
வெற்றி…. வெற்றி… வெற்றி… , இந்த வார்த்தையை விரும்பாதவர் எவர்?
முதன் முதலாக பராசக்தி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உச்சரித்த முதல் வசன வார்த்தை ”சக்ஸஸ்” அதாவது வெற்றி என்பதாகும்.
இந்த வெற்றியை வரவைக்க அல்லது வந்த வெற்றியை தக்கவைத்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்களேன்!
ஒரு தொழில் முனைவோர், தம்மால் நிறுவப் பெறும் நிறுவனத்திற்கு தகுந்த வெற்றியைப் பெற உழைப்பையும்… நேரத்தையும் செலவிடுகிறார். ஆதலால் இயற்கையாகவே அவரை வெற்றித் திருமகள் அணைத்துக்கொள்கிறார்.
ஒரு சில மனிதர்களில் சில நல்ல உழைப்பாளர்களும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் ஒருவர் உழைப்பு ஆப்பிள் பழத்தின் சுவை போலவும், இன்னொருவர் உழைப்பு ஆரஞ்சு பழத்தின் சுவை போலவும் உள்ளது. இதில் எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள் என்பது உங்கள் கையில்தான் உள்ளது.
ஒரு சிலரிடம் நேர்மறை ஆற்றல்கள் ஒரு சிலரிடம் எதிர்மறை ஆற்றல்கள் கலந்தே இருக்கும்.
உதாரணமாக நீங்கள் கடை வீதியைக் கடந்து செல்கிறீர்கள். எதிரே… ”இன்னாப்பா ! ஜோஷ் ! வியாபாரம் பிய்ச்சுகிட்டு போகுதாமே! நல்லா வளமா இரு!” என்று மனதார உரையாடுகிறார். அதைக் கேட்ட மகிழ்ச்சியில் சிறிது தூரம் கடந்தவுடன்…. எதிரே! ”இன்னா ஜோஷ்! வியாபாரம் படுத்துகிட்டதாமே! இப்பத்தான் காதில விழுந்த்து” என்று துக்கம் விசாரிப்பது போல உரையாடுகிறார். இருவரில் யாருடைய தாக்கம் உங்கள் உள் மனதில் பதியும்.
நேர்மறையாக உரையாடியவர் உரையாடல் உங்கள் மனதில் பதிந்தால் வெற்றிதான். அதைவிடுத்து எதிர்மறை உரையாடலை உங்கள் உள்ளத்தில் தேக்கிவிட்டால்… அவர் சொற்படியே உங்கள் நிறுவனம் படுத்துவிடும். நேர்மறை பேச்சு மனதிற்குள்ளாகவும், எதிர்மறைப் பேச்சை காற்றிலே பறக்க விடுங்கள்… வெற்றிதான்.
தொழில் முனைவோர், அவருடைய தொழில் அல்லது வணிகம் தொடர்பாக சில கேள்விகளை மனதிற்குள் எழுப்பி கொண்டே இருக்கவேண்டும். ஒரு சிலர் தரும் ஐடியாக்கள் உங்கள் மனதில் நிறுத்தி ”இந்த ஐடியா எந்த விதத்தில் நமது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ” என உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டு பாருங்கள். அந்த கேள்விக்கு பதில் கிடைக்கும் அல்லது புது ஐடியா கூட தோன்றலாம்.
இதைத்தான் அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கேள்வி கேட்பதை நிறுத்திவிடாதே என்றார். ” ஒரு மரத்தில் இருந்து கீழே விழந்த ஆப்பிளை எடுத்து உடனே சாப்பிட்டு சுவைத்தாரா? இல்லையே ! இந்த ஆப்பிள் ஏன் மேலிருந்து கீழே விழுந்தது. விழுந்ததற்கான காரணம் என்ன கேள்விகளை அடுக்கினார். விடை புவியீர்ப்பு விசை என கண்டறிந்தார்.
ஒரு சிலர் கனவு காண்பவர்களாக வாழ்வார்கள். அந்த கனவு காண்பவர்களை முன் மாதிரியாக எடுத்து கொள்ளுங்கள். உங்களது சிறிய தொழிற்சாலை… பத்து பேர் வேலை செய்கிறார்களா? நீங்கள் அதில் பத்தாயிரம் பேர் வேலை செய்வதாகவும்… தொழில் நிமித்தமாக ஆகாய விமானத்தில் அடிக்கடி பறப்பதாகவும் கனவு காணுங்கள். ஒர் நாளில் நிச்சயம் வெற்றிதான். இதைத்தான் நமது ஐயா அப்துல் கலாம் அவர்களும் ”கனவு காணுங்கள்” என்றார்.
”வெற்றித் திருமகள் உங்களைத்தேடி வர உங்களை நீங்கள் மேற்கண்டவாறு மேம்படுத்தி கொள்ளுங்களேன்!”