முயற்சியினால் கிடைக்கும் வெற்றி வலிமையானது!

Success through effort is powerful!
Motivational articles
Published on

முயற்சி செய்து நாளடைவில் பழகி தொடர்ந்து வந்தால் பலன் கிட்டும் என்பதை உண்மை நிகழ்வின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது.

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் 12 மாடிகள். ஒவ்வொரு தளத்திலும் (Floor) 4 ப்ளாட்டுக்கள் (Flat). ஒன்பதாவது தளத்தில் வசித்த ஒருவர் குடும்பத்தில் நான்கு நபர்கள். கணவன், மனைவி, பிள்ளை மற்றும் பெண்.

கணவன் அலுவலகத்தில் வேலை செய்கிறார். மின்சார ரயிலில் பயணிப்பார். மகன், மகள் இருவரும் அவர்கள் கல்லூரிக்கு பஸ்களில் செல்வார்கள். மனைவி வீட்டு நிர்வாகம். அவரும் வெளியே சென்று வருவார்.

கட்டுக் கோப்பான குடும்பம். திட்டமிட்டு செயல்படுவார்கள். இரவில் நான்கு நபர்களும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்கள். அப்பொழுது டி.வி, பொபைல் போன்களுக்கு கட்டாய ரெஸ்ட் கொடுத்துவிடுவார்கள்.

உண்ணும்பொழுது அன்று நடந்தவை பற்றியும், வேறு தேவையான விஷயங்கள் பற்றியும் பேசுவார்கள். முக்கிய முடிவுகளை கணவன் மனைவி, மகன் மற்றும் மகள் அவர்களிடம் கூறி அவர்கள் யோசனைகள் பெற்று கலந்து ஆலோசித்து எடுப்பார். நால்வரிடமும் ஒரு ஒற்றுமை அந்த கட்டிடத்தில் வசித்த எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.

சிலர் பாராட்டினார்கள். சிலர் வியந்தனர். பலர் அவர்கள் அப்படி சென்றதும் கமெண்ட்டுக்களும் அடித்தனர். பிழைக்கவும், என்ஜாய் செய்யவும் தெரியாதவர்கள் என்று. இது அவர்கள் காதுகளில் விழுந்தும் அந்த நால்வரும் கவலைபடாமல் அதை கடமையாக கருதி பின்பற்றி வந்தனர்.

ஆரம்பக்கட்டத்தில் அது அவர்களுக்கு கடினமாக இருந்தது. சிரமம் பார்க்காமல் எடுத்த முயற்சியிலிருந்து பின் வாங்காமல் விடா முயற்சியாக நடைப்படுத்தினர். ஆமாம். அவர்கள் நடைப்படுத்தியது நடைப்பயிற்சி சம்பந்தப்பட்டது.

கட்டிடத்தில் இரண்டு லிப்ட்டுக்கள் இருந்தும், இந்த நால்வரும் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு ஒன்பது மாடிக்கும் சென்றுவர மாடிப்படிகளை மட்டுமே பயன்படுத்துவது என்று.

இதையும் படியுங்கள்:
எண்கள் வெறும் குறிகளே, நீ ஒரு பொக்கிஷம்: மாணவர்களுக்கான தன்னம்பிக்கை!
Success through effort is powerful!

பயன்படுத்த துவங்கி முயற்சி தொடர்ந்து பயணிக்க நால்வருக்கும் நடைப்பயிற்சி (மாடிப் படிகளில் ஏறி, இறங்குவது) நல்ல பலன்களை கொடுக்க ஆரம்பித்தத்து. உடல் நலம் சீராக இருந்தது. அவர்கள் டாக்டர் வீட்டுப் பக்கமே போக வேண்டியிருக்கவில்லை. அனாவசியமாக எடை கூடவில்லை.

இரவில் நிம்மதியாக உறக்கம் வந்தது. பலரை படுத்தும் பலவித நோய்கள் இவர்களை அண்டவும், படுத்தவும் இல்லை.

தீடிரென்று ஒருமுறை லிப்ட்டு மேஜர் ரிப்பேர் ஆகி நீர் சப்ளை, மின்சாரம் ப்ளாட்டுகளுக்கு நின்றுவிட்டது, அந்த கட்டிடத்தில். லிப்ட்டுக்களும் இயங்கவில்லை. குடியிருப்பவர்கள் கீழே வந்து பக்கெட்டுக்களில் நீர் எடுத்து செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.

குடியிருப்பவர்கள் மாடிப்படிகளில் அவ்வளவாக நடந்து பழக்கம் இல்லாததால் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க அங்கு அங்கே நின்று பக்கெடுக்களில் நீர் எடுத்துக்கொண்டு சென்ற நிகழ்வுகள் பரிதாபமாக காட்சி அளித்தன.

அன்று இவர்கள் தினந்தோறும் மாடிப்படிகளை உபயோகித்து நடந்து சென்றதை பார்த்து சிரித்தவர்களை பார்த்து இவர்கள் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டனர்.

இருந்தும் அந்த நால்வரும் பிற நபர்களுக்காக தங்களால் முடிந்த அளவு கீழேயிருந்து பக்கெட்டுக்களில் நீர் பிடித்து மாடிப்படிகளில் ஏறி எடுத்து வந்து, அவதிபட்டவர்களுக்கு கொடுத்து அபயம் அளித்தனர்.

உண்மையான ஈடுப்பாட்டுடன் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு இடைவிடாமல் முயற்சியை தொடர்ந்தால் பலன் நிச்சயம் கிடைக்கும் என்று நம்பினார்கள். பின்பற்றி பலன்களை அனுபவித்தனர், இந்த நால்வரும்.

பிறரின் விமர்சனங்களுக்கு தக்க சந்தர்ப்பத்தில் தங்களது திறமைகளால் உதவி செய்து அவர்களுக்கு புரியவும் வைத்தனர்.

இதையும் படியுங்கள்:
மஹாபாரதத்தின் மோடிவேஷன் உண்மைகள்!
Success through effort is powerful!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com