குட்டி ஸ்டோரி: எதையும் சமாளிக்கும் திறமை இருந்தால் வெற்றி நிச்சயம்!

School
Schoolcredit AI Image
Updated on

"வாழ்க்கையில் இது இப்படித்தான் நடக்க வேண்டும்" என ஒவ்வொன்றையும் நாம் திட்டமிட்டுச் செய்கிறோம். ஆனால், நாம் எதிர்பாராத ஏதோ ஒன்று சில நேரங்களில் நடந்து விடுகிறது. அந்தச் சூழலை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நம் வெற்றியும்(success in life) அமைந்திருக்கிறது; வாழ்வும் இனிக்கிறது.

இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் காண்போம்:

தேன்சிட்டும் அறிவியல் ஆசிரியரும்

ஒரு பள்ளியின் அறிவியல் ஆசிரியருக்குத் தலைமை ஆசிரியரிடமிருந்து திடீரென ஓர் அழைப்பு வந்தது. "பறவைகளைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் அல்லவா? உடனே ஒரு வலையோ அல்லது கூண்டோ எடுத்துக்கொண்டு இங்கே வாருங்கள்" என்றார் தலைமை ஆசிரியர்.

"இது எதற்கு?" என்ற குழப்பத்துடனேயே சென்றார் அறிவியல் ஆசிரியர். அங்கே தலைமை ஆசிரியர் ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த வகுப்பறைக்குள் ஒரு தேன்சிட்டு குருவி நுழைந்து, இனிமையாகப் பாடியபடி சுற்றிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே உள்ளே வந்துவிட்ட அந்தப் பறவைக்கு, வெளியே போகத் தெரியவில்லை. இதைப் பார்த்த மாணவர்களின் கவனம் சிதறியதால், பாடம் நடத்த முடியவில்லை.

"இதைப் பிடித்து வெளியே விடுங்கள்" என்றார் தலைமை ஆசிரியர். அதற்கு அறிவியல் ஆசிரியர், "இதற்கு ஏன் சிரமப்பட வேண்டும்? தேன்சிட்டுகளுக்குச் சிவப்பு வண்ணம் மிகவும் பிடிக்கும். வாசல் கதவைத் திறந்து வைத்து, அங்கே ஒரு சிவப்புத் துணியையோ அல்லது அட்டையையோ வைத்தால் அது தானாக வெளியே போய்விடும்" என்றார்.

எதிர்பாராத திருப்பம்

அதேபோல ஒரு சிவப்புத் துணியை வாசலில் வைத்தார்கள். ஆனால், அந்தக் குருவி வெளியே போகவில்லை; மாறாக, அந்த நிறத்தால் ஈர்க்கப்பட்டு வெளியிலிருந்து இன்னும் ஏராளமான குருவிகள் வகுப்பறைக்குள் வந்துவிட்டன! குழந்தைகள் உற்சாகமாக அவற்றை ரசிக்க ஆரம்பித்தனர். தலைமை ஆசிரியர் திகைத்துப் போனார்.

அறிவியல் ஆசிரியர் உடனே குறுக்கிட்டு, "ஐயா, உங்கள் ஆங்கிலப் பாட வேளை முடிந்துவிட்டது" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார். பின் குழந்தைகளிடம், "இப்போது நாம் பறவைகளைப் பற்றிப் படிக்கலாமா?" என்று கேட்டபடி, அங்கிருந்த குருவிகளையே பாடமாக வைத்து வகுப்பு நடத்த ஆரம்பித்தார்.

நாம் கற்க வேண்டிய பாடம்

வாழ்க்கையில் நாம் எதிர்பாராதவை நிகழும்போது, அவற்றை வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் மோசமான நிகழ்வுகள் நம்மை நிலை குலைய வைக்கலாம். ஆனால் பயம், கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள் அதிலிருந்து மீண்டு வர உதவாது. "இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பது எப்படி?" அல்லது "இதை நமக்குச் சாதகமாக மாற்றுவது எப்படி?" எனச் சிந்தித்தால் வெற்றியும் முன்னேற்றமும் நிச்சயம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கைப் பாதையில் வெற்றி பெற: விவேகம், நிதானம், தன்னம்பிக்கை!
School

வெற்றிக்கான சில வழிகள்:

  • நிதானம்: கோபம் ஏற்படும் சூழலில் உடனடியாக ஆத்திரப்படாமல், நிதானமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

  • நேர்மறைச் சிந்தனை: எதிர்பாராத ஒன்று நடந்துவிட்டால், அது மோசமான விளைவையே தரும் என முன்கூட்டியே முடிவு செய்யக் கூடாது. அதிலும் ஒரு நன்மை இருக்கலாம் என யோசிக்க வேண்டும்.

  • தன்னம்பிக்கை: எல்லாவற்றிற்கும் மேலாக, எதையும் சமாளிக்கும் திறமை நமக்கு இருப்பதாகத் தீவிரமாக நம்ப வேண்டும்.

தடையின்றி வெற்றி பெற, மாற்றங்களை ஏற்றுக்கொண்டு முன்னேறுவதே சிறந்த வழி!

மாற்றங்களை வரவேற்போம்! நலமுடன் வாழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com