காஞ்சி பெரியவர் சொன்ன "மனசு ரகசியம்"... இதை தெரிஞ்சா கஷ்டமே இல்ல!

Motivational articles
Mind is secret
Published on

னமே மனிதனை பல வழிகளில் ஆட்டிப்படைக்கிறது.  மனம்போன போக்கில் மனிதன் போவது நல்லதல்ல.!  மனதை ஒரு நிலைப்படுத்தும் தன்மையை மனிதன் கற்றுக்கொள்ள வேண்டும்.

மனதளவில் ஒரு உயிருக்கும் தீங்கு நினைப்பதோ, மனதார அடுத்தவருக்கு தீங்கு இழைப்பதோ நாம் செய்யும் பாவக்கணக்கில் அன்றாடம் சேமிக்கப்படுகிது.

நல்ல மனது இறைவன் படைத்தது. அதை நல்ல விஷயங்களுக்கே செலவிடுங்கள்.

மனதை சுத்தமாக வைத்துக்கொள்ளத் தொிந்தாலே இறைவன் அருள் சப்தமில்லாமல் நம் வீடு தேடிவரும்.

நல்லதை நினையுங்கள், நல்லதை பேசுங்கள். மனம்போன போக்கில் தாறுமாறான மனசாட்சிக்கு விரோதமான செயலில் இறங்காதீா்கள். அது மகாபாவம்!

பாவத்தை நீங்கள் சுமப்பதோடு அதை நீண்ட கால சேமிப்பாக இருப்பு கட்டி வைத்துவிடாதீா்கள்.  நமது சந்ததிகளுக்கு பணமூட்டையை கட்டி வைக்காவிட்டாலும் பரவாயில்லை.

அவர்கள், அவர்களுடைய உழைப்பின் மேன்மையால் எப்படியோ முன்னேறி விடுவாா்கள். மாறாக பாவமூட்டையை கட்டி வைக்காதீா்கள் அது காலா காலத்திற்கும் நல்லதல்ல.

மனது சுத்தமாக வைத்துக்கொள்வதே காலத்திற்கும் நல்லது.

இதைத்தான் ஶ்ரீ காஞ்சி ஶ்ரீஶ்ரீ பரமாச்சாா்ய மஹா ஸ்வாமிகள் தனது அருளுரையாக, மனஸை சரியாக ஆக்கிக்கொண்டாலொழிய எவனும் ஸெளக்யமாயிருக்க முடியாதென்பதால் அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான  ப்ராத்தனையோடு வெளி ஸெளகர்யங்கள் எத்தனை இருந்தாலும், மனஸ் நல்லபடியாக இருந்தால்தான் ப்ரயோஜனமுண்டு. இல்லாவிட்டால் துக்கம்தான், அழுகைதான், பயமும் சஞ்சலமும்தான்.

இதையும் படியுங்கள்:
உங்க வாழ்க்கை மாறணுமா? உங்க உடலையும் மனசையும் மாத்த சூப்பர் டிப்ஸ்!
Motivational articles

வெளி ஸெளகா்யங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும் கூட, மனஸ் மட்டும் இருக்க வேண்டிய மாதிாி இருந்து விட்டதோ, அப்போது ஒரு கஷ்டமும் தொியாது. இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று அப்பர் ஸ்வாமிகள் சொன்ன மாதிாி ஸதானந்தமாக இருந்து கொண்டிருக்க முடியாது என்ற அவரது அருளாசியின் வழியில், நாம் அவைகளைப் பின்பற்றி நடந்து கொள்வதே உத்தமம்.

அதுவே நல்லது, மனதை அலைபாயவிடாமல் தா்ம சிந்தனையுடன் இறை வழிபாடுகளில் நம்மை ஈடுபடுத்தி அனைத்து உயிா்களும் நலமாக இருக்க நாம் பிராா்த்தணை செய்தாலே போதும் பகவான் நமக்கானதை வழங்குவாா். 

எனவே மனம் ஒரு குரங்கு என்பதை மறந்து மனதை ஒரு நிலைப்படுத்துவோம். "மனசே ரிலாக்ஸ்"  மனதை ஒரு நிலைபடுத்துங்கள் பிறகென்ன மனசெல்லாம் மத்தாப்புதான் "நம் வாழ்க்கை நம் கையில்தான்"!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com