
பகவத் கீதையில் 'நீ என்னவாக வேண்டும் என்று ஏங்கித் தவிக்கிறாயோ, அதுவாகவே ஆகிவிடுகிறாய்' என்கிறது.
உங்கள் மனம் விரும்பியதை செய்யுங்கள்.
மனதின் சக்தி மாபெரும் சக்தி நீங்கள் செய்யும் பணி அல்லது தொழிலே உங்கள் அடையாளமாக மாறும்போது வெற்றி சுலபமாகிறது. தங்கள் நிறுவனங்களின் பெயர்களால் அடையாளப்படுத்தப்படும் வெற்றி மனிதர்களை பாருங்கள். அவர்களில் யாருக்கும் அப்பாவோ, தாத்தாவோ கொடுத்த சொத்தாக அந்த நிறுவனம் வந்திருக்காது. அவர்கள் சொந்த முயற்சியில் உருவாக்கிய சாம்ராஜ்யமாக அது இருக்கும். உங்கள் சாம்ராஜ்யத்தை நீங்கள் உருவாக்கும்போது அதன் பெயர் உங்கள் பெயரோடு இணைந்து கொள்ளும்.
புதிய முயற்சி செய்யுங்கள்.
பழகிய இடம், பாதுகாப்பான சூழல் தெரிந்த மனிதர்கள் என ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். ஆமைக்கு அதன் ஓடுதான் வீடு. அதற்காக இதுவே பாதுகாப்பு என அந்த ஓட்டை சுமந்து கொண்டு பயணம் செய்யவே அது விரும்புகிறது. புதிய முயற்சிகளால் மட்டுமே முன்னேற்றத்தை உணரமுடியும்.
பாசிட்டிவாக இருங்கள்.
கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே அதனால் விழுவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். தோல்விகளின் போதும் பாசிட்டிவ் எண்ணங்களுடன் இருங்கள். அந்தத் தோல்விகளை மனதில் கொண்டுபோய் விடாதீர்கள். 'முடியாது கஷ்டம், நடக்காது போன்ற சொற்களை உங்கள் அகராதியில் இருந்து தூக்கி எறியுங்கள். அப்படிப் பேசும் நண்பர்களையும் உதறித்தள்ளுங்கள்.
வாய்ப்புகளை தவறவிடாதீர்கள்.
வாய்ப்புகளை எப்போதும் தவறவிடாதீர்கள். சரியான நேரத்தில் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சமயங்களில் இது வாய்ப்பு என கணிக்க முடியாதபடி ஏதாவது ஒரு வகையில் வரக்கூடும். அப்போது அதை அடையாளம் கண்டு கொள்ளும் சாமர்த்தியத்தோடு இருங்கள்.
துணிச்சலாக இருங்கள்.
எப்போதும் துணிச்சலாக முடிவுகளை எடுங்கள். ஆபத்துகளை கண்டு அஞ்சும் யாரும் வெற்றி பாதையில் நடைபோட முடிவதில்லை. கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் எப்போதும் பேட்ஸ்மேனை அவுட் ஆக்க வேண்டும் என்ற நினைப்போடுதான் பந்து வீசுகிறார். அந்த பந்துகளில்தான் பேட்ஸ்மேன் ரன் குவிக்கிறார். ரிஸ்க் எடுக்க கூடாது என நினைத்தால் அவர் ரன் எடுக்க முடியாது சாதனை படைக்க முடியாது.
புத்திசாலித்தனமாக இருங்கள்.
உங்கள் வெற்றிக்காக நீங்கள் மட்டுமே தனியாக உழைக்க வேண்டும் என்பதில்லை. மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு சரியாக வராத ஒரு விஷயத்தில் மற்றவர்களின் உதவியைக் கேட்கலாம். சரியாக யார் செய்வார்கள் என்று பார்த்து அவர்களின் உதவியை பயன்படுத்துவதில்தான் உங்கள் புத்திசாலித்தனம் இருக்கிறது.
நேரத்தை கவனமாக செலவிடுங்கள்.
வெற்றி என்பது ஏணியின் முதல் படிக்கட்டு. உழைப்புதான்.அதனால் தினமும் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழைக்கத் தயங்காதீர்கள். இதற்காக உங்களுக்கு நேரம் அவசியம் என்பதில் நேரத்தை உருப்படியாக நிர்வகித்து செலவிட கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் வெற்றிக்காக வித்தியாசமாகச் செய்தாலும் ஜெயிக்கலாம். பலரும் செய்யும் அதே வேலையை, அதில் காட்டும் சின்ன வித்தியாசம் கூட உங்களை வெற்றிப் பாதையை நோக்கி வழி நடத்திச்செல்லும்.
ஆகவே வாசலில் காத்திருக்கிறது நம் வெற்றி. அதில் மகிழ்ச்சியாக நடைபோடுங்கள்.