற்றி இங்கு காண்போம்.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள் கண்ட கனவுகள், அவற்றை செயல்படுத்திய முறைகள், சந்தித்த இடர்கள், கடந்து வந்த பாதைகள், இடையில் ஏற்பட்ட மகிழ்ச்சிகரமான பயன்பெற்று தந்த சந்திப்புக்கள், எதிர்கொண்ட ஏமாற்றங்கள், தோல்விகள், நஷ்டங்கள், சங்கடங்கள், சமாளித்த தருணங்கள், கை கொடுத்த உறவுகள், அறிமுகம் இல்லாத அந்நியர்கள், கிடைத்த ஊக்கம் அளித்த பாராட்டுதல்கள், தொடர்ந்து போராடி முன்னேறவேண்டும் என்று தூண்டுதலாக திகழ்ந்த குறை கூறிய, தவறுதல்களை சுட்டிக் காட்டிய விமர்சனங்கள் போன்ற பல்வேறு விவரங்கள் அனுபவித்தவர் வாயிலாக அறிந்துக் கொள்வதைப்போல பெரிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் வாழ்க்கையில், தொழிலில் முன்னேற துடிப்பவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என்பது உண்மை.
அதற்கு வெற்றியை நோக்கி செல்ல ஆசைப்படுபவர் பிறரிடமிருந்து அவர்களுடைய அனுபவத்தை அறிந்துக்கொள்ள சிரத்தை காட்டவேண்டும்.
அந்த குறிப்பிட்ட நபரை சந்தித்து அவருக்கு உரிய மரியாதை அளித்து, அவருடைய அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளும்படி வேண்டி கேட்டுக்கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட அனுபவம் மிக்கவர்கள் எல்லோரும் கோர்வையாக பேசும் திறமை மற்றும் விவரிக்கும் சாதுரியம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆனால் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்கள் விலை மதிக்க முடியாத அபூர்பவமான செய்திகள், விவரங்கள் அடங்கியிருக்க கூடும்.
அவற்றை பற்றி அறிந்து, தெரிந்துக்கொள்ள மறுபடியும் சந்தர்பம் கிட்டுமா என்பதை உறுதியாக கூறமுடியாது. எனவே கிடைக்கும் அரிய வாய்ப்பை அறிந்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்வது புத்திசாலி தனம் மட்டும் அல்லாமல் அறிவை அதிகப்படுத்திக்கொள்ள உதவும்.
பிரபலம் அடைந்தவர்கள் அனுபவங்களை பற்றி புத்தகங்கள், சினிமாக்கள், சுயசரித்திரங்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.
சாமானிய மனிதர்களின் அனுபவப் பாடங்களை அறிந்துக் கொள்வதற்கு ஒரே வழி குறிப்பிட்ட மனிதருடன் பேசி, உரையாடி, சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்வது வாய்வழி உரையாடல் மட்டும்தான்.
அதை சரிவர பயன்படுத்திக் கொள்பவருக்கு புதிய அனுபவமாக அமைவதுடன் அடுத்தவரின் அனுபவத்தை அனுபவிக்கவும் முடியும்.
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உதவும்.
இக்கட்டான எதிர்பாரத நிகழ்வுகளை அந்த அனுபவஸ்தர் எப்படி எதிர்கொண்டு சமாளித்து கையாண்டு கடந்து வெற்றி பெற்றார் என்ற முக்கிய விவரங்கள் அறிந்த படியால் எப்படி வேறு கோணங்களில் சிந்தித்து முடிவுகள் எடுத்து செயல்படுத்தலாம் என்றும் யோசிக்க வைத்து நிலைமையை வலுப்படுத்தவும் வழி கிடைக்கும்.
எனவே, பிற அனுபவஸ்தர்களின் அனுபவங்களை தெரிந்துக் கொண்டு தேவையான சந்தர்பங்களில் உபயோகித்து பலன் பெறலாம்.