உதவி செய்தவர்களுக்கு எக்காலத்திலும் துரோகம் செய்யக்கூடாது!

Never betray those who have helped!
Never betray those who have helped!Image Credits: Freepik
Published on

ம்முடைய கஷ்டக்காலத்தில் நமக்கு உதவி செய்த நபருக்கு எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் துரோகம் என்பதை செய்யக்கூடாது. நமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அவரிடமிருந்து விலகி வந்துவிடுவது சிறந்தது. ஆனால், துரோகியாக மாறுவது ஒருநாளும் சிறந்த செயலாகாது. இதை தெளிவாக புரிந்துக்கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படியுங்கள்.

ஒரு அடர்ந்த காட்டிலே ஒரு சிங்கம் மனிதன் ஒருவனை பசியோடு துரத்திக்கொண்டு வந்ததாம். பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பக்கத்தில் இருந்த மரம் ஒன்றில் அந்த மனிதன் ஏறிக்கொண்டான்.

இதைப் பார்த்த அந்த மரத்தில் இருந்த குரங்கு சொன்னது, ‘ஒன்றும் பயப்படாதே! சிங்கத்திற்கு மரம் ஏற தெரியாது. அது இங்கிருந்து போன பிறகு சொல்கிறேன். அதன் பிறகு இங்கிருந்து நீ கிளம்பி செல்லலாம்’ என்று கூறியது.

ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த குரங்கு அசந்து மரத்திலேயே தூங்கிவிடுகிறது. இப்போது கீழேயிருந்த சிங்கம் மனிதனைப் பார்த்து, ‘அந்த குரங்கை மட்டும் கீழே தள்ளிவிட்டால், உன்னை நான் உயிரோடு விட்டுவிடுகிறேன் என்று கூறியதாம். இதைக்கேட்டு பயத்தில் அந்த மனிதனும் குரங்கை கீழே தள்ளி விட்டுவிடுகிறான்.

இப்போது கீழே விழுந்த குரங்கை பார்த்து அந்த சிங்கம் சிரித்துக்கொண்டே, 'பார்த்தாயா? உதவி செய்த உனக்கே அந்த மனிதன் துரோகம் செய்துவிட்டான். நான் உன்னை எதுவுமே செய்ய மாட்டேன். நீ மேலே சென்று அவனை கீழே தள்ளிவிட்டுவிடு' என்று சிங்கம் கூறியது. அதற்கு அந்த குரங்கு என்ன சொன்னது தெரியுமா? 'நம்பி வந்தவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதற்கு நான் ஒன்றும் மனிதன் இல்லை' என்று பெருமையாக கூறியதாம்.

இதையும் படியுங்கள்:
உலகம் முழுவதும் வைரலாகி வரும் செம க்யூட்டான பேபி ஹிப்போ!
Never betray those who have helped!

இந்த கதையில் வரும் மனிதனைப்போல சந்தர்ப்பம் கிடைத்தால் நமக்கு உதவி செய்தவர்களுக்கே துரோகம் செய்யும் இழிவான குணத்தை விடுத்து குரங்கைப்போல, நம் மீது நம்பிக்கை வைத்து நம்மை நம்பி வந்தவர்களுக்கு எக்காலத்திலும் துரோகம் செய்துவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு வாழ வேண்டும். இதைப் புரிந்துக்கொண்டு நடந்தால் நிச்சயம் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com