ஒரு சிறந்த பெற்றோராக நீங்கள் சொல்ல வேண்டிய அந்த ஒரு வார்த்தை!

Lifestyle articles
Motivational articles
Published on

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைத்தான் மண்ணில் பிறக்கையிலே… அவர் நல்லவராவதும், தீயவராவதும் ‘பெற்றோர்’ வளர்ப்பதிலே....”

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல  விஷயங்களை சொல்லித்தர வேண்டியது அவசியம். ஆனால், அதை விட மிகவும் முக்கியமானது. அந்த விஷயத்தை நாம் எப்படி சொல்கிறோம் என்பதுதான். எல்லா பிள்ளைகளுக்குமே முதலில் தங்கள் பெற்றோர்களின் வார்த்தைகள்தான் முக்கியமானவை.

மற்றவர்களைவிட பெற்றோர்களின் கடுமையான வார்த்தைகளே பிள்ளைகளை அதிகமாகப் பாதிக்கிறது. அதேபோல் அவர்களின் அன்பான வார்த்தைகளே அவர்களை நல்ல மனிதனாக மாற்றுகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் சொல்ல வேண்டிய வார்த்தைகளின் முறைகளைப் பற்றி பார்ப்போம்.

1. “படிச்சா வாழ்க்கையில முன்னேறலாம்..”. ஒரு குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால் அப்போது இதுபோன்ற வார்த்தைகளை சொல்லலாம். அதைவிட்டுவிட்டு “படிக்கலன்னா உனக்கு வேலையே கிடைக்காது. காசு இல்லாம நடு ரோட்லத்தான் நிப்ப” போன்ற காரசாரமான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது.

2.   “உழைத்தால் நிறைய சம்பாதிக்கலாம்” என்று கூறுவது நல்லது. உழைக்கலன்னா பிச்சதான் எடுக்கனும் போன்ற வார்த்தைகளைத் தவிர்த்துவிடுவது அவசியம்.

3. “ நீ நல்ல வேலைக்குப் போனீன்னா, நாலு பேருக்கு உதவி செய்யலாம்” போன்ற நல்ல வார்த்தையையும் நல்ல பழக்கங்களையும் சொல்லித் தர வேண்டும். அப்படி இல்லாமல் “ நீ எந்த வேலைக்கும் லாயக்கு இல்லை.” என்று கூறினால் உங்கள் பிள்ளைக்கு தன்னம்பிக்கை உணர்வு இல்லாமலே போய்விடும்.

இதையும் படியுங்கள்:
கோபப்படும்போது உங்கள் உடலில் நடக்கும் அந்த பயங்கரம் தெரியுமா?
Lifestyle articles

4.  “ஃபெயில் ஆய்ட்டா உன்ன ஸ்கூலுக்கே அனுப்ப மாட்டேன் “ என்று மிரட்டுவதைவிட “ நீ கண்டிப்பா பாஸ் ஆகிடுவா, எனக்கு உன் மேல நம்பிக்க இருக்கு” என்று கூறினால் பிள்ளைகளுக்கு பய உணர்வு என்பதே இல்லாமல் போய்விடும்.

5.  “பணம் இருந்தா உன் தேவைகள பூர்த்து செஞ்சுக்கலாம்” என்று கூறினாலே பிள்ளைகளுக்கு படிப்பிலும் வேலைகளிலும் ஆர்வம் வர ஆரம்பிக்கும். “பணம் இல்லன்னா யாரும் உன்ன மதிக்கமாட்டாங்க” என்று கூறினால் பய உணர்வே மிஞ்சும்.

6.  “எல்லா ஆட்களையும் உறவுகளையும் சமமாப் பாத்துக்கிட்டாலே, உன்ன எல்லா சந்தர்ப்பத்திலயும் தனி மரியாதையோட நடத்துவாங்க” என்று பிள்ளைகளுக்கு சொல்லி மரியாதையின் மதிப்பை உயர்த்த வேண்டும்.

7.  “ நாங்க போனது அப்புறம் உனக்கு யாரும் இல்ல..” என்று கூறுவதை நிறுத்திவிட்டு “ நீ எப்படி மத்தவங்க கிட்ட பழகுறீயோ அது பொறுத்துதான் மத்தவங்களும் உன்கிட்ட பழகுவாங்க. ஒற்றுமையா வாழக்கத்துக்கோ” என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.

8. ணம் என்ன மரத்திலையா காய்க்குது? என்று பிள்ளைகளிடம் சொல்லக்கூடாது. அதற்கு பதிலாக ஒரு போதிய பணம் கொடுத்து பிள்ளைகளுடைய தேவைகளை அவர்களே பார்க்கும்படி கூற வேண்டும். இப்படி செய்வதால் பிள்ளைகள் பணத்தின் அருமையை தானாகவே புரிந்துக்கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
முன்னேற நினைக்கும் ஒருவரின் மிகச்சிறந்த ஆயுதம்: நிதானம்!
Lifestyle articles

9.  “ உன்னோட திமிருக்கு நீ எப்படி போகப்போற பாரு” என்று கூறுவது மிகவும் மோசமான ஒன்று. அதற்குப் பதிலாக, “ உன் திறமைக்கு நல்ல இடத்துக்குத்தான் போவ..” என்று கூறுவது மிகவும் நல்லது.

எப்போதும் நம் வீட்டு பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, எல்லா பிள்ளைகளுக்குமே இதுபோன்ற நல்ல வார்த்தைகளையே கூறுவது அவசியம்.

-பாரதி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com