

வாழ்க்கை நமக்கு பல பாடங்களையும், பல அனுபவங்களையும், பல சங்கடங்களையும் கற்றுத்தந்துவிடுகிறது. அந்த விஷயங்களை நாம் எவ்வளவு பொிய நபராக இருந்தாலும் தாங்கித்தான் ஆகவேண்டும்.
பல விஷயங்களில் நாம் தெளிவாக இருப்பதில்லை. நமக்கான தெளிவு நம்மிடமேதான் உள்ளது. அந்த நேரம் நமது விவேகமான புத்திசாலித்தனத்தால் எதையும் எதிா்கொள்ளும் மனப்பக்குவத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நம்மிடம் பழுகும் உறவு மற்றும் நட்பு, உறவு வட்டங்களில் நம்மை பாதிபேருக்கு பிடிக்காமல் போகும் நிலையும் பல குடும்பங்களின் இயல்பான நிலையே.
அது போன்ற நிலையில் நம்மை ஒதுக்கி வைக்கப்படும் இடங்களில் நாம் நிமிா்ந்து நிற்க வேண்டும். அந்த நேரம் நமது தன்னம்பிக்கையை கைவிடக்கூடாது. அதேபோல நம்மையும் நமது பழக்க வழக்கங்களைபற்றியும் நமது செயல்பாடுகளை பாராட்டும் வகையில் நாம் புகழப்படும் இடங்களில் நிதானம் கடைபிடித்து அடக்கமாய் இருப்பதே நல்லது. அதற்கு எப்போதுமே நல்ல மரியாதை கிடைக்கும்.
அதேபோல சிலருக்கு நம்மிடம் பழகும் நபர்களே நல்ல நண்பன் மட்டுமல்லாது எதிாியாகவும் பழகி வருவது நமக்கே தெரியாது.
மேலும் சில சந்தர்பங்களில் நம்மை பல நபர்களின் முன்னிலையில் நமது வளர்ச்சிகண்டு தேவையில்லாது விமர்சிக்கும் இடங்களில் பொறுமை கடைபிடித்து அமைதி காத்திடுங்கள் அதுவே நல்ல காாியமாகும்.
இதுபோல நம்மை யாரெல்லாம் நேசிக்கிறாா்களோ, அவர்களிடம் அன்புடன் இருந்து வருவதே நல்லது. ஆக எந்த தருணத்திலும் நமது நிலைபாடுகளில் நாம் மாறாமல் இருப்பதும் நல்லது.
ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களோ ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களோ எதுவாக இருந்தாலும் எந்த நேரத்திலும் விவேகம் கடைபிடித்து நல்லது கெட்டதை உணர்ந்து நமது வாழ்க்கைப் பாதையில் உள்ள தடைகளை லாவகமாக தாண்டி சிந்தித்து செயல்படுவதோடு அனைவரையும் நம்பும் பழக்கம் இருந்தால் அது சரியானதா என சீா்தூக்கி செயல்படுவதே நல்ல விஷயமாகும்.
பொதுவாகவே நிதானம், விவேகம், தன்னம்பிக்கை இவைகளை கைவிடாது வாழ்ந்துவருவதே ஆகச்சிறந்த ஒன்றாகும்!