
வாழ்க்கையில் நாம் பல பாடங்களை கற்று அதன்படி வாழ்க்கை எனும் வண்டியை ஓட்டி வருகிறோம். பலவித உதிாிபாகங்கள் கொண்டதுதான் ஒரு வண்டி. அதில் ஒரு பாகம் பழுதானால்கூட அது இயங்காது. அதுபோலத்தான் வாழ்க்கை. அதை பழுதில்லாமல் இயக்குவது நம் கையில்தான் உள்ளது. அதுதான் ஆண்டவன் நமக்கு கொடுத்த பருவத்தோ்வாகும். தோ்வில் தோல்வி அடைந்தால் அரியர் எழுதி தோ்வாகலாம்.
ஆனால் வாழ்க்கையில் தோல்வியோ, சறுக்கலோ, அடைந்தால் அதிலிருந்து மீளவேண்டும். அப்போது நமக்கு தெளிவான சிந்தனை வருவதுடன், பலரது ஆலோசனைகளும் சில நேரங்களில் தேவைப்படும். அதுவே நம்மை கைதூக்கிவிடும்.
நமக்கு தொியாத ஒன்று நம்மைவிட படிக்காதவர் களிடமோ, சராசரிமனிதனிடமோ, அடுத்த வீட்டுக்காரரிடமோ, நண்பா்களிடமோ, அல்லது கூடவே பணிபுாியும் கீழ்நிலை ஊழியரிடமோ, ஏன் நமது துணைவியாாிடமோகூட இருக்கலாம். அதேக்கேட்டு தொிந்து கொள்வதால் நமது கெளரவம் குறைந்துவிடாது.
நாம் அதைவிட்டு அவர்களிடமிருக்கும் எதிர்மறை எண்ணங்களையும் பொறாமை குணத்தையும், சோம்பேறித்தனத்தையும், அவநம்பிக்கையையும், கற்றுக்கொள்கிறோம். அது சரியாக வராது. அது நல்லதுமல்ல.
மறைந்த நடிகா் நகேஷ் அவர்கள் திருவிளையாடல் படத்தில் சிவாஜியுடன் தருமி வேடத்தில் நடித்ததைப் பா்த்து சிவாஜியே பாராட்டினாராம். என்னைவிட நாகேஷ் சிறப்பாக நடித்துள்ளாா் என பாராட்டினாராம்.
செய்தியாளர் சந்திப்பில் நாகேஷை தருமி வேடம் பற்றி கேட்டபோது, கோவில் வாசலில் ஒரு மனநலம் குன்றியவர் ஏதாவது புலம்பிக்கொண்டே இருப்பாா். அதை தினசரி பாா்ப்பேன்.
அவரையே ரோல் மாடலாக வைத்து நடித்தேன் என்றாராம் தன்னடக்கத்துடன். அதேபோல நாம் பலரிடம் நம்மைவிட விபரம் குறைந்த நபா்களிடம் உள்ள நல்ல குணங்களையும், ஆலோசணைகளையும் கேட்டு அதில் நமக்கு பயனுள்ள விஷயங்களை மட்டும் தோ்வு செய்து கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறேதுமில்லை.அதை விடுத்து அவர் என்னைவிட எந்த விதத்தில் உயர்ந்தவர்,
படித்தவரா? வயதில் குறைவானவா்தானே, நான் ஏன் அவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என ஈகோ பாா்த்தால் நம்மை நாமே நம்பவில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம் அதுவே சிறந்தது. தொியாததை தொிந்ததுபோல காட்டிக்கொள்வதை விட தொிந்தவரிடம் கேட்டு தெளிவாக செயல்படுவதே சிறப்பான ஒன்று.
ஈகோவை "கோ பேக்" ஈகோ என சொல்லுங்களேன்!