
வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில். நம்மால் முடியாதது என்று எதுவுமே கிடையாது. நாம் தினம் தினம் புது அவதாரம் எடுக்கவேண்டும்.
ஏதாவது ஒரு நல்ல சிந்தனை, புதிய முயற்சி, புதிய பிரதிக்ஞை, நம்மிடம் இருக்கவேண்டும்.
உழைப்பவரே உயர்ந்தவர் என்ற தத்துவத்தின் அடிப்படையில் வாழ்ந்து காட்டவேண்டும். அப்படி வாழ்க்கையில் நாம் முன்னேற நாம் நல்லதையே நினைக்கவேண்டும். (Motivational articles) அதற்கு நாம் முயற்சிக்கும் நிலையில் நம்மிடம் நோ்மறை சிந்தனையைவிட எதிா்மறை சிந்தனை அதிகமாக இருக்கும்.
அது சமயம் குறிப்பிட்டுச்சொல்லும் விதமாக நம்முடன் கூடவே இருந்து நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் ஒரு சில தீயசக்திகளை விரட்டினால்தான் நல்லது. சில நல்ல சக்திகளையும் நாம் வளா்த்துக்கொள்ளவும் வேண்டும். இரண்டு மூன்று உதாரணங்கள் மிகவும் முக்கியமானது.
பொதுவாக எப்படி பழகவேண்டும் என்பதைவிட எந்த அளவுக்கு பழகவேண்டும் என்ற அடிப்படையில் நமது பழக்கவழக்கங்கள் அமையவேண்டும். பதவி மற்றும் முன்னேற்றம் வரும்போது பணிவு வரவேண்டும். பணிவுதான் நமக்கான வெற்றிப்பாதையின் முதல்படி. நல்லவிதமான பழக்கம், பிறர் மனம் நோகாத வகையில் நல்ல விதமான, கண்ணியமான பேச்சைக் கடைபிடித்தல் அவசியம்.
அடுத்தவர் நலன் மற்றும் முன்னேற்றம் கண்டு பொறாமை, படாடோபம், ஆடம்பரம், திமிா், எல்லாம் எனக்குத் தொியும் என்ற அகம்பாவம், நான் என்ற மமதை, இவைகளை விலக்கிவைப்பதே நல்லது. வாா்த்தைகளில் நிதானம் கடைபிடிப்பது மிகவும் அவசியமானதே!
சூழ்நிலை சரியில்லை ஏதோ தவறாகப்பேசிவிட்டேன் என வருந்துவதால் ஒரு நன்மையும் வராது. தேவையில்லாத மதைப்பேச்சு தவிா்ப்பது மிகவும் நல்ல விஷயமாகுமே!
கற்கண்டும், கண்ணாடித்தூளும் வெள்ளையாகவே இருக்கும், அதற்காக கண்ணாடித்தூளை கற்கண்டு என நினைத்து வாயில் போட்டால் நிலைமை என்னவாகும்? சிந்திக்காமல் செய்யும் ஒவ்வொரு காாியமும் நமக்கு சிரமத்தையே தந்துவிடும்.
இது போலவே மற்றுமொரு எதிாி கடன். அதாவது கடன் வாங்குவது, சேமிக்கும் பழக்கம் இல்லாதது, இவை இரண்டும் வாழ்க்கையின் வரலாற்றுப்பிழையான பாடங்களே!
சேமிப்பும் சரி, கடனும் சரி, கொஞ்சம் கொஞ்சமாக வளரும்.
காலப்போக்கில் அதிகமாகவே வளா்ந்துவிடும், அது நமக்கு தொியாது.
அந்த நேரம் சேமிப்பு அதிகமாகிவிட்டால் உண்டியல் மூழ்கிவிடும்.
அதேபோல கடன் அதிகமாகிவிட்டால் வாழ்க்கையே மூழ்கிவிடும்.
ஓட்டை விழுந்த கப்பல்போல! முதலாவது ஆச்சர்யக்குறி! (சேமிப்பு ) இரண்டாவது நம்வாழ்வின் கேள்விக்குறி?? (கடன்) நம்முடைய வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியின்போது உறவுகள் ஒட்டிக்கொள்வதும், வெட்டிக்கொள்வதும், இயற்கைதான். "ஒட்டிகோ வெட்டிக்கோ" என்ற வாா்த்தைதான்.
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகமிது. இந்த வையகத்தில் நாம்தான் நல்லவிதமாக நோ்மையோடு வாழ, சேமிப்பை பெருக்கி, கடனைக் கழித்து, நல்ல வாழ்க்கை நெறிமுறை வகுத்து, சீாிய ஒழுக்கம், உழைப்பு, விடாமுயற்சி இவைகளை கூட்ட வேண்டும்.
ஆக, இளமையில் சேமிப்பதும் நல்லதே, அதேநேரம் எந்த நிலையிலும் இறுமாப்பு, நான் எனும் அகம்பாவம் தொலைத்தலும் நல்லதே!