மாவீரர் அலெக்ஸாண்டரின் பொன்மொழிகள்!

Mottoes of Alexander the Great!
Alexander...
Published on

லகின் பெரும் பகுதியை ஆண்ட மாமன்னன் அலெக்சாண்டர்தான் பங்கேற்ற எந்த போரிலும் தோல்வி அடையாத மாவீரன். அரிஸ்டாட்டிலிடம் கல்வி பயின்ற புத்திசாலி மாணவன் இவர்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல் சிறுவயதிலேயே எதற்கும் அஞ்சாதவர். யாராலும் அடக்க முடியாத குதிரையை அடக்கி அந்த குதிரையை தன் தந்தையிடமிருந்து பரிசாகப் பெற்றவர். பூசிஃபலாஸ் எனும் அந்த குதிரைதான் அவரின் அனைத்து போர்களிலும் அவருக்கு துணையாக இருந்தது.

அவரது பொன்மொழிகள்:

பத்துகளை எதிர்கொள்ளாமல் உயர்ந்த லட்சியங்களை ஒருபோதும் அடைய முடியாது.

முயற்சி செய்பவருக்கு சாத்தியமற்றது என்று எதுவும் இல்லை.

ன் உடலை புதைத்து எந்த நினைவுச் சின்னத்தையும் கட்டாதீர்கள். என் கைகளை வெளியே வைத்திருங்கள். அதனால் உலகத்தையே வென்றவர் இறந்தபோது அவர் கையில் எதுவுமே இல்லை என்று மக்களுக்கு தெரியட்டும்.

ரு ஆட்டால் வழி நடத்தப்படும் சிங்கங்களின் படையைப் பார்த்து நான் பயப்படவில்லை. ஆனால் ஒரு சிங்கத்தால் வழிநடத்தப்படும் ஆடுகளின் படையைப் பார்த்துதான் பயப்படுகிறேன்.

நாம் நமது வாளால் பெற்ற எந்த உடமையாக இருந்தாலும் அது நிச்சயமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்க முடியாது. ஆனால் இரக்கம் மற்றும் அடக்கத்தால் பெறப்பட்ட அன்பு நிச்சயமானது மற்றும் நிரந்தரமானது.

ரு நீண்ட இழிவான வாழ்க்கையை விட ஒரு பெருமைக்குரிய குறுகிய வாழ்க்கையை வாழ நான் விரும்புகிறேன்.

இதையும் படியுங்கள்:
பொறுமை இருந்தால் எதிலும் வெற்றிதான்!
Mottoes of Alexander the Great!

நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்குத் தெரியாது. ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்.

லகிற்கு அரசனாக இருக்க வேண்டுமானால் முதலில் உன் மனதுக்கு சேவகனாக இருக்க வேண்டும்.

னக்கு சிரிப்பதற்கும் பேசுவதற்கும் நேரம் இல்லையென்றால் நீ உன் வாழ்வில் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்.

யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். இல்லையென்றால் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க மாட்டீர்கள்.

முயற்சி செய்யத் துணிந்தவன் மலையையும் நகர்த்தி விடுவான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com