
உடல் வலிமை, நோய் எதிர்ப்புச் சக்தி, உடலின் பருமன், வயது போன்றவை எல்லாம் நாம் உண்ணும் உணவோடு பின்னப்பட்டிருக்கிறது.
உடல் என்பது நாம் உண்ணும் உணவையே சார்ந்திருக்கிறது. அதே போல் மனம் என்பது மனத்திற்குள் செல்லும் யோசனைகள், கருத்துகள் இவற்றையே சார்ந்தது. மனம் என்பது பகுதி பகுதிகளாக கடைகளில் விற்று நீங்கள் அவற்றை வாங்க முடியாது. மனத்திற்குள் புகும் கருத்துகள், பிம்பங்கள்,யோசனைகள் யாவும் நீங்கள் உலவும் சூழல்களிலிருந்தே பெறப்படுகிறது.
இவையெல்லாம் உங்கள் முழு நினைவைக் கொண்டு இயங்கும் மனத்தையும், ஆழ் மனத்தையும் நிரப்புகின்றன. இவையே நம் பழக்க வழக்கங்கள், அணுகுமுறைகள், மற்றும் தனித்தன்மை இவற்றை பாதிக்கின்றன. நம் ஒவ்வொருவருக்கும், ஏதோ ஒரு வகையில் முன்னேறும் உத்திகள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்த உத்திகளும் சக்திகளுக்கும் ஏதோ ஒரு வகையில் முன்னேறும் உத்திகள் அவ்வப்போது தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த உத்திகளும் சக்திகளும் அடிப்படைக் காரணம் நம் மனத்திற்குள் ஏற்றிக் கொண்டுவிட்ட அல்லது மனத்தை பாதித்த கருத்துகளும், உணர்வுகளுமே ஆகும்.
எப்படி உடல் என்பது உணவால் கட்டுப்படுத்தப் படுகிறதோ அப்படியே மனம் சுற்றுச் சூழலிலிருந்து பெறும் கருத்துகளாலும் யோசனைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
விஷய ஞானமும், விவேகமும் உள்ளவர்களிடமிருந்தே அறிவுரைகளைக் கேளுங்கள். பெரும்பாலானவர்களுக்கு ஒரு தவறான அபிப்பிராயம் உண்டு. அதாவது சிறந்த வெற்றியாளர்களை அணுகுவதும் கடினம் என்ற அபிப்பிராயம் உண்டு. அது சரியல்ல. உண்மைக்கு மாறுபட்டது.
வெற்றியாளர்களைத்தான் எளிதாக அணுகமுடியும். அவர்களே தானே முன்வந்து உதவத் தயாராக இருப்பார்கள். அவர்களுக்குத் தான், செய்யும் வேலையில் ஆர்வமும் வெற்றியில் ஆர்வமும் கொப்பளித்துக் கொண்டு ஓடும். அந்தக் காரணத்தாலேயே அவர்கள் எங்கும் எதிலும் திறன் மிக்க சூழலையே விரும்புவார்கள். வேலை தடங்கல் இல்லாமல் ஓடுவதையே விரும்புவார்கள். அவர்கள் வேலையிலிருந்து ஓய்வு பெறும்பொழுது, வேறு யாராவது திறன் மிக்கவர்கள்தான் செய்த வேலையைச் செய்ய முன்வர வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம்.
கிடைப்பதற்கே அரிதாக இருப்பதாகக் காட்டிக் கொள்பவர்கள், பெரும்பாலும் திறமை படைத்தவர்களாகவோ அல்லது வெற்றியாளர்களாகவோ இருப்பதில்லை.
புதுப்புது யோசனைகளோடு தன் எண்ணங்களை, மேம்படுத்திக் கொண்டே சென்றால் முன்னேற்றம் வந்துகொண்டே இருக்கும். நல்ல உணவை உண்டு விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறும் விளையாட்டு வீரரை போல என்றைக்கும் துடிப்போடும் கவர்ச்சியோடும் இருக்க வேண்டும்.
புதிய புதிய நண்பர்கள் கூட்டத்தை நாடி பிறரைப் பற்றி நேர்மறையான கருத்துக்களை பேசுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் பேசும் வார்த்தை ஒவ்வொன்றிலும் நளினத்தை மிளிர விடுங்கள். எதிலும் இரண்டாம் தரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் நடந்து கொண்டு, உங்கள் தோற்றம் உடல் மனம் இவற்றில் என்றும் தொய்வு இல்லாத நிலையை பேணுங்கள்.