மனசுதான் எல்லாவற்றிற்கும் காரணம் தெரியுமா?

Did you know that the mind is the cause of everything?
motivation article
Published on

மது மனநிலையும் உடல்நிலையும் ஒன்றுக்கொன்று இணைந்தது, தெரியுமா? உங்களுக்கு...

இந்த கார்ப்பரேட் உலகத்தில் இப்போது எல்லோரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். மனம்போன போக்கிலே எல்லாவற்றையும் செய்துவிட்டு கடைசியில் உடல் நலம் குன்றி தடுமாறுகிறார்கள்.

திங்கள் முதல் வெள்ளி வரை வேலை போராட்டம்.

It field ல் இருப்பவர்கள் நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு coding run ஆகவில்லை என்று மண்டையை பிய்த்து கொள்வார்கள்.

Mechanical line ல் இருப்பவர்கள் நாள் முழுவதும் machine பின்னாலேயே இருப்பார்கள் மண்டையை பிளக்கும் சத்தத்துடன்.

Sales line ல் இருப்பவர்கள் order பிடிக்க நாள் முழுவதும் அலைந்து திரிவார்கள்.

ஆக, மொத்தத்தில் எல்லோரும் அந்த ஐந்து நாட்களில் நொந்து நூலாகி விடுவார்கள்.

ஆனால் சனி ஞாயிறு வந்தாலே போதும் இவர்கள் மனதை கண்டபடி அலையவிட்டு அதுபோன போக்கில் செல்வார்கள், கேட்டால் relaxation என்று சொல்வார்கள்.

விடுமுறை நாட்களில் மதியம் 12 மணிக்கு எழுந்து கொள்வார்கள். குளித்து fresh ஆகிவிட்டு வெளியில் கிளம்பி விடுவார்கள். சில பேர் பாரில் சென்று குடித்து கொண்டே இருப்பார்கள், சிலர் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு இங்கும் அங்குமாக சுற்றுவார்கள். நாள் முழுவதும் கூத்தடித்து விட்டு இரவு வீட்டிற்கு வந்து மறுபடியும் laptop ல் எதையாவது பார்த்து விட்டு இரவு 2 மணிக்கு மேல் தூங்குவார்கள். இவர்களின் கூற்றுப்படி, இந்த இரண்டு நாளை இவ்வாறு கழித்தால் மனம் அமைதி பெறுகிறது, மற்றும் relax கிடைக்கிறது என்று.

இதையும் படியுங்கள்:
காலத்தைக் கணக்கிடுவோம்!
Did you know that the mind is the cause of everything?

ஆனால் இவர்களின் உடல்நிலை இதனால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை பற்றி இவர்கள் யோசிப்பதே இல்லை. வாரத்திற்கு இரண்டு நாட்கள் அதிகமாக குடித்தால் liver கெட்டுப் போய்விடும். சிகரெட்டை பிடித்தால் lungs க்கு ஆபத்து. மனம்போன போக்கில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கண்டபடி சாப்பிட்டால் வயிறு கெட்டு போகும். இரவு விடிய விடிய relaxation என்ற‌ பெயரில் laptop ல் சினிமா பார்த்தால் தலைவலி வரும். Gas, acidity, ulcer, bp, sugar bloating என எல்லாம் வரிசையாக வரும்.

மனதை சந்தோஷமாக வைத்து கொள்கிறேன் என நினைத்து கொண்டு மனம் விரும்பியதை எல்லாம் செய்தால் கடைசியில் அந்த மனம் வாழ்வதற்கு உங்கள் உடம்பு இருக்காது.  

Relaxation செய்வதற்கு எத்தனையோ முறைகள் இருக்கின்றன. ஒரு வாரம் நண்பர்களுடன் சேர்ந்து ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்திற்கு சென்று அவர்களோடு சேர்ந்து  சாப்பிட்டு கல கலப்பாக இருந்து விட்டு வரலாம். இல்லை என்றால்  பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கிராமத்திற்கு சென்று இயற்கையை ரசிக்கலாம்.

இல்லையென்றால், எங்கேயும் போகமால்  நிம்மதியாக தூங்கி எழுந்து அந்த இரண்டு நாட்கள் வேளைக்கு சாப்பிட்டு விட்டு சிறிது ஓய்வு எடுத்தாலே போதும்.

ஆனால் மனம் கேட்காதே, சனிக்கிழமை வந்தாலே அது ஓடும் தன் இஷ்டத்திற்கு.

இதையும் படியுங்கள்:
பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிடுமா?
Did you know that the mind is the cause of everything?

ஏற்கனவே வாரத்தில் ஐந்து நாட்கள் சரியான தூக்கம் இல்லாமல், வேளைக்கு உணவு உண்ணாமல் பாடுபடுகிறீர்கள், அதில் இன்னும் கொஞ்சம் நஞ்சை நீங்களே ஏன் தனக்குத் தானே சேர்த்து கொள்கிறீர்கள். இளைஞர்களே coding  run ஆகாவிட்டாலோ அல்லது  balance sheet tally ஆகவிட்டாலௌ நீங்கள் முழுமையாக போராடி அதை சரி செய்கிறீர்கள், இல்லையா, அதைப் போல் உங்கள் மனதையும் உங்களின் controlல் வைத்திருங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com