மன அழுத்தத்தைக் குறைக்கும் மாமருந்து: நேர்மறை எண்ணங்கள்!

Positive thoughts!
Motivational articles
Published on

ம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களும் நல்லதாகவே நடக்கவேண்டும் என நினைப்பது இயற்கை. அதற்கு நாம் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது அவசியம். நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

அவர்கள் செய்தித்தாளின் முதல் பக்கத்தை மட்டும் படிப்பவர்களாக இருக்கமாட்டார்கள். தொடர்ந்து வரும் அனைத்துப் பக்கங்களையும் படித்து புன்முறுவலுடன் சமுதாயத்தின் மீது நம்பிக்கை கொள்பவர்களாக இருப்பர்.

அவர்கள் எதிர்மறை சிந்தனை நிறைந்தவர்களுடன் நேரம் செலவிடுவதை முடிந்தவரை குறைத்துக்கொள்வர்.

வன்முறை காட்சிகள் நிறைந்த டி.வி. ஷோ மற்றும் திரைப்படங்கள் பார்ப்பதை அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.

அவர்களின் சிந்தனை மற்றும் செயல்கள் நேர்மறை மனோபாவம் கொண்டதாகவே இருக்கும். சிறிய அளவில் காய்கறி செடிகள் வைத்து வளர்ப்பது, இரத்ததானம் செய்வது, ஆதரவற்ற முதியோர் உள்ள வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வது, பார்வையற்ற மனிதருக்கு சாலையை கடக்க உதவி புரிவது போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.

அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்காமல், உடனடியாக அவற்றை தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்து, செயல்படுத்தி, வெற்றியும் பெறுவர்.

நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள், அன்பு செலுத்த தகுதியற்ற, எதிர்மறை எண்ணங்கள் கொண்ட மனிதர்களிடமும் அன்பை செலுத்தி அவர்களிடம் நேர்மறை சக்தியை உருவாக்க எப்பொழுதும் பாடுபடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
நம் பலத்தை நாம் அறிவோம்: தன்னம்பிக்கையின் வெளிப்பாடு!
Positive thoughts!

நேர்மறையானவர்கள் முகத்தில் எப்பொழுதும் ஒரு 'பளிச்' என்ற ஸ்மைல் குடிகொண்டிருக்கும். அந்த சிரிப்பு, சந்திக்கும் நபர்களின் கவலையை மறக்க உதவும்.

மற்றவர்களிடம் காணும் சிறிதளவு சிறந்த விஷயங்களையும் அவர்கள் பாராட்டி ஊக்குவிக்கத் தவறுவதில்லை. மற்றவர்களிடம் உள்ள எதிர்மறை எண்ணங்களை குறைப்பதற்கு அவர்களிடம் அடிக்கடி, "ஐ லவ் யு" என்ற சொற்களை கூறுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.

சார்லி சாப்ளின், சந்திரபாபு, நாகேஷ் போன்ற சிரிப்பு நடிகர்கள் நடித்த காமெடி படங்களை பார்த்து ரசித்து சிரிப்பது அவர்களின் வழக்கங்களில் ஒன்றாக இருக்கும். சிரித்து மகிழ்வது மன அழுத்தத்தைக் குறைக்கும் மா மருந்து என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

மேற்கூறிய விஷயங்களை மனதிற்கொண்டு நீங்களும் செயல்பட ஆரம்பித்தால் உங்கள் மனதிலும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்க வாய்ப்புகள் உருவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com