பண்பை உயர்த்தி காட்டுவது எது தெரியுமா?

அண்ணாவுடன் பெரியார்...
அண்ணாவுடன் பெரியார்...
Published on

சிலருக்கு பாராட்டுவது என்பது ஒரு தனி குணமாக அமைந்துவிடும். அவர்களால் மற்றவர்கள் செய்யும் எந்த ஒரு செயலையும் (வித்தியாசமாக இருந்தால்)  பாராட்டாமல் இருக்க முடியாது. என் உறவினர் ஒருவர் அப்படித்தான். பூஜை அறையை அழகாக அலங்கரித்து கோலமிட்டு இருந்தால் போதும். அன்று முழுவதும் அந்தப் பெண்ணை பாராட்டுவார். வித்தியாசமான சமையலை ருசித்துவிட்டால் போதும். சொல்லவே வேண்டாம். அப்படி ஒரு சந்தோஷம் ஏற்பட்டுவிடும். மனம் குளிர பாராட்டுவார். 

இன்னும் சிலர் எவ்வளவுதான் அழகாக வேலைகளை செய்து இருந்தாலும், சமைத்து இருந்தாலும் லேசாக சிரிப்பார்கள். ஆனால் வாய் திறந்து ஒரு வார்த்தையை பேசிவிட மாட்டார்கள் அது ஒரு விதம். பனைமரம், தென்னை மரம், வாழைமரம் மக்கள் பழகும் முறைகளும் மூன்று விதம் என்பது போல்தான் இதுவும். 

இதில் மிகப்பெரியவர்கள் பாராட்டுவதும் அதைப் பெறுபவர்கள் அடக்கமாக நடந்து கொள்வதும் எல்லோர் மனதிலும் எப்பொழுதும் நிலைத்து நிற்கும் அருமையான குணம். பாராட்டு என்றாலே இந்த நிகழ்வுதான் ஞாபகத்திற்கு வரும். அதுபோல் இருக்கும் அவர்களின் பண்புகள். இந்தப் பண்புகளை உற்று நோக்கினால் 'கற்றோரை கற்றாரே காமுறுவர், என்பதற்கு சாலப் பொருத்தமாக இருக்கும்.

ஒருமுறை குடியரசு பத்திரிக்கையில் அறிஞர் அண்ணா பணியாற்றியபோது எழுதிய முதல் கட்டுரையைப் படித்த பெரியார், அண்ணாவை நேரில் பாராட்ட வேண்டும் என்பதற்காக 60 வயதை கடந்த நிலையிலும் தனது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்த அண்ணாவை தேடிக்கொண்டு மாடிக்குச் சென்றிருக்கிறார். 

அண்ணா எழுதிய கட்டுரையை மனதாரப் பாராட்டி பேசினாராம்.

கட்டுரையைப் பாராட்டி பேசவா மூன்று மாடி ஏறி வந்தீர்கள்? நான் கீழே வரும்போது சொல்லி இருக்கலாமே என்று அடக்கத்துடன் கூறினாராம் அண்ணா.

இதையும் படியுங்கள்:
மற்றவர்களுக்காக வாழாமல் உங்களுக்காக வாழுங்கள்...!
அண்ணாவுடன் பெரியார்...

எனக்கு உடனே பாராட்ட வேண்டும்போல் இருந்தது. அதனால்தான் வந்தேன் என்றாராம் பெரியார். 

இதுதான் பாராட்டு என்பது. அந்தப் பாராட்டை பெறுபவர்கள் எப்படி அடக்கமாக இருக்க வேண்டும் என்பதையும், இந்தக் கதையின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? நாமும் பிறர் நம்மை பாராட்டும் பொழுது அடக்கமாக இருப்போம். அதேபோல் பிறர் செய்யும் நற்செயல்களை கண்டுவிட்டால் கரம் பற்றி மனதார பொய் கலவாது நேர்மையோடு பாராட்டுவதை பண்பாக கொள்வோம்!

அந்தப் பாராட்டுத்தான் மனித முன்னேற்றத்திற்கு ஊக்கமருந்து என்பதை அனைவருக்கும் உணர வைப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com