சோதனைகளைச் சாதனைகளாக்கும் மந்திரம்!

Lifestyle articles
Motivational articles
Published on

ரு துறையில் சாதிக்க விரும்புவோருக்கு மட்டுமே ஆயிரம் தடைகள் வரும். அதனை கஷ்டங்களாக கருதினால் அடுத்தபடி மறைந்துவிடும். இதுவே அதனை பரீட்சைகளாகவும், பாடங்களாகவும் கருதினால் வெற்றியின் ரகசியம் தெரியவரும்.

நம் நடைமுறை வாழ்விலேயே சந்திக்கும் பல கஷ்டங்களுக்கு இடையில் சாதிக்கமுடியும் என பல விஷயங்கள் நடந்திருக்கும். ஆனால் நாம் கவனித்திருக்கமாட்டோம். அது பெரிய விஷயங்களுக்கு மட்டும் அல்ல அன்றாடம் நடக்கும் சில சிறிய விஷயங்களுக்கும் பொருந்தும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனவருக்குமே இது பொருந்தும்.

பல கஷ்டங்களின் தொடக்கம்தான் வெற்றி. பல வெற்றிகளின் தொடக்கம் தான் சாதனைகள். சாதனைகள் தான் உங்கள் பெயரை இந்த உலகத்தில் எப்போதும் நிலைத்து நிற்க வைக்கும் கருவிகள். பிறக்கும் போது நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு மட்டுமே நம்மை யாரென்று தெரியும். நாம் இறக்கும் பொழுது இந்த உலகத்திற்கே நம்மை தெரியப்படுத்துவது தான் நம் பிறப்பிற்கான இலட்சியம்.

இலக்கை வாழ்வியல் முறைக்கேற்ப இரண்டாக பிரிக்கலாம். அமைதியான சாதாரண வாழ்க்கையை விரும்புவது ஒருவகையான இலக்கு. குடும்பம் , அமைதி, நிம்மதியான வாழ்க்கை என ஒரு நல்ல சீரான வாழ்க்கையையே விரும்புவார்கள். இப்படிப்பட்டவர் களுக்கு ஒருவிதமான மனம் சார்ந்த பிரச்சனைகள், குடும்பம் சார்ந்த பிரச்சனைகள், வேலையில் பிரச்சனைகள் இருக்கும். இதை சமாளிப்பதே பெரும் தலைவழியாக இருக்கும்.

அடுத்து நாம் தொடப்போகும் நமது இலட்சியம், மிக உயரத்தில் இருக்கும்போது பல தடைகள் பிரச்னைகளாக உருவெடுக்கும்.

இந்த இரு சூழ்நிலைகளை கையாள்வதை பொறுத்தே நம் சாதனை பாதையும், அமைதி பாதையும் கஷ்டங்களுக்கு இடையே சீராக செல்லும்.

அனைத்து வசதிகள் இருந்து எளிதாக ஒரு விஷயம் கிடைத்தால் அது நிரந்தரமானதாக இருக்காது. சிலசமயம் இலக்கிற்கான வசதிகள் இருக்கும் ஆனால் வாழ்க்கை வேறு விதத்தில் கஷ்டங்கள் தரும். அப்போது நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள்:

1.இதுவும் கடந்து போகும்!

2.எல்லாம் நன்மைக்கே!

3. கஷ்டங்கள் வெற்றியின் முதற்படி.

4.மீண்டும் முயற்சிப்போம்!!

5. வெற்றி நமக்கே!

இதையும் படியுங்கள்:
பயம் நீக்கி, நேர்மறையுடன் பயணித்தால் வெற்றி நிச்சயம்!
Lifestyle articles

சாதனை பாதையில் வரும் துன்பங்களை எப்படி கையாள்வது:

ஒரு பெரிய வாய்ப்பு உங்களை விட்டு நழுவும்போது எல்லாம் முடிந்ததாக எண்ணுவீர்கள். அப்படியிருக்கும்போது ஒரு வாரத்திற்கு உங்கள் கணவுகளை பற்றி எண்ணுவதை நிறுத்தி வைய்யுங்கள். அந்த ஒரு வாரம் பிடித்ததை செய்துகொண்டு , பிடித்த இடங்களுக்கு சென்றுகொண்டு, பிடித்த பாடல்களைக் கேட்டுகொண்டு நேரத்தை செலவிடுங்கள். அந்த ஒரு வாரம் சென்ற பிறகு கம் பேக் கொடுங்கள். இடைவெளியின் நீளம் உங்கள் கம் பேக்கை மிக ஸ்ட்ராங்காக கொடுக்க வேண்டும்.

மனதில் இருப்பதை மனம் திறந்து யாரிடமாவது சொல்லுங்கள்.இல்லையனில் ஒரு காகிதத்தில் மனதில் தோன்றும் நன்மை தீமை என அனைத்தையும் எழுதுங்கள். 

உங்கள் இலக்கில் புதிய யோசனைகள் செய்யும் வேளையில் ஒரு ரூமிலோ வீட்டிலோ இருக்காமல் வெளியில் வந்து இயற்கையுடன் இணையுங்கள். அது உங்கள் மனதையும் மூளையையும் புத்துணர்வாக்கும்.

உங்கள் வெற்றி பாதையில் பயணிக்கும் பொழுது கஷ்டம் தரும் யாராயினும் சிறிது காலம் அவர்களிடமிருந்து விலகியிருங்கள்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகளை ஒரு பட்டியலிட்டு வைத்துக்கொள்ளுங்கள். முன்னேற்றம் இல்லாதபோது  அதை நினைத்து வருந்தாமல், என்ன தவறு இருக்கும் என்று அதைவைத்து கண்டுபிடிக்க உதவும்.

சோர்வாகும்போது தளராமல் “எதனால்”,”ஏன்”,”எப்படி”  போன்ற கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டுக்கொள்ளுங்கள்.அது ஒரு நல்ல வழியை காட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com