
படிப்பது சிரமம். இந்த NEET Examமிகக்கடினம் என்று நினைக்கும் சமூகங்களுக்கு முன்னால், என்னால் முடியும், பிறருக்கு மருத்துவம் பார்ப்பதே எனது அறப்பணி என்று நினைத்து படிப்புக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் ஆகச் சிறந்தவர்கள்தான்..! தோல்விகள் என்பதே எனக்கு இல்லை.. நம்பிக்கையும், விடாமுயற்சியுமே எனது எல்லை. படிப்பு ஒன்றே பலம் அதில் குறிக்கோள் ஒன்றே எனது குணம்.
தடைகளும் படிக்கற்களாகும், உனது உழைப்பையும், கடின விடா முயற்சியையும் பார்த்து..!
பயந்து செல்வதற்கு படிப்பு என்ன பாதாளமா?, துணிந்து செல்ல வேண்டும் நம் கனவை எட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் வரை.
மற்றவர்களுக்காக சேவை செய்ய என்னும் உன்னுடைய உயர்ந்த உள்ளத்துக்கு முன்னால், இந்த நீட் ஒரு தித்திப்பான ஸ்வீட்..!
கடல் போல் படிப்பதற்கு உயிரியலும்,
மலைப் போல் படிப்பதற்கு தாவரவியலும்,
கோபுரம் போல் படிப்பதற்கு இயற்பியலும்,
குன்று போல் படிப்பதற்கு வேதியலும், இருந்தாலும் கூட, இறுதியில் மனம் போல் படிப்பதற்கு நீங்களும் உங்கள் விடாமுயற்சியும்தான் இருக்க வேண்டும்..!
தோல்விகளுக்கு தற்கொலைகள் காரணமாகிவிட்டால், அது தோல்விக்கு அசிங்கம். தற்கொலைக்கு இடம் இல்லை என்று நினைத்துவிட்டால், தோல்விக்கு அது பெருமை.. தோல்விகள் வாழ்வின் கதவை திறக்கும் சாவிகள்.
படிப்பில் வெற்றியும், தோல்வியும் படைத்தவனை பொறுத்து அல்ல.., படிப்பவனின் உறுதியும், விடாமுயற்சியும் பொருத்து.
சவால்கள்தான் வாழ்க்கையை சுவாரசியமாகின்றன. அவற்றை சமாளிப்பதுதான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது.
நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து படிக்கத் தொடங்குங்கள், உங்களிடம் இருப்பதை பயன்படுத்துங்கள், உங்களால் முடிந்ததை இல்லை.. இலக்குகளை முடிக்கும்வரை முயற்சி செய்யுங்கள்.!
வாழ்வதற்கு ஒரு காரணம் உள்ளவர், எந்த ஒரு வலியையும் தாங்கிக் கொள்ள முடியும்.
வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல, மகிழ்ச்சியே வெற்றிக்கான திறவுகோல். முழு மனதோடு தன்னை ஈடுபடுத்தி இன்பத்தோடு படிக்க வேண்டும்.
உறங்காத விழிகளுக்கும், மரத்துப்போன விரல்களுக்கும், மருத்துவர் ஆகவேண்டும் என்கிற கனவு தீனி போட்டுக்கொண்டே இருக்கிறது..! ஒரு நாள் நிச்சயம் நான் மருத்துவராகுவேன்..!
மேலே கூறிய இந்த ஊக்க வரிகளை ஊக்கமாக எடுத்துக்கொண்டு, தோல்விகளை பார்த்து துவண்டு போகாமல், துணிந்து சென்று நம் இலக்கின் கரையை கடக்க வேண்டும்..!