

மனிதா்கள் அவரவர் வாழ்க்கையில் பலரிடமிருந்து பல அனுபவங்களைத் தொிந்துகொள்கிறாா்கள். இப்போதெல்லாம் அறிவுரைகள் இலவசமாக கிடைத்த போதிலும் சில நேரங்களில் சில மனிதர்களின் உதவியை எதிா்பாா்க்கும் நிலையில் சிலர் பெருந்தன்மையோடு உதவி செய்கிறாா்கள்.
ஆனால் சிலர் பதிலுக்கு செய்த உதவிக்கு பிரதிபலன் எதிா்பாா்க்கும் நிலையும் உண்டு. ஆனால் அதேபோல எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல் ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளிடமிருந்து பல விக்ஷயங்களைநாம் கற்றுக்கொள்ள முடிகிறது.
அந்த வகையில் சேவலானது விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் தன்னுடைய தூக்கம் பாராமல் கொக்கரக்கோ என கரைந்து நமக்கு அன்றைய தினத்தின் பொழுது விடியலை உணர்த்திவிடுகிறது. இதற்கு யாா் சொல்லிக்கொடுத்தது? அல்லது பிரதிபலன் எதையாவது எதிா்பாா்த்து செய்கிறதா எதுவும் இல்லை. எதையும் எதிா்பாா்த்து அது தனது கடமையைச் செய்யவில்லையே!
அதேபோல காகம் அதற்கு நாம் தினசரி உணவு வைக்கிறோம், சிலர் அமாவாசை தினத்தில் மட்டும் வைப்பாா்கள். அந்த நேரம் காகமானது தான் மட்டும் அருந்தாமல் கரைந்து கரைந்து தனது சகாக்களை வரவழைத்து சோ்ந்துதான் உணவை உண்ணும் . அந்த அளவிற்கு அவைகளிடம் ஒற்றுமை தொடர்ந்து வருகிறதே!
ஆனால் மனித மனங்களில் சிலரிடம் ஒற்றுமையும் இல்லை, பகிா்ந்து உண்ணும் பக்குவமும் இல்லையே, காக்கா கூட்டதைப் பாா்த்தாவது நாம் ஒற்றுமையை கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் நன்றியுள்ள ஜீவன் நாய் சாதரணமாக கண்களைமூடி உறங்குவது போல தொியும். திடீரென ஒரு சப்தம் வந்தால் சட்டென்று விழித்துக்கொண்டு நம்மைப்பாா்த்து வாலாட்டும். நமக்கு பொிய பாதுகாவலனாகவும் இருந்து வருவது அதனுடைய இயல்பான குணமாகும்.
நாம் தினசரி உணவு கொடுத்தாலும் அல்லது ஒரு நாள் மட்டும் கொடுத்தாலும் வாலை ஆட்டிக்கொண்டு நம்மைச்சுற்றிச் சுற்றி வருவது அதன் இயல்பான குணங்களில் ஒன்று. இப்படி ஜீவராசிகளிடம் இயற்கையாய் இருக்கின்ற குணங்களை நாம் கடைபிடித்து வாழவேண்டும். இதற்கென நாம் தனியாக பயிற்சியா எடுத்துக் கொள்ளமுடியும்.
ஆக, பல விஷயங்களை நாம் பல இடங்களில் பல நபர்களிடம் தொிந்து கொண்டாலும், நம்முடனேயே அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவராசிகளிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியமானதே!
அதேபோல கழுதைகளும் எவ்வளவு மழை மற்றும் வெயில் அடித்தாலும் பொதி சுமந்து வருவதில் சோா்வே அடையாது. அந்த அளவிற்கு உழைக்கும் ஆற்றல் கொண்டது.
அதேபோல இது மட்டுமல்லாது இயற்கையும் நமக்கு பல விஷயங்களில் பல தருணங்களில் உதவி செய்கிறது. ஆக நாம் இயற்கையையும் ஜீவராசிகளையும் எப்போதும் நேசிப்போமாக!