
வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்கள் காலை 8 மணிக்கு முன்பாகவே தினமும் சில குறிப்பிட்ட, சக்தி வாய்ந்த பழக்கங்களை செய்கிறார்கள். தனது காலை நேரத்தை எப்படி தொடங்குகிறார்கள் என்பதிலிருந்து அவர்களுக்கு அந்த நாள் வடிவமைக்கப்படுகிறது. வெற்றி பெற்ற நபர்கள் இவற்றை மிகவும் முக்கியமாகக் கருதுகிறார்கள்.
1. சீக்கிரம் எழுந்திருத்தல்:
காலையில் 5 லிருந்து 5:30 மணிக்கு முன்பாகவே வெற்றி பெற்ற மனிதர்கள் எழுந்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தருகிறது. அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல், அன்றைய நாளை திட்டமிடுதல் போன்றவற்றுக்கு அதிக நேரம் கிடைக்கிறது.
2. நினைவாற்றல் அல்லது தியானப் பயிற்சி:
தினமும் பத்து நிமிடங்கள் ஆழ்ந்த சுவாசப் பயிற்சி அல்லது தியானம் என அதில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பழக்கம் அவர்களது மன அழுத்தத்தை குறைத்து அன்றைய நாளை உற்சாகமாக எதிர்கொள்ளத் தேவையான சக்தியையும், ஆற்றலையும் தருகிறது.
3. உடற்பயிற்சி;
சாதனையாளர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஜாக்கிங். யோகா எளிய நடைபயிற்சி போன்றவை காலை நேர ஆற்றலை அதிகரிக்கின்றன. மனநிலையை மேம்படுத்தி மனதை தூய்மைப்படுத்துகிறது. உடற்பயிற்சி உடலை மட்டுமல்ல, மன நிலையையும் வடிவமைக்கிறது.
4. அன்றைய நாளை திட்டமிடுதல்:
வெற்றிகரமான மனிதர்கள் தங்களது நாளை காலையிலேயே திட்டமிடுகிறார்கள். தாங்கள் செய்யவேண்டிய முக்கியமான வேலைகளை பணிகளைப் பற்றி குறிப்புகள் எழுதுகிறார்கள். முதலில் செய்ய வேண்டிய வேலைகள், அடுத்து செய்ய வேண்டியது என பட்டியல் போடுகிறார்கள். அது நாள் முழுவதும் அவர்களை வெற்றிகரமாக செயல்பட உதவுகிறது.
5. படித்தல்/ கேட்டல்;
புதிய விஷயங்களைப் பற்றிப் புத்தகங்கள் அல்லது செய்தித்தாள் படித்து அறிந்து கொள்கிறார்கள். அல்லது பத்து நிமிடங்களாவது பாட்காஸ்ட்டில் நல்ல பயனுள்ள விஷயங்களைக் கேட்கிறார்கள். நல்ல பாடல்கள் கேட்டு ரசிக்கிறார்கள்.
6. சத்தான காலை உணவு:
அதிகப் புரதம், குறைந்த சர்க்கரை உள்ள உணவுகளை தேர்வு செய்து உண்கிறார்கள். இது அவர்களது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கவனத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
7. நன்றி உணர்வுப் பயிற்சி:
காலையில் பத்து நிமிடங்களாவது வாழ்க்கையில் தாங்கள் பெற்ற விஷயங்களுக்காக நன்றி உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். இது வெற்றி பெற்ற மனிதர்கள் செய்யும் மிக முக்கியமான விஷயமாகும். இது அவர்களது உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்துவதோடு சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.
8. கடினமான/சிக்கலான வேலையை செய்தல்;
மிக முக்கியமான அல்லது கடினமான வேலை ஒன்றை காலை நேரத்திலேயே செய்வது அவர்களது மனஉறுதியை அதிகரிக்கிறது. கவனச் சிதறல்கள் குறைவாக இருக்கும் அந்த நேரம் அவர்களுடைய ஆற்றல் அதிகரிக்கிறது. நல்ல முடிவுகளை எடுக்க உதவுகிறது.
9. அலைபேசியை தவிர்க்கிறார்கள்.
காலை எட்டு மணிக்கு முன்பாக அவர்கள் அலைபேசியை எடுத்து குறுஞ்செய்திகளைப் பார்ப்பதோ அல்லது சமூக ஊடகங்களில் முழுகுவதோ இல்லை. காலை நேரத்தில் இவற்றை தவிர்ப்பதால் படைப்பாற்றல் கூடுகிறது.
10. வெற்றியை காட்சிப்படுத்துதல்;
சிறந்த வெற்றியாளர்கள் தங்கள் இலக்குகளை காட்சிப்படுத்தி மனக்கண்ணில் பார்க்கிறார்கள். அது அவர்களது நாளை அமைதியாக வழிநடத்த உதவுவதோடு நினைத்ததை முடிக்கும் ஆற்றலையும் தருகிறது.