
ஒருவர் பேசுவதை கவனித்தால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு அறிய முடியும். மற்றவர்கள் பேசும்போது அவர்கள் குரல் பாவனை மூலம் அறிய முடியும். பெரும்பாலானவர்கள் புரிந்து கொள்வதைவிட நாம் பேசுவதற்கு பதில் கொடுப்பதற்காகவே கேட்கிறார்கள்.
நாம் பிறரிடம் பேசும்போது நம்முடைய கோபம், வருத்தம் மற்றும் ஆச்சர்யத்தை உடனடியாக அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.
நீங்கள் பதட்டத்தோடு உரையாடலில் ஈடுபடுகிறீர்களா? நம் இறுக்கமான தோள்கள், மற்றும் கைகளை வைக்கும் தோரணை நம்மைக் காட்டிக் கொடுக்கும். பேசும்போது அமைதியாகவும் ரிலாக்ஸ்டாகவும் இருப்பது நல்லது. உணர்வுபூர்வ புத்திசாலிகள் இந்த வித்யாசத்தை எளிதாக கணித்து விடுவர்.
உரையாடலின்போது கண்களை அலைபாயவிடுதலிலும், நம்பிக்கையோடும் விருப்பத்தோடும் கேட்கும்போது வைத்த கண் வாங்காமல் பார்த்தல் மேலும் நமக்கு தர்மசங்கடமாக இருந்தால் கீழ் நோக்கி பார்த்தல் போன்ற கண் அசைவுகளில் இருந்து அவர்கள் மற்றவரை நன்கு எடை போட்டுவிடுவர்.
சிரிக்கும்போது அது உண்மையாக இருந்தால் அது கண்ணில் தெரிந்து அடுத்தவர் மனதையும் ஊடுருவும். இதுவே போலியான சிரிப்பு என்றால் அது வாயளவிலேயே நின்றுவிடும். உணர்வுபூர்வ புத்திசாலிகள் உதட்டை மட்டும் பார்ப்பதில்லை. கண்களை கவனித்து சிரிப்பைப் பற்றி கணிப்பார்கள்.
உங்களை யாராவது எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் நன்றாக இருக்கிறேன் என்று நீங்கள் கூறுவது மேலோட்டமாகவா அல்லது உளப்பூர்வமாகவா என்பதை உடல் மொழியைப் பார்த்து உணர்வு பூர்வ புத்திசாலிகள் கண்டுகொள்வார்கள்.
உணர்வுபூர்வ புத்திசாலிகள் நெகடிவ் பேச்சால் சூழலை இனியதற்றதாக ஆக்குபவர்களையும், மேலும் நகைச்சுவையால் அந்த இடத்தையே கலக்கச் செய்வதற்கான சூழலை ஏற்படுத்து பவர்களையும் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்.
கூட்டத்தில் இருக்கும்போது யார் தங்கள் கூறுவதை மற்றவர்கள் கவனித்துக் கேட்கச் செய்யக்கூடிய செல்வாக்கு படைத்தவர்கள் என்பதை உணர்வுபூர்வ புத்திசாலிகள் எளிதாக அடையாளம் காண்பார்கள். இந்த மாதிரி மக்களை ஈர்ப்பவர்கள் சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்வார்கள்.
ஒரு சிலர் தங்கள் பிரச்னைகளை முன் வைக்கும்போது அதை நிஜமாகவே உணர்ந்தவர் யார் மற்றும் அலட்சியம் செய்பவர் யார் என்பதை உணர்வுபூர்வ புத்திசாலிகள் அறிவார்கள்.