
ஒரு இலக்கு என்பது ஒரு குறிக்கோள், ஒரு எல்லை. இலக்கு என்பது வெறும் கனவல்ல. அது ஒரு கனவை நனவாக்கும் ஒரு வழிமுறை "அடடா நான்கூட அதைச் செய்திருக்கலாமே என்று மட்டும் சொல்லவைப்பது இலக்கு அல்ல. இலக்கு என்பது மிகத் தெளிவான அம்சம், "இதுதான் என் எதிர்பார்ப்பு. இதற்காகத்தான் நான் முனைந்து கொண்டிருக்கிறேன்" என்று ஒருவரைச் சொல்ல வைப்பதுதான் இலக்கு.
இலக்கு என்று ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்கு முன் எதுவும் நிகழ்வதில்லை. எந்த முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இலக்குகள் இல்லாதவரை, மனிதர்கள் வாழ்க்கையில் கொள்கையற்று உலவுகிறார்கள். தடுக்கி விழுகிறார்கள். எங்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. ஆகவே லட்சியப்படுத்த முடிந்த எந்த இலக்கையும் அவர்கள் அடைவதில்லை.
சுவாசிக்க காற்று எப்படி அவசியமோ அப்படியே வெற்றிக்கும் இலக்குகள் அவசியம். யாரும் தடுக்கி விழுந்தாற்போல் வெற்றியைத் தற்செயலாக அல்லது ஒரு விபத்தைப்போல பெற்றதாகச் சரித்திரம் இல்லை. உங்களுக்கு வேண்டிய இலக்கு என்ன என்பதில் மிகத்தெளிவாக இருங்கள்.
ஒரு மிகச் சாதாரண ஊழியராக விளம்பர கம்பெனி ஒன்றில் தபால்களைப் பிரிக்கும் ஊழியராக தேவ் மஹோனி வேலை பார்த்து வந்தார். வாரத்திற்கு 25 டாலர் சம்பாதித்து வந்தார். 27 வயதில் ஒரு ஏஜன்சிக்கு துணைத் தலைவராக உயர்ந்தார். வேறொரு கம்பெனியின் தலைவராகவே உயர்ந்தார். அமானுஷ்ய வளர்ச்சி. இலக்குகளைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். "நீங்கள் இதுவரை வகித்த பதவியோ இருந்த இடமோ முக்கியமல்ல;
ஆனால் நீங்கள் எங்கு செல்ல வேண்டுமென்று நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். என்கிறார் அவர் திட்டமில்லாத எந்த ஒரு பிசினஸும் நலிந்தே போவதுபோல, இலக்குகளை வரித்துச் கொள்ளாத தனி மனிதர்களும் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கி கொள்கிறார்கள். வாழ்க்கையின் தவிர்க்க முடியாத திருப்பங்களில் சிக்கித் தவித்து தங்களை இழக்கிறார்கள்.
ஆகவே திட்டமிடுங்கள். தனிப்பட்ட வகையிலும் நீங்கள் ஒரு பிசினஸ் நிறுவனத்தைப் போல. உங்கள் ஆற்றல், சக்தி என்பவை எல்லாம். ஒரு தொழிற்சாலையின் 'உற்பத்திச் சரக்குகளைப்போல. நீங்கள்உங்களுடைய சரக்குகளை மென்மேலும் மேம்பாடு அடைய செய்யுங்கள். அதற்கெல்லாம் உரிய விலை உண்டு. முறையான திட்டங்களும் எதிர்கால நோக்குகளும் அதற்கு அவசியம்.
நமக்கு நெடுநாளைய நோக்கு அல்லது எதிர்கால நோக்கு இருக்க வேண்டுமென்பது கலங்கரை விளக்கம் போன்றது.