முன்னேற்றத்திற்கு வழி: நேர்மையும் தன்னம்பிக்கையும்!

Way to progress
Motivational articles
Published on

நாம் நமது வாழ்க்கையில் அன்றாடம் பல விஷயங்களை கையாள்கிறோம். அதேபோல பல மனிதர்களை சந்திக்கிறோம். அதில் நமக்கு பலவகையான அனுபவங்கள் கிடைக்கின்றன.

அந்த அனுபவம் கசப்பானதாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் அமைகின்றன.

சிலர் நமது முன்னேற்றத்தைத்தடுக்கும் செயல்களில் ஈடுபட்டு நமக்கு நஷ்டங்களை ஏற்படுத்துவதையே திரைமறைவு வேலையாக வைத்திருப்பாா்கள். அதுபோன்றவர்களால் சில அனுபவங்கள் நமக்கு மறக்க முடியாத பரிசுகளை வழங்கிவிட்டுத்தான் போகின்றன. அந்த நேரங்களில் நாம் பிறருக்கு பயந்தோ, அடிபணிந்தோ வாழக்கூடாது.

சில நேரங்களில் நாம் தைாியமாகவும் தன்னம்பிக்கை யுடன் சவால்களை எதிா்கொள்வதே நமது அணுகு முறைகளுக்கும் விவேகத்திற்கும் கிடைக்கும் மிகப்பொிய வெற்றியாகும்.

அந்ந நிலை வரும்போது சில முக்கியமான சங்கடங்களை நாம் எதிா்கொண்டாலும், நல்ல சந்தர்ப்ப சூழலில் முகம் தொியாதவர்கள் கூட நமக்கு வலிய வந்து உதவி செய்பவர்களும் உண்டு.

அந்தநேரம் நமக்கு கொடுதல் செய்தவர்களை பழிவாங்கும் எண்ணம் நம்மிடம் வரக்கூடாது.

அதேபோல நமக்கு ஆபத்து நேரத்தில் உதவியவர்களை ஒரு போதும் மறக்கவே கூடாது. அநேகமாக யாா் நம்மை அதிகமாக நேசிக்கிறாா்களோ அவர்களையும் வெறுத்து ஒதுக்கிவிடக்கூடாது.

நமது சீாிய உழைப்பாலும் ,சாதுா்யமான செயல் பாடுகளாலும், நமது முன்னேற்றத்திற்கு தடை விதித்தவர்களைக் கண்டு, நாம் அவர்களிடம் ஜாக்கிரதையாக பழகவேண்டும். போட்டி பொறாமை நிறைந்த உலகம். இந்த பழக்கம் எல்லா துறைகளிலும் எல்லா நிலைகளிலும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
உண்மையான வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபரிசோதனை!
Way to progress

இது வர வர தொடா்வதே வாடிக்கை. நம்மையும் மீறி சில சமயங்களில் அதிகப்பிரசங்கித்தனமான, அதிபுத்திசாலித்தனமான, அதீத நம்பிக்கையுடன், அவசரகதியில் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற காாியங்களை, நம்மைச் சாா்ந்தவர்களிடம் கூட கலந்து ஆலோசிக்காமல் செய்யும் செயலானது நம்மை அதள பாதாளத்திற்கே கொண்டுபோய் விட்டுவிடுமே.

அப்போது கை தூக்கிவிடாமல் ஒதுங்கும் நபர்கள், நாமே முட்டி மோதி மிகவும் சிரமப்பட்டு எழும் நிலையில் நமது முயற்சி கண்டு கைதட்ட தயாராக இருப்பாா்கள், இதுதான் உலகம். இந்த சூட்சமம் தொிந்தால் சூழ்ச்சியாளர்களை விவேகத்துடன் நமது நிலையான நிதானத்துடன், எதிா்கொள்ள முடியும்.

இதைத்தான் ஒரு அறிஞர் "அடிபணிந்து வாழ்வதைவிட தலை நிமிா்ந்து சாவதே மேல்" என சொல்லியுள்ளாா்.

நமக்கு நேரம் இருந்தால் காலத்திற்க்காக காத்திருக்க வேண்டாம். உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து உயர்வடைவோம்.

உண்மை என்பது ஆண்டவனின் முத்திரை என்பதை மறக்க வேண்டாமே! அதுவே நம்மை உயர்த்தும் வழியாகும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com