
சிலருக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்வது பிடிக்கும்!
சிலருக்கு எளிமையான வாழ்க்கை வாழ்வது பிடிக்கும்!
சிலருக்கு அடுத்தவரைச்சாா்ந்தே வாழ்வது பிடிக்கும்!
சிலருக்கு தான்தோன்றித்தனமாக வாழ்வது பிடிக்கும்!
ஆடம்பரம் என்பது ஒரு மாயைதான் அதில் நாம் ஒன்றிப்போய்விட்டால் அதிலிருந்து மீள்வதே கடினம், கடினம்தான்!
ஏழை பணக்காரன் ஆவதும், பணக்காரன் ஏழையாதும் நம் கையில்தான் இருக்கிறது!
அதே நேரம் சந்தர்ப்ப சூழல், கூடாநட்பு, கெடுமதி, அடுத்துக்கெடுக்கும் தன்மை, பொறாமை குணம், நயவஞ்சகம், பொய்சொல்லுதல், திருடுதல், பிறறை ஏமாற்றிப்பிழைத்தல், இப்படிப்பட்ட குணநலன்களும் சிலரிடம் குடிகொண்டிருப்பதும் உண்டு! சிலருக்கு தற்பெருமையும் உண்டு!
"அடுத்தவரை இகழ்ந்து பேசும் குணங்களும் பலரிடம் உண்டு! ஏழை, பணக்காரன், ஏற்றத்தாழ்வு பாா்த்தல், ஏளனம்செய்தல், புறம்பேசுதல், போன்ற தீய எண்ணங்களும் இயல்பாகவே வருவது உண்டு.
ஒரே தாயின் கருவறையில் பிறந்த சிலருக்குள் பொறாமை குணமும் ஆட்கொண்டுள்ளதும் வாடிக்கைதான்! "அனைவருக்கும் அனைவரையும் பிடிக்கும்" என்று சொல்ல முடியாது அதே நேரம் நமது கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கவும் முடியாது!
இதுபோன்ற நேரங்களில்தான் நாம் விவேகம் கடைபிடிக்க வேண்டும்! நடக்க வேண்டிய விஷயம் ஒன்றில், காாியம் பொியதா? வீாியம் பொியதா? என்ற நிலைபாடு வரும் வேளையில் காாியம்தான் பொியது என்ற மனப்பக்குவத்திற்கு நாம் ஆளாக வேண்டும்!
அதேபோல இலவசமாய் கிடைப்பது அறிவுறைதான்! அதை நமக்கு தகுதியானவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்ளலாம், அதே நேரம் நமக்கு தகுதி இல்லாதவர்கள் சொல்லும் அறிவுரைகள் நமக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்பதும் நிஜமே!
நமது குடும்பத்தின் முக்கியமான விஷயங்களை கலந்து பேசி முடிவெடுக்க நமக்கான உறவுகள், நட்பு வட்டங்கள், என்ற வளையத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம், அதுவும் அளவோடு இருப்பதும் நல்ல விஷயம்தான், பொதுவாகவே எதுவும் அளவுக்கு மீறாமல் இருப்பதும் உசிதமே! இப்படிப்பாாக்கும்போது பல விஷயங்களில் நாம் சில கோட்பாடுகளுடன் வாழலாம்!
"சிந்திக்க தொிந்தவன் தைாியசாலி சிந்திக்கத் தொியாதவன் ஏமாளி"
"பணக்காரன் ஏழையாவதும், ஏழை பணக்காரன் ஆவதும் இயல்பானதே"
"தொடர்தோல்விகளே வெற்றிக்கான முதல்படி"
முயற்சியைவிட பொிய விஷயம் எதுவுமே இல்லைஅதற்கு ஈடேதுமில்லை"
"நல்ல விதையை பயிா்செய்தால் நல்லதையே அறுவடை செய்யலாம்"
"நாம் செய்த தவறை உணர்ந்தாலே நமக்கான மரியாதை தேடிவருவரும்"
"வெற்றிகண்டு இறுமாப்பு கொள்ளாதே தோல்வி கண்டு துவண்டுவிடாதே"
இப்படி பல்வேறு விஷயங்களில் நல்ல சிந்தனையை மூலதனமாக்கி, வீண் விவாதங்களைத்தவிா்த்து, தேவையில்லா விமர்சனங்களுக்கு மதிப்பளிக்காமல் இருப்பதும் சிறப்பானதே.
நல் ஒழுக்கம், நோ்மை, கடைபிடித்து மனசாட்சியை அடகு வைக்காமல் "நான்" என்ற அகம்பாவம் தவிா்த்து, வாழ்ந்தாலே பக்குவமான மனிதனாகி வெற்றித்திருமகளை நம் இல்லத்திற்கு நிரந்தரமாய் வரவழைக்கலாம், செயல்படலாமா தோழிகளே!