இந்திய சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி பற்றி அறியாத இந்திய மக்கள் இருக்கவே மாட்டார்கள். பல சவால்களை சந்தித்து ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி நின்றவர், இவர். ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று, வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று படையை திரட்டினார். இவர் தனது வாழ்வில் மக்களுக்கு கூறிய ஆகச்சிறந்த 15 பொன்மொழிகளைப் பற்றி பார்ப்போம்.
1. வெறும் அரசியல் சுதந்திரத்தால் தேசம் திருப்தி அடையாது.
2. வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம்.
3. ஒரு நபர் ஒரு யோசனைக்காக இறக்கலாம், ஆனால் அந்த யோசனை, அவரது மரணத்திற்குப் பிறகு, ஆயிரம் உயிர்களில் அவதாரம் எடுக்கும்
4. கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
5. போராட்டம் இல்லாத வாழ்க்கை போர் (Bore) அடித்து விடும்.
6. முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்.
7. உண்மையான நண்பனாக இரு, அல்லது உண்மையான பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே.
8. வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது.
9. உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம்...!
10. இறைவன் நமக்கு செல்வத்தை கொடுக்கவில்லை என்று கவலைப்படாதே. நமக்கு உயிர் என்னும் பெரிய செல்வத்தை கொடுத்திருக்கிறான். அதனைக்கொண்டு எதையும் சாதிக்கலாம்.
11. சாதிக்க இயலாததை கூட சாதிக்க இயலும், தன்னம்பிக்கை என்னும் மனோ சக்தியால்.
12. வரலாற்றில் எந்த உண்மையான மாற்றமும் விவாதங்களால் அடையப்படுவதில்லை.
13. தவறு செய்யும் சுதந்திரம்கூட இல்லை என்றால், சுதந்திரம் மதிப்புக்குரியது அல்ல.
14. உரிமைகளின் உண்மையான ஆதாரம் கடமையாகும். நாம் அனைவரும் நமது கடமைகளை நிறைவேற்றினால், உரிமைகள் தேடுவதற்கு வெகு தொலைவில் இருக்காது.
15. சட்டைப்பையில் பேனாவை வை, இடுப்பில் கத்தியை வை. அந்தச் சூழலுக்கு எது தேவையோ அதை பயன்படுத்து.
நேதாஜி, இந்திய சுதந்திரத்திற்கான போராட்ட பயணத்தின்போது இந்த பொன்மொழிகளை கூறினார். மறந்துவிடாதீர்கள், வாழ்க்கையும் ஒரு போராட்டம் என்பதை. ஆகையால், இந்த பொன்மொழிகளும் உங்கள் வாழ்வில் எங்கேனும் உதவி செய்யும்.