
நாம் வாழும் வாழ்க்கையில் நல்லது, கெட்டது, தேவையானது தேவையில்லாதது, போன்ற இனங்களை புாிந்துகொண்டு வாழவேண்டும்.
நம்மோடு பழகி நமது கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து குடும்பத்தை ஒரு கட்டுக்கோப்பான பாதையில் கொண்டு செல்ல, நமது தாய் தந்தையரோ, அல்லது நமது மனைவியோ துணையிருப்பாா்கள். அதனால்தான் நமது இஷ்டத்திற்கு நாம் சில காாியங்களை எடுத்தேன், கவிழ்த்தேன் என அவசர கதியில் அள்ளித்தெளித்த கோலம்போல தனிப்பட்ட முறையில் செய்துவிடக்கூடாது. அதேபோல சிலரைமுழுவதுமாக நம்பி மோசம் போய் விடக்கூடாது. அதற்காக அனைவரையும் சந்தேகப்படவும் கூடாது.
யாா் யாா் எப்படிப்பட்டவர் எந்த வகையான நோக்கத்துடன் நம்மிடம் பழகுகிறாா்கள், என புாிந்து வைத்துக்கொள்ள வேண்டும். நமது அந்தரங்கத்தை பகிா்ந்து கொள்வதற்கென சில உறவுகள் மற்றும் நட்புகளை வளா்த்துக்கொள்ளவேண்டும்.
நம்மீதும், நம் வளா்ச்சியின் மீதும், அக்கறைகொண்டவர்கள் போல இருமுகம் கொண்டவர்களை நாம் அடையாளம் கண்டு பழகவேண்டும்.
நம்மிடமும், நமது குடும்பத்தின்மீதும் அதிக உறவு வைத்துக் கொள்ளாமல் பழகுவதுபோல பழகி நமது வளா்ச்சியை நோட்டமிடும் நபர்களும் உண்டு.
இதைத்தான் கவிஞர் தனது பாடலில் "மனிதன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா"! என குறிப்பிட்டிருப்பாா்.
நம்மைக் கண்டும் காணமல் போகிற உறவுகள் நம்மிடம் ஓரளவு பணம் சோ்ந்ததும் ஒட்டி உறவாட வருவாா்கள். உடம்பில் தெம்பு இருக்கும்போதே வருவாய் ஈட்டுவது நல்லது.
இந்த பணத்தை இதில் முதலீடு செய்யலாம், அதில் கூடுதல் வருமானம் பாா்க்கலாம்,வ ங்கியில்போட்டால் வட்டிகுறைவு, வெளியில் வட்டிக்கு கொடுத்தால் நல்ல சில்லறை தேறும், ஓகோ என வந்துவிடலாம், ஓரே வருடத்தில் தொகை இரட்டிப்பு ஆகிவிடும் என நம்மை மூளைச்சலவை செய்யும் நபர்களும் உண்டு.
அப்போது நாம் அவரிடம் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. அந்த நேரத்தில் நாம் சொல்லவேண்டிய வாா்த்தையானது அவரை யோசிக்க வைத்துவிடும்.
அதாவது நான் எதைச்செய்தாலும் என் தகப்பனாா் மற்றும் மனைவியைக் கேட்காமல் செய்யமாட்டேன், என சொல்வதே சாலச்சிறந்தது.
அதேபோல என்னிடம் பைனான்ஸ் விஷயமாய் கேட்கும் தொகை விபரம் உங்கள் மனைவிக்கு தொியுமா என நாம் கேட்டாலே பாா்ட்டி கொஞ்சம் உஷாராகிவிடுவதும் உண்டு. இங்குதான் நமது சமயோஜித புத்தி வேலை செய்யவேண்டும்.
இதற்கு எடுத்துக்காட்டாக ஈசாப் நீதிக்கதைகளில் ஒரு கதை வரும்.
ஒரு இரத்தின வியாபாாி தன் வீட்டில் பல பிராணிகளை வளா்த்துவந்தாா். அதில் ஒரு வேட்டை நாயும், சேவலும் நண்பர்கள். இருவரும் சோ்ந்து முதலாளிக்கு தொியாமல் ஊா் சுற்றிப்பாா்க்கபோகும். இந்நிலையில் நெடுந்தொலைவாகிவிடவே, இரவு நேரமாகிவிட்டது. ஒருபொிய ஆலமரத்தடிக்கு வந்தன.
அப்போது சேவல் வேட்டை நாயிடம், இருட்டுவேளை நாம் இங்கே தங்கிவிடுவோம். இந்த மரத்தின் மீது மேலே நான் அமர்ந்து கொள்கிறேன், நீ மரத்தின் கீழே உள்ள பொிய பொந்தில் தங்கிக்கொள், விடிந்ததும் நாம் கிளம்பலாம் என சொல்ல அப்படியே இரவு நேரம் போனது.
விடிவதற்குள் சேவல் தன் வேலையைத் துவங்கிவிட்டது. "கொக்கரக்கோ"என கூவியது.
அப்போது அங்கே வந்த ஒரு நரி சேவலைப் பாா்த்து நீ இந்த ஊருக்கு புதுசா? ஏன் எங்கிருந்து வந்தாய் நீ இறங்கி வா உன்னை பத்திரமாக நான் உனது ஊாில் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன் என சொல்லவே நரியின் தந்திரம் புாிந்த சேவலோ வேண்டாம் எனது தோழன் வேட்டைநாய் கீழே பொந்தில் உறங்குகிறது என சொல்லிதும், நாயானது சோம்பல் முறித்து எழுந்து வந்து நரியைப் பாா்த்தது.
பயந்துபோன நரியோ பதுங்கியபடியே அந்த இடத்தை காலி செய்ததாம். அதேபோல நமது வளா்ச்சி கண்டு நமது பணத்தை வேட்டையாடி நம்மை சந்தியில் விடலாம் என நினைக்கும் சிலரிடம் நாம் எச்சரிக்கையாய் இருப்பதே நல்லது என்பதோடு வீட்டில் உள்ளவர்களை கலந்து பேசாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என எந்த செயலிலும் நிதானமில்லாமல் அகலக்கால் வைத்தால் நஷ்டம் நமக்கு, லாபம் நம்மை ஏமாற்றியவருக்கே, புாிகிறதோ அன்பர்களே"!