MS Dhoni Quotes: மகேந்திர சிங் தோனி கூறிய 15 பொன்மொழிகள்!

M.S.Dhoni
M.S.Dhoni
Published on

கிரிக்கெட் என்றால், பலருக்கும் முதலில் ஞாபகம் வரும் ஒரு வீரர் எம்.எஸ்.தோனி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு இந்திய வீரர் தோனி. தோனி சென்னை அணிக்கு கிடைத்தது வரம் என்றே சொல்ல வேண்டும். அதனால்தான், சென்னை அணி பலம் வாய்ந்த அணியாக இருந்து வருகிறது.

அந்தவகையில் தோனி கூறிய 15 பொன்மொழிகள் பற்றி பார்ப்போம்.

1.  போராடி கிடைக்கும் தோல்விக்கூட கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான்.

2.  உங்களின் ஒரு வெற்றி, ஆயிரம் விமர்சனங்களுக்கான முற்றுப்புள்ளி.

3.  ஒரு செயலை செய்ய வேண்டுமென்றால், செய்து முடித்துவிட வேண்டும், வேறு எதைப் பற்றியும் சிந்திக்க கூடாது.

4.   நீங்கள் செய்யும் தவறுகளும் சரியானவையே. அவற்றை மீண்டும் நீங்கள் செய்யாமல் இருந்தால்.

5.  உங்களை கேள்வி கேட்கும் தகுதி யாருக்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால், பதில் சொல்லும் உரிமை உங்களுக்கு மட்டுமே இருக்கிறது.

6.  உங்கள் தனித்திறன் என்னவோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்களுடையதாகிவிடும்.

7.   நான் எதற்கும் வருத்தப்படுவதில்லை. எது உங்களை கொல்லாதோ அது உங்களை வலுப்படுத்தும்.

8.   நூறு சதவிகித உழைப்பை கொடுத்தப் பின்னர், அதன் முடிவைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

9.  அமைதியாக நடவடிக்கை எடுங்கள். சிங்கம் தாக்கும்போது சத்தம் இடுவது இல்லை.

10. நீங்கள் உண்மையான கனவு என்று ஒன்றை வைத்திருக்காவிட்டால், உங்களுக்கு உந்துதல் என்ற ஒன்று இருக்காது. உங்களுக்கான இலக்கு என்னவென்பதே தெரியாமல் போய்விடும்.

இதையும் படியுங்கள்:
Thalapathy Vijay Quotes: தளபதி விஜய் கூறிய 15 மேற்கோள்கள்!
M.S.Dhoni

11. நாம் கற்றுக்கொள்ளவேண்டியது மிக அவசியம், அப்போதுதான் மீண்டும் அதே தவறை செய்யாமல் இருப்போம்; ஏனெனில் நடந்தது நடந்தவைதான்.

12. கற்றுக்கொள்வது முக்கியம். பயத்தை மறந்துவிடு. ஏதாவது வித்தியாசமாக செய்.

13. திட்டம் சரியில்லை என்றால், திட்டத்தை மாற்றுங்கள். இலக்கை அல்ல.

14. கடைசி நிமிடத்தில் கூட எதாவது அதிசயம் நடக்கலாம். அதனால், தன்னம்பிக்கையை இழக்காதே.

15. வெற்றியாளர்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் கிடையாது. முதலில் கடின உழைப்பை போடுகிறார்கள். பின் வெற்றி அடைகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com