

நம் அன்றாட வாழ்க்கைப் பாதையில் விடாப்பிடியாக சாதிப்பவர்களைக் காணலாம். அவர்கள் சாதனைக்கு கை கொடுத்து துணை நிற்பதில் முக்கிய பங்கு அளிப்பது அவர்கள் கொண்டுள்ள பிடிவாத குணம்தான்.
அத்தகைய பிடிவாதம் பயக்கும் பங்கு பற்றி காண்போம்.
வாழ்க்கையில் வாத திறமை முக்கியம். அவை அளவான, தேவைக்கு உகந்த வாதத்திறமை அதன் உதவியை தரும் முன்னேற்றம் பெற.
அதேபோல் பிடிவாதம் முக்கிய பொறுப்பை வகிக்கின்றது. வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்ல.
பிடிவாதம் என்ற குணம்தான் எப்படிப்பட்ட பிரச்னைகள் உருவகினாலும் எதிர்கொண்டு போராட வேண்டும் என்ற உந்து சக்தி பெற்று களத்தில் துவளாமல் நின்று சாதித்து அடுத்து அடுத்த கட்டங்களுக்கு தேவையான நகர்வுகளை உருவாக்கி, செயல்படுத்தி சாதக முடிவை அடைய வைக்கின்றது.
எப்படியாவது சாதிக்கவேண்டும் என்ற பிடிவாத குணம் நடுவில் விட்டு விட்டு செல்ல அனுமதிப்பது இல்லை. உன்னால் முடியும் என்ற நேர்மறை எண்ணத்தை நம்ப வைத்து கைவிட்டு விடாமல் தொடர்ந்து செயல்பட வைக்கின்றது.
விடாப்பிடி என்ற உறுதியான தன்மை (tenacity) கொண்டவர்கள் எந்த இயலாத சூழ்நிலையிலும் முடியாது என்று கருதாமல் தங்களிடம் குடிகொண்டுள்ள பிடிவாத தன்மை அளிக்கும் தன்னம்பிக்கையின் மூலம் எவ்வித பயமும் இன்றி மனோதைரியத்துடன் எந்தவொரு பிரச்னையான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு, அவற்றை சரி செய்து சமாளிப்பதற்கு உரிய சக்தியை பிடிவாத குணம் கண்டிப்பாக அளிக்கும்.
அது மட்டும் அல்லாமல் பிடிவாதம் எவ்வாறாவது செயல்பட்டு இலக்கை அடைவது, முடிவை எட்டுவது போன்றவை களுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ற அழுத்தம் உருவாக காரணமாக திகழ்கின்றது. பிடிவாதம் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கு தேவையான செறிவு, ஒரு முகப்படுத்துதல் (concentration) தன்மை ஏற்பட வழி காட்டுகின்றது.
இவற்றுடன் சாதிக்க உதவும் மாற்று கருத்துக்கள், வழி முறைகள் பற்றியும் சிந்திக்க தூண்டுவதுடன் செயல்படுத்தி இலக்கை அடைந்து மகிழவும் வைக்கின்றது.
பல சாதனையாளர்கள் கடினமான முடியாத சூழ்நிலைகளிலும் போராடி வெற்றி வாகை சூடியதில் அவர்களது உள்ளமைந்த பிடிவாத குணம் (inbuilt stubbornness) அதற்குரிய பங்கை ஆற்றியுள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.