
வெற்றி பெற்றவர்களின் தனித் திறமைகளை கூர்ந்து கவனித்தால் அவர்கள் நிதானத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் புலப்படும்.
தானங்களில் பல வகைகள் இருந்தாலும் எல்லோராலும் எல்லா வகை தானங்களிலும் தொடர்ந்து ஈடுபடுவது கடினமே.
ஆனால் பெரும்பாலான தனி நபர்களால் பின் பற்றக் கூடிய தானம் நிதானம் ஆகும்.
நிதானம் என்றால் சோம்பல் காப்பது என்றுபொருள் இல்லை.
பதட்டப்படாமல் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து தேவைக்கு உரிய செயல்படுவதற்கு உதவுவதே நிதானத்தின் சிறந்த பண்பாகும்.
நிதானமாக செயல்படுபவர்கள் காலப்போக்கில் அலசி, ஆராயந்து உரிய முடிவு எடுக்கும் திறமைகளை தங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறர்கள்.
இந்த திறமையுடன் அவர்கள் பின். பற்றும்
நிதானம், தன்னம்பிக்கை மேம்படவும், வலுவடையவும் பெரிதும் உதவுகின்றது.
நிதானத்தை கடைப்பிடிப்பவர்கள் சிந்தனை திறன் உபயோகிக்கிறவர்களாக மாறுவதால், நடவடிக்கைகள், சூழ்நிலைக்கு ஏற்பவும், எதிர்கொள்ளும் பிரச்னையின் பலம், பலவீனம் இவற்றுடன் தங்கள் கைவசம் இருக்கும் நேரத்தையும் கணக்கில் கொண்டு தேவைக்கு ஏற்ப வேகத்துடன் விவேகத்தை பயன்படுத்தி செயல்பட்டு பலனை பெறுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் நிதானத்தை கடைப்பிடிப்பவர்கள் முடிவு எவ்வாறு இருந்தாலும் மனம் தளராது அடுத்தகட்ட செயல் பாட்டுக்களை கவனிக்க புத்துணர்வோடு தயார் நிலையில் இருக்க பழகிக்கொள்கிறார்கள்.
நிதானம் அவர்களுக்கு உறுதியான செயல்பாட்டில் ஈடுபட மனோ தைரியம், கட்டுப்பாடு, சிந்தனை திறன் வளர பெரிதும் நம்பிக்கை அளிக்கின்றது.
நிதானத்தை கடைப் பிடிப்பவர்கள் நாளடைவில் பொறுமைசாலியாக மாறி, அதை கடைப் பிடிப்பத்தின் மூலம் செவ்வனே செயல்படும் திறமைகளை வளர்த்துக்கொண்டு பயன்கள் பெறுவதுடன், பிறர் பயன் அனுபவிக்க தனது செயல்பாடுகள் மூலம் நிரூபிக்கவும் செய்கிறார்கள்.
நிதானம் வாழ்கையில் வெற்றி பெற வலுவான அடித்தளம் அமைக்கின்றது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
நிதானத்தை கடைப்பிடிப்பவர்கள் எளிதில் தளரமாட்டார்கள், சோர்வாடைய மாட்டார்கள், விடாமுயற்சியை கை விடமாட்டார்கள்.