Motivation
கவிதை - கடலென எழு!
ஆழம் அறியா
அலை கடலாய்
மனதில் நாளும்
மலரும் எண்ணம்
நேர்மறை ஆனால்
நிலைக்கும் வாழ்க்கை.
அகத்தில் குமுறல்
அடையும் தாக்கம்
ஆழிப் பேரலையாய்
ஆதிக்கம் செலுத்தும்.
அனைத்தையும் அழித்து
அமைதியை நிறைக்கும்.
மௌனம் காக்கும்
மௌவல் பரவும்.
ஆழ் மனதில்
ஆழ் நினைவுகள்
உறக்கத்தில் விழிக்கும்
கிறங்கித் தவிக்கும்.
ஆழத்தில் பிறக்கும்
ஆணி முத்தாகும்.
பேரொளி வீசும்.
பேரின்பம் நல்கும்.
பலருக்கும் வாழ்வு
பதமாய்த் தந்திடும்.
முயற்சியை விடாது
முன்னேறும் அலையாகு.
தோல்வியை நுரையென
தூக்கி எறிந்திடு.
வெற்றியைப் பெற்றிட
விரைந்து எழுந்திடு.
நடுகடலென அமைதியை
நிலை நாட்டிடு.
மனதில் நிறைவு
மலரும் உறையும்.