
தமது வாழ்வு, வேலை மற்றும் தொழில் போன்றவற்றில் வளர்ச்சிகாண விரும்பும் மனிதர்கள் சில நபர்களின் நட்பை தவிர்த்தே ஆகவேண்டும். அவர்கள் யார்? ஏன் அவர்களைத் தவிர்க்கவேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
1. எதிர்மறைக் கண்ணோட்டம் உள்ளவர்கள்;
எதிர்மறைக் கண்ணோட்டம் உள்ளவர்கள் எப்போதும் எதிர்மறையான கருத்துக்களை பேசுவதும் செயல் படுவதுமாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் நல்லவற்றைப் பார்க்காமல், குற்றம் குறை கண்டுபிடித்து எதிர்மறையாகவே பேசுவார்கள். இவர்களுடன் தொடர்பில் இருக்கும்போது லட்சியவாதிகளின் கனவுகளை சிதைக்கவும், அவற்றை ஒன்றும் இல்லாமல் ஆக்கவும் செய்து விடுவார்கள். தொடர்ந்து எதிர்மறைப் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்கள் மூலம் ஒருவரை செயல்படவிடாமல் தடுப்பார்கள். எனவே இவர்களை விலக்கி வைப்பது நல்லது.
2. காலத்தை வீணடிப்பவர்கள்;
வீணே காலத்தைக் கழிக்கும் நபர்கள் தானும் உருப்படியாக எதுவும் செய்யாமல் பிறரையும் செயல்பட விடாமல் தடுக்கும் ஆற்றல் மிக்கவர்கள். பிறருடைய தனிப்பட்ட எல்லைகளை மதிக்காமல் அவர்களின் நேரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். நேரிலும், ஃபோனிலும் தேவையேயின்றி, மணிக்கணக்கில் கதையளப்பதும், வம்பு பேசுவதுமாக பிறரின் நேரத்தை வீணடித்து விடுவார்கள்.
3. கம்போர்ட் சோனில் இருப்பவர்கள்;
சிலர் எந்த விதமான ரிஸ்க்கும் எடுக்காமல் தங்களுக்கு உகந்த கம்போர்ட் சோன் எனப்படும் தெரிந்த, பழகிய இடத்திலேயே வளைய வருவார்கள். இவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், புதிய இடங்களில் பணிபுரியவும் மாட்டார்கள். பிறரையும் அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து, மனதை மாற்றி விடுவார்கள். இப்படிப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருக்கும்போது ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சி தடுக்கப்பட்டு விடும். எனவே இவர்களைத் தவிர்க்கவேண்டும்.
4. வெறித்தனமாக சாதிக்கத் துடிப்பவர்கள்;
எப்போதும் வாழ்க்கையில் லட்சியம் ஒன்று வேண்டும். ஆனால் அதற்காக அதிகமாக சாதிக்க வேண்டும் என்று நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை உருவாக்கும் ஆசாமிகள் தனக்குள் மனஅழுத்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்திக் கொள்பவர்கள். பிறருக்குள்ளும் அதை விதைப்பார்கள். எனவே அவர்களது அறிவுரையை கேட்காமல் தனது சொந்த வேகத்தையும் தனக்கான பாதையையும் ஒருவர் தீர்மானிப்பது அவசியம்.
5. வதந்தி பரப்புபவர்கள்;
பிறரை பற்றி எப்போதும் மோசமாக விமர்சித்து வதந்தியை பரப்புபவர்களுடன் பழகுவது எதிர்மறையான எண்ணங்களுக்கு வழி வகுத்து விடும். தனிப்பட்ட இலக்கங்களில் இருந்து திசை திருப்ப வைக்கும். வதந்தி பரப்புவது தனிப்பட்ட வளர்ச்சி அல்லது குண நல வளர்ச்சிக்கு சாதகமாக இருக்காது. மேலும் நல்ல பெயரையும் பெற்றுத் தராது.
6. குறைத்து மதிப்பிடுபவர்கள்;
எப்போதும் தன்னை உயர்த்தியும் பிறரை மட்டம் தட்டியும் குறைத்து மதிப்பிடும் ஆசாமிகள் இருக்கிறார்கள். பிறர் சாதனையைக் குறிய செயல்களை செய்தாலும் அதைப் பாராட்டாமல் அவற்றைக் குறைத்து மதிப்பிட்டு தேவையில்லாத மன சஞ்சலத்திற்கு ஆளாக்குவார்கள். சுய மரியாதையைச் சிதைத்து அவர்களது மன நிம்மதியையும் கெடுக்கிறார்கள்.
7. கனவு கொலையாளிகள்;
இந்த மக்கள் எதார்த்தம் என்ற பெயரில் தனது மற்றும் பிறருடைய கனவுகளை சிதைக்கிறார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற ஆசையையும் இலக்கையும் அழிக்கிறார்கள். இதனால் ஒருவருடைய தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் ஆசைகள், இலக்கு போன்றவை நசுக்கப்பட்டுவிடும். எனவே மிக கவனமாக இருந்து இந்த ஏழு வகையான மனிதர்களை வாழ்வில் இருந்து விலக்கி வைத்து விட்டால் ஒருவர் தன் வாழ்வில் முன்னேறுவது உறுதி.