ஸ்ரீ ரமண மகரிஷியின் பொன்மொழிகள்!

Mottoes of Sri Ramana Maharishi!
Ramana maharishi
Published on

ஸ்ரீ ரமணரின் பெருமையை உணர்ந்து முதன்முதலாக அவருக்கு ரிஷி பட்டம் கொடுத்து ரமண மகரிஷி என்று அழைத்தவர் காவிய கண்ட கணபதி அவர்கள்.

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம்தான். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலை பாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்த பயனும் இல்லை.

கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால் எளிதில் காணலாம்.

மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும்.

எவ்வளவுக்கு எவ்வளவு பணிந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நன்மை உண்டு.

முயற்சி செய்து மனத்தை எண்ணங்களில் இருந்து விடுவிக்க வேண்டும். அந்த நிலையில் தொடர்ந்து நாம் இருப்போமேயானால் அதுவே நம் சாதனைகளுக்கு வழி வகுக்கும்.

தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. ஒவ்வொருவருடைய மனப்பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளை கைக்கொள்ள வேண்டும்.

கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே. இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.

உலகை கனவாக மட்டுமே கருதவேண்டும். மனதை வெளி விஷயங்களிலும் எண்ணங்களாலும் திசை திருப்ப விடக்கூடாது.

தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளை சேர்த்துக் கொள்ளாதீர்கள். தேவையற்ற சுமைகளை சுமக்காமல் இருங்கள்.

குருவே ஈஸ்வரன். ஈஸ்வரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

சாதனைக்கு தேவை சத்துவ உணவும் நல்ல சத்சங்கமுமே! மாமிச உணவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி வேறு விதிகள் என்று எதுவும் இல்லை.

இதையும் படியுங்கள்:
எங்கும் நிறைந்திருக்கும் மகிழ்ச்சி..!
Mottoes of Sri Ramana Maharishi!

நல்லவர் நட்பை தேடிச்செல்லுங்கள். அதனால் மனதில் சூழ்ந்திருக்கும் அறியாமை அகன்றுவிடும்.

எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றாலும் கடவுளை சிந்தித்திருப்பவனின் வாழ்வில் சுமை என்பது சிறிதும் இருக்காது.

இறைவனை உணர்வதற்கு நாம் செய்ய வேண்டியது அமைதியாக இருப்பதுதான். அமைதியாக இருப்பதைப்போல சிரமமான செயல் வேறு எதுவும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com