
திறமைகளை நல்ல வழியில் பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட வளர்ச்சி, தொழில் வளர்ச்சி மற்றும் பிறருக்கும் உதவலாம்.
திறமைகளை நல்ல முறையில் பயன்படுத்தினால் வாழ்வில் மகிழ்ச்சியும், கெளரவமும் கிடைக்கும்.
மேம்படுத்துவதற்கு வழிகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
திறமைகளை வளர்க்க நல்ல வழிகாட்டுதல் பெறவேண்டும் திறமைகளை பயன்படுத்தி தொழில் விளக்குகளை அடையலாம் பயன்படுத்தி பிறருக்கு உதவலாம்.
நம் வாழ்க்கையை மட்டும் வாழ்வதற்காக நாம் பிறக்கவில்லை. அடுத்தவர்களின் சுமைகளைக் குறைப்பது நம் வாழ்வின் அர்த்தமுள்ள கடமை.
ஒவ்வொரு சூழலும் நம் கண் எதிரே இருக்கும் எந்த வாய்ப்பை தேர்வு செய்கிறோமோ? அதை பொறுத்து நம் வாழ்க்கை அமைகிறது.
நம் மதிப்பை அதுவே தீர்மானிக்கிறது. அறமான வாய்ப்புகளை தேர்வு செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வு அமைகிறது. இந்த மகிழ்ச்சியை ஒருவரின் வெற்றியை கணக்கிடும் அளவுகோல்.
திறமைகளை நல்ல வழியில் பயன்படுத்தினால் வெற்றி நமதே!
இதற்கு உதாரணமாக அமைந்த கதை.
ஒரு ஊரில் பழங்கால கலைப்பொருட்களை சேகரிக்கும் வியாபாரி ஒருவர் இருந்தார். கஷ்டத்தில் இருக்கும் பாரம்பரியமான குடும்பங்களுக்கு சென்று மலிவான விலைக்கு அந்த பொருட்களை வாங்கி வந்து பெரும் பணக்காரர்களுக்கு அவற்றை விற்பது அவரது தொழில். அதில் நிறைய லாபமும் கிடைத்தது.
ஒருநாள் உறவினர் இல்ல திருமணத்துக்காக ஒரு கிராமத்துக்கு போனார். அங்கே பழைய பேப்பர்கள் மற்றும் பாத்திரங்களை வாங்கி விற்கும் பழைய காயலான் கடை ஒன்றில்ஒரு மர அலமாரியை பார்த்தார். விலை உயர்ந்த வேங்கை மரத்தில் அழகிய செதுக்கிய வேலைபாடுகள் செய்தி பழமையான அலமாரி அது. நிறைய அழுக்கும் தூசும் சேர்ந்து இருந்ததால் அதன் கலை அழகு வெளியில் தெரியவில்லை.
வியாபாரிக்கு அதை பார்த்ததுமே அதன் மதிப்பு புரிந்துவிட்டது.
அதை திறந்து பார்த்தார். எப்படியும் 200 வருடங்கள் பழமையான பொருளாக அது இருக்கும் என்பது தெரிந்தது. சின்ன சின்ன பழுதுகளை சரி பார்த்து துடைத்து சுத்தம் செய்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு கண்ணை மூடிக்கொண்டு விற்கலாம் என்று தோன்றியது.
கடைக்காரரிடம் வியாபாரி பேரம் பேசினார். இதை மதிப்பெற்ற பொருளாக காட்டிக்கொண்டால்தான் குறைந்த விலைக்கு வாங்க முடியும் என நினைத்தார்.
"இந்த அலமாரி எதுக்கும் உதவாது, இதை பிரிச்சு பலகைகளை தனியா எடுத்து சின்னதா பெட்டி செய்யலாம். 5000 ரூபாய்க்கு இதை எனக்கு தருவியா?" என்று கேட்டார்.
கடைக்காரரும் உடனே ஒப்புக்கொண்டார். பணத்தைக் கொடுத்த வியாபாரி "நாளைக்கு வேன் எடுத்து வந்து அலமாரியை எடுத்துக்கொண்டு போகிறேன்" என்று விடை பெற்றார்.
அடுத்த நாள் வியாபாரி, வந்தபோது கடையில் அந்த அலமாரியை காணவில்லை கிராமத்துக்கடைக்காரர் கூச்சத்துடன் சொன்னார். "தப்பா நினைச்சுக்காதீங்க! நான் இதை வெறும் ஆயிரம் ரூபாய்க்குத்தான் வாங்கினேன்.
நீங்க ஐந்து மடங்கு அதிக விலை கொடுத்து என் வீட்டை வாங்குறீங்க. இவ்வளவு லாபத்தை சும்மா அடையறதுக்கு என் மனசு கேட்கல.
அதனால் அலமாரியை பிரிச்சி தனித்தனிப் பலகையாக எடுத்து வச்சுட்டேன்.
நீங்க சுலபமாக எடுத்துப் போகலாம். உங்களுக்கும் பெட்டி செய்றதுக்கும் உபயோகமாக இருக்கும் என்றபடி மூலையில் அடுக்கி வைத்திருந்த பலகைகளை காட்டினார்.
உடனே வியாபாரி, அதிர்ச்சியுடன் தன் பேராசையே பெருநஷ்டம் தந்துவிட்டது என உணர்ந்த வியாபாரி நொந்து போய் பலகைகளை எடுத்துச் சென்றார்.
திறமைகளை நல்ல வழியில் பயன்படுத்தினால் நமக்கும் அர்த்தம் உள்ள மதிப்புகள் வாழ்வில் கிடைக்கும் என்பதை இக்கதை மூலம் அறியலாம். அதனால் திறமைகளை நல்ல வழியில் பயன்படுத்துங்கள்! அர்த்தம் உள்ள மதிப்புகளை வாழ்வில் உருவாக்குங்கள்!