

இறைவன் நமக்கு கொடுத்த வாழ்க்கையில் பலரும் பலவித சந்தோஷங்களையும், சங்கடங்களையும் அனுபவிக்க வேண்டிய சூழல் இருந்துவருவதே நிஜம். அது பொதுவாக நடைமுறையான ஒன்றாகும். அதன் வகையில் நாம் எப்பாடு பட்டாவது சங்கடங்களை தகர்த்தெறிந்துவிட்டு நமது முன்னேற்றத்திற்கு உண்டான வழி வகைகளை தேடவேண்டும்.
அது சமயம் நமக்கான எதிாிகள் தோண்டி வைத்துள்ள படுகுழியில் நாம் வீழ்ந்துவிடாமல் , எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் நிதானத்துடன் வைத்து செயல்படவேண்டும். அப்போது நமது தூய்மையான எண்ணங்களும் , தன்னம்பிக்கையும் நமக்கு கைகொடுக்கக் கூடிய மிகப்பொிய பொிய கவசமாகும்.
அதன்படி நாம் ஓரளவு தேறிவந்து நல்ல நிலையை எட்டிப்பிடிக்கும்போது கூடாநட்பும் ஆடம்பரமும் கூடவே வந்து சேர்ந்துவிடுமே! அதுசமயம் நாம் நமது சமயோஜித புத்தியால் அவற்றை எதிா்கொள்வதே சாலச்சிறந்தது.
அதே நேரம் ஆடம்பரம் தவிா்க்காமல் இருந்துவந்து அதன் குறுகிய பாதையில் நடந்து சென்றால்கூட அவமானம் எனும் சேற்றில் காலை வைக்க நோிடும் என்பதை உணர்வது நல்லது.
எந்த சூழலிலும் அதுபோன்ற நிகழ்வை தவிா்ப்பவர்களே புத்திசாலியாவாா்கள்.
வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்,போன்ற குறுகலான மதிபடைத்தவர்கள் மத்தியில் நாம் வெகு ஜாக்கிரதையாக பழகவேண்டும். நமக்கு பலவழிகளில் உதவி செய்கிறேன் என அவர்கள் ஆறுதல் வாா்த்தைகள் கூறினாலும் நாம் இறைநம்பிக்கையை கைவிடாமல் நடப்பதெல்லாம் நன்மைக்கே என நமது பாதையில் பயணிக்க வேண்டும். அவர்களின் வாா்த்தையில் நம்பி நமது முயற்சியை கைவிடக்கூடாது.
வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழ்ந்து கெட்டுப்போவதைப் போல கொடுமையான விஷயம் எதுவும் இல்லை.
அப்போது வசதி படைத்தவர்கள் நம் வீட்டிற்கு வந்தால் நாம் அவர்களை நன்கு உபசரிப்போம், அது நமது பண்பாடு ஆனால் அவர்கள் வீட்டிற்கு நாம் சென்றால் விருந்துக்கு பதில் உபதேசமே அதிகமாக விருந்தாக நமக்கு பறிமாறப்படும். ஆக எந்த நிலையிலும் நாம் தன்னம்பிக்கை, விடாமுயற்சியை கைவிடக்கூடாது.
அதேபோல வசதி வந்ததும் கூடாநட்பு சோ்ந்து ஆடம்பரம், படாடோபம், என்ற மாயவலையில் சிக்கக்கூடாது.
மாயவலையில் இராமாயணத்தில் சீதாதேவி சிக்கியதுபோல ஆகிவிடுமே! ஆக எங்கும் எதிலும் சிக்காமல் நமக்கான நல் ஒழுக்க சிந்தனைகளோடு அடுத்துக்கெடுக்காமல் உயர்ந்த சிந்தனையோடு அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு வாழ்ந்து வந்தாலே நமக்கு இறைவன் எந்த வழியிலும் துணையாக இருப்பாா் என்ற நம்பிக்கையோடு வாழலாமே! வாழ்க்கை வாழ்வதற்குதானே பின் என்ன தயக்கம் வாழ்வென்றால் போராடும் போா்க்களமம்தானே!