நீங்கள் இழக்கப்போவது எதுவும் இல்லை!

You have nothing to lose!
Lifestyle articles
Published on

ற்றவர் உங்களை ஆத்திரமூட்டும் போதும் சரி, கோபமூட்டும் வகையில் நடந்துகொள்ளும் போதும் சரி,  அதே வேகத்தில் உணர்ச்சிகளைக் கொட்டாமல், அவர் மனம் குறுகிவிடும் படியாக பதிலளிப்பதையும் தவிர்த்துவிட்டாலே போதும். அது மற்றவர் தன்கோபத்தின் நியாய,  நியாயமின்மைப் பற்றி யோசிக்க வைத்து விடும்.  அவர் தன் தவறை உணர சந்தர்ப்பம் தருவதாக அமையும்.

பொறுமையுடன் அணுகுதல்

சூழ்நிலை உங்களை பொறுமை இழக்க வைக்கலாம்.  அந்நிலையில் என்ன செய்கிறோம் என்ன சொல்கிறோம் என்று தெரியாமலேயே வார்த்தைகளை, உணர்ச்சிகளைக் கொட்டிவிட்டு பிறகு அப்படி நடந்து  கொண்டிருக்கக் கூடாதே என்று வருந்துவதை தவிர்க்கவேண்டும்.

பொறுமை என்றால் சூழ்நிலைக்கு அடிபணிவது அல்ல. அடுத்தவர் தவறை கண்டு கொள்ளாதது அல்ல. சூழ்நிலையைப் படிப்படியாக அணுகுவது. அதை நன்கு புரிந்து கொண்டு எங்கே என்ன திருத்தப்பட வேண்டும் என்று ஆய்ந்தறிவது, தவறு செய்தவர் தவறை உணரும்படி செய்வது, அதை உணர்ந்து அவர் அதை திருத்திக்கொள்ள வாய்ப்பளிப்பது.

சேவை மனப்பான்மை

மற்றவர்க்கு எந்த பிரதிபலனும் பாராமல் உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மற்றர்க்கு நீங்கள் செய்உதவிகள் அவர் மனதில் மதிப்பை விதைப்பதோடு உங்களுக்காக பணிசெய்யும்போது மனமுவந்து முழு ஈடுபாட்டுடன் அதில் பங்கு கொள்வர். 

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுதல்

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதில்  மற்றவர்க்கு உங்கள் முதலான நம்பிக்கை கொள்ள வைக்கிறது. உங்களால் நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளையே தேர்ந்தெடுக்கும்  அறிவு நிச்சயம் இங்கே தேவைப்படுகிறது 

மற்றவர் மீது நம்பிக்கை வைத்தல்

எல்லோரிடத்திலும் குறைகள் நிறைகள் இருக்கும். ஒருவருடைய குறையை மட்டுமே பார்க்கும் பட்சத்தில் அவரின் நிறையை பார்க்கத் தவறிவிடுகிறோம். அந்நிலையை வெளிக்கொணர்வது மூலம்  அவருக்கும், அதன்மூலம் நமக்கும் நன்மை சேர்க்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. மற்றவர்களுக்குள்  புதைந்துள்ள திறமையை அறிவது என்பதே ஒரு தனித்திறமை. 

மற்றவர்களைப் புரித்துகொள்ளுங்கள்

மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறமை இதற்கு முக்கியம்.  மற்றவர் சொல்வதை ஆழமாக கவனிக்கும்  போது உங்களுடைய ஆர்வமே அவர்கள் முழுமையாக உங்கள் மீது நம்பிக்கை வைக்க உதவும். நீங்கள் முழுமையாக அவர்களைப் புரிந்து கொண்டீர்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டால்தான் உங்களால் அவர் மனதில் நேர்மறையான பாதிப்பை ஏற்படுத்த முடியும். 

மற்றவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள்

மற்றவர்களின் நியாயமான கேள்விகள், உணர்வுகள், அபிப்ராயங்கள் பெரும்பாலும் அவமானப் படுத்தப்படுத்தப்பட்டு விடுகின்றன. அதனால் பெரும்பாலும் மற்றவர் மனதை உறுத்துவதால்  எதிர்மறையான விளைவுகளையே சந்திக்கிறது. நீங்கள் அவர்களை ஊக்குவிக்கும் வகையில்,உற்சாகப் படுத்தும் வகையில் பாராட்டும் போது பலர் நேர்மையான முறையில்‌ தங்களை முன்வைக்க  முன்வருவர்.

காயப்படுத்துபவரை காயப்படுத்தாதீர்கள்

காரணம் அது பிரச்னையை வளர்க்குமே ஒழிய  தீர்க்காது. யாரேனும் உங்களை நேரடியாகவோ,  மறைமுகமாகவோ காயப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள் என்று தெரிய வரும்போது பழி வாங்கும் விதத்தில் நடந்து கொள்ளாமல், முதலில் அந்த நபரை அழைத்து அவர் நடத்தையால்  காயப்பட்டதை உணர்த்துங்கள். 

இதையும் படியுங்கள்:
மனசுதான் எல்லாவற்றிற்கும் காரணம் தெரியுமா?
You have nothing to lose!

தவறுகளுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கேளுங்கள்

ஒரு தவறு நேர்ந்துவிட்டால் அதற்கு நாம் ஒரு முக்கிய காரணம்  என்று அறிந்திருந்தால் ஒரேயடியாய் அடுத்தவர் மீது பழி போடாமல் உங்கள் தவறை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளுங்கள். அதற்கு மன்னிப்பும் கேளுங்கள். இதனால் நீங்கள் இழக்கப்போவது எதுவும் இல்லை. மாறாக மற்றவர் மதிப்பைப்  பெறுவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com