ஆங்கில எழுத்தாளர் ஸ்டீபன் கோவே சொல்லும் ஒரு விஷயம் இந்தக் காலத்திற்கு ரொம்பவே பொருந்தும் 'நீங்கள்' தெரிந்து வைத்திருக்கும், புரிந்து வைத்திருக்கும் விஷயங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, இரண்டு வருடங்களில் காலாவதியாகிவிடுகின்றன. பயனற்றதாகிவிடுகின்றன' என்கிறார்.
அவர் அந்தக் கணக்குப்படி பார்த்தால் நான்கு வருடம் நாம் எதையும் புதிதாக தெரிந்துகொள்ளாமல், புதிதாக படிக்காமல், புதிதாக புரிந்துகொள்ளாமல், இருப்போம் என்றால், நமக்கு ஒன்றுமே தெரியாது என்றுதான் அர்த்தப்படும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு புதிய விஷயமாக வந்துகொண்டிருக் சுக்கூடிய இந்தக் காலகட்டத்தில் ஸ்டீபன் கோவேயின் இந்தக் கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாக இருக்கிறது.
அது படிப்பாக இருந்தாலும் சரி, அலுவலகப் பணியாக இருந்தாலும் சரி, நம்முடைய அடுப்படிகளில் செய்யக்கூடிய உணவுப் பண்டமாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் நாம் பழைய, தெரிந்த விஷயங்களையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். காலம் மாற மாற அதற்கேற்றபடி புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆவல், தமக்கு பெரிதாக இருப்பது இல்லை
நம்முடைய வீடுகளில் பிள்ளைகள் உணவுகளை வேண்டா வெறுப்பாக தின்பதன் பின்னணியில் இதுதான் ஒளிந்திருக்கிறது. எப்போதோ கற்றுக்கொன்ட் சமையலை வைத்துக்கொண்டு அதையே தினந்தோறும் செய்கிற அம்மாக்களின் உணவுகளை பிள்ளைகள் பலநேரங்களில் சாப்பிடுகிறார்கள்.
காரணம் அத்தனை உணவு வகைகள் வந்துவிட்டன். அவற்றை புதிதுபுதிதாக செய்து சாப்பிடுகிறார்கள். உணவில் மட்டுமல்ல. ஒரு குழந்தையைஎப்படி வளர்க்க வேண்டும், அவர்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் கூட.
நாம் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இருக்கக்கூடிய வளர்ப்பு முறையை வைத்துக்கொண்டு இப்போது இருக்கும் பிள்ளைகளை வளர்ப்பது சாத்தியமில்லை.
இரண்டாண்டுகளில் நாம் படித்ததில் பாதி பயனற்றுப் போவதைப்போல இருபது வருடங்களுக்கு முன்னால் ஒரு பிள்ளையை வளர்ப்பது எப்படி என்று கற்றுக்கொண்ட வித்தையை, இப்போது பயன்படுத்த முடியாது அது காலாவதியாகிவிட்ட ஒரு விஷயம்.
இன்றைக்கு பிள்ளைகளை வளர்ப்பதிலோ, வழிநடத்துவதிலோ நிறைய சிக்கல்கள் இருக்கின்றன காரணம் குழந்தைகள் சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய பிரச்னைகள் என்னவென்று தெரியாமலேயே அவர்களுக்கு தீர்வுகள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
நம் தாத்தாக்களும், பாட்டிகளும், நம்முடைய அப்பாக்களும அம்மாக்களும் சொன்ன நல்ல விஷயங்களை பின்பற்றுவது மிகவும் சரி. ஆனால் காலமாற்றத்திற்கு ஏற்ப அதை தத்துவங்களில் சிறு சிறு விஷயங்களை சேர்த்தோ அல்லது கழித்தோ அதை நவீனப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.